From naga ganesan@... Thu Feb 28 04:33:42 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 28 Feb 2002 12:33:42 -0000
Received: (qmail 45831 invoked from network); 28 Feb 2002 12:33:42 -0000
Received: from unknown (216.115.97.172) by m5.grp.snv.yahoo.com with QMQP; 28 Feb 2002 12:33:42 -0000
Received: from unknown (HELO n32.groups.yahoo.com) (216.115.96.82) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 28 Feb 2002 12:33:42 -0000
Received: from [216.115.96.110] by n32.groups.yahoo.com with NNFMP; 28 Feb 2002 12:33:42 -0000
Date: Thu, 28 Feb 2002 12:33:39 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: ceNTu (Re: caNpai/campai)
Message-ID:
In-Reply-To: <200202280941.PAA07448@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1108
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.24.231
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16320

--- In agathiyar@y..., "Subramanian" wrote:
> திரு.ஹரி எழுதினார்:

செண்டு என்பது ஓர் ஆயுதம். இதைத் தாங்கி நிற்கிறார்
சோழர் கலைப்படிமம் ராஜகோபாலஸ்வாமி. செண்டு என்ற
ஆயுதம் எப்படி இருக்கும் என்பது அறிய மன்னார்குடி
உத்சவர் உதவியதுபற்றி உவேசா கட்டுரை எழுதியிருக்கிறார்.

மதுராபுரி அம்பிகை மாலை பழையது. அதைப் பார்த்தே
லலிதா சகசிரநாமம் தமிழ்செய்த அபிராமிபட்டர்
அந்தாதி யாத்தார். மதுராபுரி அம்பிகை மாலையை
வலையேற்றித் தந்தேன் (மதுரைத் திட்ட வலைக்கண்ணில் காண்க.
கண் - தளம், ஒப்பு: நகக்கண்).

பாண்டியன் மேருமலையைச் செண்டால் அடித்தது திருவிளையாடல்.
பாண்டிய மன்னன் குலசேகரன் பாடினது மதுராபுரிமாலை.
நூற்பயனில் (phalasruti) சொல்லுவான் பெருமையாக:
"வட குன்றைச் செண்டால் அடித்தோன்" என்று தன்னை.
முன்னொர் பெருமையைத் தமக்கேற்றிச் சொன்னதிது.

--------------

செண்டலங்காரர் விறலிவிடுதூது உள்ளது. நூல் முழுதும்
இல்லை. குறைப்பிரதி. மிகவிரசம் ஆனது. அச்சாகியுளது.
விறலி பரத்தையைத் தலைவனுக்குப் புணர்ப்பிப்பவள்
என்று ஏராளமான சங்கப்பாடலில் வரும், அப் பண்டை
மரபை ஒட்டி எழுந்த நூல்கள் இவை.

அன்புடன்,
நா. கணேசன்