From aysh@... Thu Feb 28 08:55:23 2002
Return-Path: X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 28 Feb 2002 16:55:23 -0000
Received: (qmail 7003 invoked from network); 28 Feb 2002 16:55:23 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 28 Feb 2002 16:55:23 -0000
Received: from unknown (HELO webmail1.maa.sify.net) (202.144.76.17) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 28 Feb 2002 16:55:22 -0000
Received: (qmail 5576 invoked from network); 28 Feb 2002 21:39:32 +0530
Received: from unknown (HELO User) (210.214.128.170) by 202.144.76.17 with SMTP; 28 Feb 2002 21:39:32 +0530
To: "Agathiyar@Yahoogroups. Com" Subject: puLianthoppu palani's kAnA songs in Tamil
Date: Thu, 28 Feb 2002 22:28:23 +0530
Message-ID: MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
Importance: Normal
From: "era.murugan achwin" X-Yahoo-Group-Post: member; u=35388564
X-Yahoo-Message-Num: 16323
வட்டமாக உட்கார்ந்து கொண்டு, கஞ்சா புகைத்துக் கொண்டு, ஒருவர்
எடுத்துக் கொடுக்க மற்றவர் தொடுக்க, மாற்றி மாற்றித்
தொடர்ச்சியாக ஒலி ஒப்புமையுடைய சொற்கள் மற்றும் சொற்கட்டுகளைக்
கொண்டு கட்டப்படுவது கானா. மிக இயல்பாக இது நிகழும். பலரின்
கூட்டு வெளிப்பாட்டு நிகழ்வு இது. அவ்விதம் கட்டிப் பாடும் பாடகர்கள்
அந்தந்தப் பகுதியின் பலரும் அறியப்பட்ட கானாப் பாடகர்களாக
மதிக்கப்பட்டு வந்தனர். வருகின்றனர்.
ஆயிரம் விளக்கு செல்வம், சிந்தாதிரிப்பேட்டை நாதன், மயிலை
வேணு, புதூர் செல்வம், கல்லறை குமார், வடபழனி இராமதாசு போன்ற
பல கானாப் பாடகர்கள் சென்னைக் குடிசைப் பகுதி மக்கள் அறிந்தவர்கள்.
இக்கானாப் பாடல்கள் குடிசைப் பகுதிகளில் இறந்தவர்களின் பத்தாவது
நாள் / பதினைந்தாவது நாள் சடங்காக முழு இரவு நிகழ்த்தப்
பெறுகிறது. இதில் புகழ் வாய்ந்தவர் புளியந்தோப்பு பழனி.
சௌந்தர்ராஜன் போல நானும் பாடலே - நம்ம
கண்ணதாசன் போல கவிதை எழுதலே
ஊரு ஊராப் பாடி வாறேன் கூட்டமா - நான்
மாண்டவுடன் யார் பாடுவார் நாட்டமா?
என்ற பாடல் வரிகள் இறப்புச் சடங்கோடு கானாவுக்கு உள்ள உறவைச்
சொல்கின்றன.
(முனைவர் அரசு எழுதிய 'இடுகாட்டு மனிதர்கள் : சென்னை நகர்
சார்ந்த அடித்தள மக்களின் கானாப்பாடல்கள் - ஒரு பார்வை'
கட்டுரையிலிருந்து.
இடம் பெற்ற நூல் 'விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ்க் கதையாடல்களும்'
இந்த subaltern history நூலைத் தொகுத்தவர்கள் அ.மார்க்ஸ்,
நிறப்பிரிகை வேல்சாமி)