From ramnrom@... Thu Feb 28 16:47:25 2002
Return-Path: X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 1 Mar 2002 00:47:24 -0000
Received: (qmail 1925 invoked from network); 1 Mar 2002 00:47:24 -0000
Received: from unknown (216.115.97.171) by m5.grp.snv.yahoo.com with QMQP; 1 Mar 2002 00:47:24 -0000
Received: from unknown (HELO web14202.mail.yahoo.com) (216.136.172.144) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 1 Mar 2002 00:47:24 -0000
Message-ID: <20020301004722.4864.qmail@...>
Received: from [4.35.187.102] by web14202.mail.yahoo.com via HTTP; Thu, 28 Feb 2002 16:47:22 PST
Date: Thu, 28 Feb 2002 16:47:22 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Re: Fwd: Thyagaraja's Kritis in Tamil?
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <00aa01c1c033$fae10300$1c83d6d2@harikris>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 16336
அன்புள்ள ஹரியண்ணா,
நான் கேட்ட கேள்விக்குச் சரியான, உபயோகமான பதிலையும்
கடைசியில் சொல்லி விட்டு இப்படி 'மன்னிக்க வேண்டும் ராமையா. ' என்று
பெரிய வார்த்தைகளையெல்லாம் ஆரம்பத்தில் தூக்கிப் போட்டால் பொடியன்
நான் என்ன செய்வேன்? ;-)
தமிழில் மற்ற எல்லா மடற்குழுக்களை விடவும் இந்த அகத்தியர் குழு
பொலிவுடன் விளங்குவதற்குக் காரணமே உங்களைப் போன்ற சான்றோர்கள் தான்,
பெரியவர்கள் தான், விஷய ஞானம் உள்ளவர்கள் தான், வாழ்க்கையில்
எவ்வளவோ சாதித்தவர்கள் தான்.
ஜேபி போன்ற சித்தர்களும், ஏகப்பட்ட யோகிகளும், கவிஞர்களும்,
அறிஞர்களும், முனைவர்களும் நிறைந்தது நம் அகத்தியர் குழு. வெளியிலே
பெயரையே சொல்லாமல், இன்னும் பல அறிஞர்களும் சகலகலா வல்லுனர்களும்
கூர்ந்து பார்த்திருக்கும் இவ்விடத்தில் என் போன்ற பாமரனை உள்ளே
அனுமதித்திருப்பதே எனக்குப் பெரிய கௌரவம். சர்க்கஸ் கோமாளி
மாதிரி நான் ஏதாவது கலாட்டா பண்ணிக் கலகலப்பாக்கிக் குட்டிக்கரணம்
போட்டுக் கொண்டிருப்பவன். நான் காலிக் குடம் கூட அல்ல. காலி. வெறும்
குக்குடம். குப்பைமேட்டிலிருந்து சில நேரம் உரக்கக் குரல் கொடுத்து
விடுவதால் இப்படி ஆகி விடுகிறது. மன்னியுங்கள்.
மற்றபடி நீங்கள் மடலாடும் முறையெல்லாம் சரி தான். 'ஞாயிற்றுக்
கிழமை சாயுங்காலம் நண்பர்களைச் சந்தித்து உரையாடுவது' தான் வழக்கமான
format. பனிஷ்மெண்டாக இந்த வாரம் சுண்டல், முறுக்கு, தட்டை என் கணக்கு.
இனி நான் சற்று நிதானிப்பேன். யோசிப்பேன். மௌனிப்பேன்.
மன்சுலோனி மர்மமுனு தெலுசுகோ ...!
என்றென்றும் அன்புடன்,
எல்லே ராமையா
--- Hari Krishnan wrote:
>
>
> மன்னிக்க வேண்டும் ராமையா. திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கம்
> எதுவும் இல்லை. எனக்குத்தான் மடலாடும் வகை சரியாகத் தெரியவில்லை.
> விவாதங்கள் சாதாரணமாக ஞாயிற்றுக் கிழமை சாயுங்காலம் நண்பர்களைச்
> சந்தித்து உரையாடுவது போல நடக்கின்றன என்று நான் எண்ணி விட்டேன்.
> கேட்ட கேள்விக்கு மட்டும்தான் பதில் என்பது தெரியாமல் போய்விட்டது.
> அதுவும் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு மட்டும்தான் பதில் என்பது.
>
> தியாகையருடைய தெலுங்கு எப்படிப்பட்டது என்பதைப் பற்றிச் சொல்வதற்கு
> எனக்கு எந்த யோக்கியதையும் கிடையாது. எனக்குத் தெரிந்த ஒரு
> செய்தியைப் பங்கிட்டுக்கொண்டேன் அவ்வளவே. அவரைக் குறைத்துச் சொல்லும்
> நோக்கம் இருந்திருந்தால் பாரதியைத் துணைக்ழைத்திருக்க மாட்டேன்.
> டாக்டரவர்கள் சொல்லியிருப்பதுதான் நான் சொல்ல விழைந்ததும்.
>
> ஸமயாமிகி தகு மாடலாடென.....
>
> ஸாதிஞ்செனே, ஓமனஸா!
>
>
> அன்புடன்,
> ஹரி கிருஷ்ணன்.
>
>
> உங்களுக்கு தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகளுக்குப் பொருள் தெரிந்து
> கொள்ள வேண்டுமானால், ஏ. கே. கோபாலன் பப்ளிஷர், நெ.2
> சேதுப்பிள்ளை தெரு, போஸ்டல் ஆடிட் காலனி, சாலிக்கிராமம், சென்னை
> 600093 என்ற பதிப்பகத்தார் (தொலைபேசி 483 5055) "ஸத்குரு ஸ்ரீ
> த்யாகராஜ ஸ்வாமி கீர்த்தனைகள்" என்று 686 கீர்த்தனைகளுக்குத் தமிழில்
> பொருளுடன் வெளியிட்டிருக்கிறார்கள். வலைத்தளத்தைப் பற்றி எனக்கு
> எதுவும் தெரியாது.
>
> ----- Original Message -----
> From: Los Angeles Ram
> To: agathiyar@yahoogroups.com
> Sent: Thursday, February 28, 2002 12:52 PM
> Subject: Re: [agathiyar] Re: Fwd: Thyagaraja's
> Kritis in Tamil?
>
>
> நண்பர்களே,
>
> இந்த இழை ஆரம்பத்தில் நான் கேட்டிருந்த கேள்வி ஒரு மாதிரியாகத்
> திசை
> திருப்பப்பட்டுவிட்டது! தியாகையரின் தெலுங்கு உசத்தியா மட்டமா
> என்பதல்ல
> என் கேள்வி. என் தெலுங்கை விட அவர் தெலுங்கு ஆயிரம் மடங்கு
> உயர்ந்தது
> என்பதில் சந்தேகம் இல்லை!
>
> விதி சால சுகமா!?
>
> அன்புடன்,
>
> எல்லே ராமுடு
>
>
>
>
> [Non-text portions of this message have been
> removed]
>
>
>
---------------------------------------------------------------------------------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
>
---------------------------------------------------------------------------------
>
>
>
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to
> http://docs.yahoo.com/info/terms/
>
>
__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! Greetings - Send FREE e-cards for every occasion!
http://greetings.yahoo.com