From arull@... Thu Feb 28 16:59:29 2002
Return-Path: X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 1 Mar 2002 00:59:29 -0000
Received: (qmail 48042 invoked from network); 1 Mar 2002 00:59:28 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 1 Mar 2002 00:59:28 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 1 Mar 2002 00:59:23 -0000
Received: from tm.net.my (kmr-188-128.tm.net.my [202.188.188.128]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GS900D4XS2XX9@...> for agathiyar@yahoogroups.com; Fri, 01 Mar 2002 08:59:23 +0800 (SGT)
Date: Fri, 01 Mar 2002 08:56:46 +0800
Subject: திருமுறைத் தியானம்.
To: "agathiyar@yahoogroups.com" Message-id: <3C7ED1CE.322C5093@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார் X-Yahoo-Group-Post: member; u=21400202
X-Yahoo-Message-Num: 16337
வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருதேறிப்
பூதம் சூழப் பொலிய வருவார் புலியின் உரிதோலார்
நாதா எனவு(ம்) நக்கா எனவு(ம்)நம்பா என நின்று
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே.
வேதங்களை அருளி, முப்புரி நூல் அணிந்து, வெள்ளை
ரிஷபத்தின் மீதமர்ந்து, பூதகணங்கள் சூழ்ந்துவர, புலித்
தோலாடை உடுத்தி, அழகுடன் உலா வருகின்ற பரம்
பொருளே! திருப்பழனத்தலத்தில் வீற்றிருக்கும்
தெய்வமே!
உள்ளன்புடன் தலைவனே என்றும் - தன் சிரிப்பால்
திரிபுரத்தை எரித்த தகைமையனே என்றும் - நம்புதற்
குரிய உண்மையனே என்றும் பலவகையாகப் புகழ்ந்து
பாடி, உன் திருவடிகளைப் போற்றி முன்னின்று வழிபடும்
எம் பாவங்களைப் போக்கியருள்வாயாக!
பழனத்துச் செல்வமே! உம் பாதம் பரவிப் பாவந்தீரப்
புண்ணியச் செல்வராகிப் புவிதனில் ஓங்கி வாழ
அருள்வாயாக!