From jaybee@... Thu Feb 28 18:48:14 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 1 Mar 2002 02:48:13 -0000
Received: (qmail 24674 invoked from network); 1 Mar 2002 02:48:12 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 1 Mar 2002 02:48:12 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 1 Mar 2002 02:48:12 -0000
Received: from user (sp-103-212.tm.net.my [210.186.103.212]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GS900LHHX49G3@...> for agathiyar@yahoogroups.com; Fri, 01 Mar 2002 10:48:11 +0800 (SGT)
Date: Fri, 01 Mar 2002 10:50:33 +0800
Subject: Re: [agathiyar] Re: Fwd: Thyagaraja's Kritis in Tamil?
In-reply-to: <20020301004722.4864.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: Los Angeles Ram
Message-id: <3.0.3.32.20020301105033.0072e14c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <00aa01c1c033$fae10300$1c83d6d2@harikris>
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16342

At 04:47 PM 2/28/02 -0800, you wrote:
>அன்புள்ள ஹரியண்ணா,
நான் காலிக் குடம் கூட அல்ல. காலி. வெறும்
>குக்குடம். குப்பைமேட்டிலிருந்து சில நேரம் உரக்கக் குரல் கொடுத்து
>விடுவதால் இப்படி ஆகி விடுகிறது. மன்னியுங்கள்.


பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்ட நடை
பட்சியெனும் உக்ரதுரக முநீபப்
பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்

திக்கது மதிக்கவரு *குக்குடமும்* ரக்ஷைதரு
சிற்றடியு முற்றிய பன் னிரு தோளும்
செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பென எனக்கருள்கை மறவேனே!

என்னப்பு? பெரிசாக் கூவிக்கூவி பெரிய எடத்துலயே
ஏறிக்கிட்டீஹ!:-)

அன்புடன்

ஜெயபாரதி


>
> மற்றபடி நீங்கள் மடலாடும் முறையெல்லாம் சரி தான். 'ஞாயிற்றுக்
>கிழமை சாயுங்காலம் நண்பர்களைச் சந்தித்து உரையாடுவது' தான் வழக்கமான
>format. பனிஷ்மெண்டாக இந்த வாரம் சுண்டல், முறுக்கு, தட்டை என் கணக்கு.
>
> இனி நான் சற்று நிதானிப்பேன். யோசிப்பேன். மௌனிப்பேன்.
>
>மன்சுலோனி மர்மமுனு தெலுசுகோ ...!
>
>என்றென்றும் அன்புடன்,
>
>எல்லே ராமையா
>
>
>--- Hari Krishnan wrote:
>>
>>
>> மன்னிக்க வேண்டும் ராமையா. திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கம்
>> எதுவும் இல்லை. எனக்குத்தான் மடலாடும் வகை சரியாகத் தெரியவில்லை.
>> விவாதங்கள் சாதாரணமாக ஞாயிற்றுக் கிழமை சாயுங்காலம் நண்பர்களைச்
>> சந்தித்து உரையாடுவது போல நடக்கின்றன என்று நான் எண்ணி விட்டேன்.
>> கேட்ட கேள்விக்கு மட்டும்தான் பதில் என்பது தெரியாமல் போய்விட்டது.
>> அதுவும் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்குமட்டும்தான் பதில் என்பது.
>>
>> தியாகையருடைய தெலுங்கு எப்படிப்பட்டது என்பதைப் பற்றிச் சொல்வதற்கு
>> எனக்கு எந்த யோக்கியதையும் கிடையாது. எனக்குத் தெரிந்த ஒரு
>> செய்தியைப் பங்கிட்டுக்கொண்டேன் அவ்வளவே. அவரைக் குறைத்துச் சொல்லும்
>> நோக்கம் இருந்திருந்தால் பாரதியைத் துணைக்ழைத்திருக்க மாட்டேன்.
>> டாக்டரவர்கள் சொல்லியிருப்பதுதான் நான் சொல்ல விழைந்ததும்.
>>
>> ஸமயாமிகி தகு மாடலாடென.....
>>
>> ஸாதிஞ்செனே, ஓமனஸா!
>>
>>
>> அன்புடன்,
>> ஹரி கிருஷ்ணன்.
>>
>>
>> உங்களுக்கு தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகளுக்குப் பொருள் தெரிந்து
>> கொள்ள வேண்டுமானால், ஏ. கே. கோபாலன் பப்ளிஷர், நெ.2
>> சேதுப்பிள்ளை தெரு, போஸ்டல் ஆடிட் காலனி, சாலிக்கிராமம், சென்னை
>> 600093 என்ற பதிப்பகத்தார் (தொலைபேசி 483 5055) "ஸத்குரு ஸ்ரீ
>> த்யாகராஜ ஸ்வாமி கீர்த்தனைகள்" என்று 686 கீர்த்தனைகளுக்குத் தமிழில்
>> பொருளுடன் வெளியிட்டிருக்கிறார்கள். வலைத்தளத்தைப் பற்றி எனக்கு
>> எதுவும் தெரியாது.
>>
>=================>