From jaybee@... Fri Mar 01 04:10:23 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 1 Mar 2002 12:10:23 -0000
Received: (qmail 21439 invoked from network); 1 Mar 2002 12:10:22 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 1 Mar 2002 12:10:22 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 1 Mar 2002 12:10:22 -0000
Received: from user (sp-103-58.tm.net.my [210.186.103.58]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GSA0019PMYPPO@...> for agathiyar@yahoogroups.com; Fri, 01 Mar 2002 20:06:27 +0800 (SGT)
Date: Fri, 01 Mar 2002 20:08:47 +0800
Subject: [agathiyar] Thyagaraja's Kritis
In-reply-to: X-Sender: jaybee@... (Unverified)
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020301200847.00729a20@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <20020301004722.4864.qmail@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16350
At 07:01 AM 3/1/02 +0530, you wrote:
சேஷாத்ரி என்பவர் ஓஸ்மானியா பல்கலைக் கழகத்தின்
பொருளதிகாரியாக இருந்தவர். தியாகையரின் மீது ஆழ்ந்த
ஈடுபாடு கொண்டவர். பல தியாகராஜ ஆராதனைகளில் பங்கேற்று
உரைகள் நிகழ்த்தியவர்.
தியாகையரின் கிருதிகளை பேருரைகளுக்காக
ஆராயும்போது அவருக்கு ஒரு விசயம் புலனாகியது.
தியாகையருடைய கிருதிகளில் சிலவற்றை ஒரு குறிப்பிட்ட
வரிசையில் தொகுத்தால், இராமாயணக்கதையின் சாரம் கிடைக்கும்
என்பதைக் கண்டறிந்தார்.
ஆகவே அவற்றையெல்லாம் திரட்டி, இராமாயணக்
கதையின் போக்கில் தொகுத்து, 'ஸ்ரீதியாகராஜக்ருதி ராமாயணமு'
என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டார். 1980-ஆம் ஆண்டில்
ஹைதராபாதில் நடந்த தியாகராஜ ஆராதனையின் போது, இது
வெளியீடு கண்டது.
1981-ஆம் ஆண்டு, அந்நூலின் அடிப்படையில் அக்கிருதிகளை
இசைக்கலைஞர்கள் பாட, திரு சேஷாத்ரி இராமாயணக் கதையைச்
சொல்லி உரையாற்றினார். 'ஸ்ரீதியாகராஜ க்ருதி ராமாயண கானம்'
என்னும் பெயரில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்நூலுக்கு நல்ல ஆதரவு இருந்ததாலும், பலர் அதனைத்
தமிழிலும் வெளியிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டதாலும் ,
எழுத்தாளர் சுபஸ்ரீ இதனைத் தமிழ்ப்படுத்தித்தர, தமிழிலும்
வெளியிட்டார்.
மிகக் குறைந்த விலையில் லிஃப்கோ நூல்நிலையத்தினர்
இதனை வெளியிட்டிருக்கின்றனர்.
ஒவ்வொரு கிருதிக்கு முன்னும் அதன் மொழிபெயர்ப்புச்
சுருக்கத்தையும், அதன் தொடர்பையும் கொடுத்திருக்கிறார்,
ஆசிரியர்.
முழு இராமாயணத்தின் சாரத்தை ஒரே பாடலில் தியாகையர்
அமைத்திருக்கிறார். அப்பாடலும் இதில்இருக்கிறது.
இராமாயண நிகழ்ச்சிகளில் முக்கியமான இருபதைத்
தியாகையர் இந்தப் பாடலில் குறிப்பிட்டிருக்கிறார்.
பல்லாங்குழி விளையாட்டுக்கு 'ஓமந குண்டலு' என்று
தெலுங்கில் அழைக்கிறார்கள். சீதையும் இராமனும் பல்லாங்குழி
விளையாடுவதைத் தியாகையர், 'ஸீதாரமணி தோ ஓமந குண்டலாடி
கெலுசுட' என்று வர்ணிக்கும் வரியிலிருந்து அதனைத் தெரிந்து
கொண்டேன்.
இன்னும் ஏராளமான மணி மணியான விசயங்களை
இந்நூலில் காணமுடிகிறது.
வைத்திருக்கவேண்டிய புத்தகம்.