From nagas baan@... Fri Mar 01 06:25:21 2002
Return-Path: X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 1 Mar 2002 14:25:20 -0000
Received: (qmail 1197 invoked from network); 1 Mar 2002 14:25:20 -0000
Received: from unknown (216.115.97.167) by m12.grp.snv.yahoo.com with QMQP; 1 Mar 2002 14:25:20 -0000
Received: from unknown (HELO n28.groups.yahoo.com) (216.115.96.78) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 1 Mar 2002 14:25:19 -0000
Received: from [216.115.96.129] by n28.groups.yahoo.com with NNFMP; 01 Mar 2002 14:24:45 -0000
Date: Fri, 01 Mar 2002 14:24:41 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: KaaLi Kovil Poosaari - 1
Message-ID: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 8577
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "nchokkan" X-Originating-IP: 203.195.223.210
X-Yahoo-Group-Post: member; u=8108360
X-Yahoo-Profile: nchokkan
X-Yahoo-Message-Num: 16354
அன்பு அகத்தியர்களுக்கு,
சமீபத்தில் http://www.onlytamil.com என்னும் மின்னிதழில் வெளிவந்த
என்னுடைய நகைச்சுவைச் சிறுகதை ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில்
பெருமையடைகிறேன்.
உங்கள் இவிமர்சனங்களுக்கு நன்றி !
என்றும் அன்புடன்,
லாவண்யா ...
பெங்களூர்.
********************
காளி கோயில் பூசாரி - 1
********************
'ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விநோதப்பிறவி இருக்கும்' என்பது சுவாமி
ஏடாகூடானந்தா அருளிச் செய்திருக்கும் வாக்கியம். அதை நம்பியாகவேண்டிய கட்டாயம்
எங்களுக்கு இருக்கிறது - காரணம் செந்தில்.
செந்திலை நாங்கள் காளி கோயில் பூசாரி என்றுதான் அழைப்போம். 'ஏன் ?' என்று
காரணம் கேட்கிறவர்கள், அவன் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து முகம் கழுவி, தோளி
ல் சிவப்புத் துண்டு, இடையில் ஒரு மெல்லிய வேஷ்டி சகிதம் நெற்றியில் பூசின (ஆமாம்!)
குங்குமத்துடன் வந்து நிற்கிறபோது பார்க்க வேண்டும். அப்புறம் கேட்க மாட்டீர்கள்.
செந்திலை பூசாரிக் கோலம் கொள்ள வைத்ததில் முக்கியப் பங்கு அவன் தாடிக்கு
உண்டு. தாடி என்றால், முனிவர்கள் போல நீளமாகவும் வளர்க்காமல்., ஃப்ரெஞ்சுக்
காரர்கள் போல சுருக்-கமாயும் வைத்துக் கொள்ளாமல் நடுத்தரமாய் ஒரு தாடி. தாடை
முழுக்க புசுபுசுவென்று கறுப்புப் புழுக்கள் போல நெளிந்து கொண்டு, அவன் சிரிக்கி
றானா அழுகிறானா என்று கூட தெரியாதபடி உதட்டை மறைத்துக் கொண்டிருக்கும்.
தலைமுடிக்கும், தாடிக்கும் நடுவில் கண்களும் கொஞ்சூண்டு முகமும் மட்டும் தெரி
ந்துகொண்டிருப்பதால், அசப்பில் அவன் தலையில் எப்போதும் ஒரு ஜன்னல்வைத்த
கறுப்பு ஹெல்மெட் கவிழ்ந்திருப்பதாகத் தோன்றும்.
அவனுக்கு அந்தத் தாடியில் ரொம்ப பெருமை. 'எதுக்குடா தாடி வளர்க்கிறே ?' என்று
கேட்டால், கேட்டவரை மேலும் கீழும் ஒரு அலட்சியப் பார்வை பார்த்து, 'நீ ஏன் தாடி
வளர்க்கலை' என்று எதிர்க் கேள்வி கேட்டுவிட்டு, நம்மை மடக்கிய சந்தோஷத்தில்
தாடியை ஒருமுறை வருடிக் கொள்வான்.
'இது என்னடா கேள்வி ? வளர்க்கலை., அவ்வளவுதான்'
'அதே பதில்தான் உனக்கும். நான் வளர்க்கிறேன். அவ்வளவுதான்' போய் விடுவான்.
கேட்டவர் திருதிருவென்று விழித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
தூக்கம் வராத இரவுகளில் கஷ்டப் பட்டு அவனைத் தூண்டி விட்டு (நிஜக்)காரணம்
கேட்டால், ஒவ்வொரு முறையும் வெவ்வேறு காரணம் சொல்லி வெறுப்பேற்றுவான். ஒரு
முறை 'காதல் தோல்விடா மாமு' என்பான் பொய்க் கண்நீர் வடித்து, அல்லது 'தாடி
வெச்சா சிந்தனை வளரும்-ன்னு தாகூர் சொல்லியிருக்கார்டா' என்பான். 'எங்க
பரம்பரையிலே எல்லாருமே தாடி வளர்ப்பாங்க தெரியுமா., பெண்களுக்கு மட்டும் விதிவி
லக்கு' என்பான். சில சமயங்களில் பரிதாபப்பார்வையுடன், 'ஷேவ் பண்ண சோம்பேறி
த்தனமா இருக்குடா., நீ வேணா பண்ணி விடறியா' என்கிறபோது ஓஓடியே வி
டுவோம். இந்த தாடிக்கு சவரமா ? யாரால் ஆவது ? வெளிநாடுகளில் புல் வெட்ட ஏதோ
கருவி இருக்கிறதாமே, அதை வாங்கி வந்தால்தான் உண்டு.
அவன் சொல்கிற காரணங்களில் எதுவும் உண்மை இல்லை என்பது மட்டும் தெளிவாகப் புரி
ந்தது. இவை எல்லாவற்றையும் தாண்டி ஏதேனும் ஒரு காரணம் அவனுக்குள் இருக்க
வேண்டும், அல்லது சும்மா எங்களை வெறுப்பேற்றுவதற்காகவே தாடி வளர்க்கிறானோ
என்னவோ, யார் கண்டது.
ஆனால் அவன் தாடியின்மேல் அளவற்ற பாசம் வைத்திருந்தான். தினமும் குளிக்கி
றபோது அதற்கு ஷாம்பூ போடுகிறான் என்பது எங்களின் நீண்ட நாள் சந்தேகம். குளி
த்துமுடித்ததும் முகத்தில் மீதமிருக்கிற கொஞ்சம் ஏரியாவில் மட்டும் பவுடர் போட்டுவிட்டு,
தாடிக்காக ஏதோ எண்ணை தடவி நீவிவிடுவான். வாரம் ஒருமுறை சின்னக்குழந்தைக்கு
(அல்லது) காதலிக்கு நகம் வெட்டுகிற கவனத்தோடு தாடி கத்தரி
த்து அழகாவான், அல்லது அழகாவதாய் நினைத்துக்கொள்வான்.
ஆனால் ஒன்று, பார்ப்பவர்களை உள்ளூர பயமுறுத்தினாலும், அந்த
தாடியால் அவனுக்கு ஒரு அறிவுஜீவிக்களை இருந்ததாகவே தோன்றியது.
எங்கள் அலுவலகங்களில் வழுக்கைக்கும், தாடிக்கும்தான் மரியாதை (இவை இரண்டுமே
பெண்களுக்கு வருவதில்லை என்பது யதேச்சையா ? ஆண்டவன் சதியா ?), ஆகவே
செந்திலுக்கு ஆஃபீஸில் நல்ல பெயர். எப்போது பெரிய வேலை
வந்தாலும் அவனைத்தான் நம்பிக்கையோடு கூப்பிட்டுக் கொடுத்தார்கள். என்னதான் தி
றமைசாலி என்றாலும், அளவுக்கு மீறி வளர்ந்துவிட்ட கொஞ்சம் முடியினால் அவன்
எங்களை முந்திப்போய்விட்டதில் எங்களுக்கெல்லாம் பழுதான அம்பாஸிடர் அளவுக்கு காதி
ல், மூக்கில் புகை வந்தாலும், அதற்காக தாடி வைக்க எங்களில் யாரும் தயாரில்லை.
காரணத்தை முன்னாலேயே சொல்லியிருக்கிறேன் - பூஜை செய்கிறேன் பேர்வழியென்று
தினமும் வீட்டில் அவன் பண்ணும் ஆர்ப்பாட்டங்களை எங்களால் ஜென்மத்துக்கும்
மறக்க முடியாது. சட்டை போடாத உடம்பில் ஒரே ஒரு காசித்துண்டைப் போர்த்தி
க்கொண்டு கவர்ச்சியான மெல்லிய வேட்டி உடுத்தி, முகம் முழுக்க குங்குமமும், தாடியும்
நிறைந்திருக்க, சாமிபடத்தின்முன்னால் நின்றபடி ஆக்ரோஷமாய் மந்திரங்கள்
சொல்வான். அப்போதெல்லாம் அவனைப்பார்க்கவே பயமாய் இருக்கும். ஓரமாய் ஒதுங்கி
ப்போய்விடுவோம். ஏதேனும் சப்தம் செய்தால், கவனம் கலைந்து, கோபத்தில், 'என்
பூஜையைக் கலைத்த நீ, பூனையாகக் கடவது' என்றோ, 'அடுத்த பிறவியில் பொம்மை
முதல்வராகப் பிறப்பாய்' என்றோ சபித்துவிடுவான் என்றபயத்தில் டிவி
யைக்கூட அணைத்துவிட்டு சும்மா உட்கார்ந்திருப்போம்.
பூஜை என்றால் அது ஒரு மதத்தைச் சேர்ந்த கடவுளர்க்குமட்டும் செய்வது என்கிற குறுகிய
நோக்கம் செந்திலுக்கு இல்லவே இல்லை. பெரும்பாலான நேரங்களில் அவன் பூஜை
செய்வது வெற்றுச் சுவர்களுக்குத்தான். சில சமயங்களில் பழைய பேப்பர் கட்டுக்கோ,
செருப்பு அடுக்கி வைத்திருக்கும் ஸ்டேண்டுக்கோகூட நமஸ்கரித்து வணக்கம்
போடுவான், கடவுள் எங்கும் இருக்கிறார் என்கிற கொள்கையில் அவனுக்கு அளவுக்கு மீறி
ய நம்பிக்கை இருந்துவந்தது. ஆகவே எதிரில் இருப்பது எதுவானாலும் அதைக் கடவுளாக வரி
த்துக்கொண்டு இருகைகளையும் குவித்தபடி கொஞ்சநேரம் அவரோடு காரசாரமாய் விவாதம்
நடத்துவதுபோல மந்திரங்கள் சொல்வான், (அவை மந்திரங்களா அல்லது லேட்டஸ்ட் சினி
மாப்பாட்டின் புரியாத வரிகளா என்பது அவனுக்கும், ஆண்டவனுக்குமே வெளிச்சம்),
கழுத்தில் நோஞ்சானாய் ஒரு மணிமாலை போட்டிருப்பான், அதை எடுத்துக் கையில்
ஜெபமாலைபோல் வைத்துக்கொண்டு மந்திரங்களோடு அதைச் சுழற்றுவதும் உண்டு.
அதன்பிறகு, மண்டியிட்டுத் தரையில் அமர்ந்துகொண்டு, தொழுகை செய்கி
றவர்கள்போல அல்லது நமஸ்கரிக்கிற பெண்கள்போல அரைவட்டமாய்க் குனிந்து
வணங்குவான், அந்த போஸில் நான்கைந்து நிமிடங்கள் கழிந்தபிறகு, தூங்கிவிட்டானோ
என்று நாங்கள் சந்தேகமாய்ப் பார்த்துக்கொண்டிருக்கையில் திடுமென்று நிமிர்ந்து, 'இ
றைவனிடம் கையேந்துங்கள்' என்கிற நாகூர் ஹனீஃபாவின் கோரிக்கையை மதி
ப்பதுபோல கைகளைக் குழித்து மேலேபார்த்தபடி வைத்துக்கொண்டு, கண்மூடி இ
றைஞ்சுவான், அது முடிந்ததும் குழிந்த கையில் என்ன விழுந்திருக்கிறது என்பதைக்கூட
சோதிக்காமல், தோளின் இருபுறமும் நெஞ்சிலும், உச்சந்தலையிலும் கையால் தொட்டு,
கையின் முனையில் முத்தமிட்டுக்கொள்வான். கையை முஷ்டிபோல குவித்து அதை
நெஞ்சின் மத்தியில் வைத்துக்கொண்டு மீண்டும் முணுமுணுப்புகள் தொடரும். எந்த
நேரத்தில் என்ன நடக்குமோ என்று கலவரத்தோடு நாங்களெல்லாம் பார்த்திருக்கையில்,
எதுவும் நடக்காதவன்போல எழுந்துவந்து, 'இன்னிக்கு நைட் என்ன சமையல் ?' என்று
சாதாரணமாய் விசாரிப்பான். பதட்டத்தில், 'கத்திரிக்காய் சாம்பார்' என்பதை 'கத்திரிக்காய்
சாமியார்' என்று ஒருமுறை உளறியிருக்கிறேன்.
இப்படி தினமும் அரை மணி நேரமாவது எங்களை ஆஃப்கானிஸ்தான் பொதுமக்கள்
கணக்காய் பயத்தின் நுனியில் உட்காரவைக்கிற செந்திலைப்பார்த்தபிறகு, யாருக்கும் தாடி
வளர்க்கிற ஆசைபோய்விடும். சின்ன வயதில் 'பூச்சாண்டிகிட்டே பிடிச்சுக்
கொடுக்கறேன்' என்று பயமுறுத்திய எங்கள் பெற்றோர்கள் எல்லாம் சேர்ந்து எங்களை
செந்திலிடம் பிடித்துக்கொடுத்துவிட்டதாய் ஒரு பிரம்மை. (இதையெல்லாம் அவன் காதுபட
சொல்லிவைக்காதீர்கள், ஆமாம் !)
செந்திலோடு ஒரே வீட்டில் தங்கியிருக்கிற நாங்கள் மட்டுமில்லை, எங்கள் நண்பர்
வட்டாரத்தில் எங்கே நான்குபேர் கூடினாலும் அவன் தாடியைப் பற்றியே பேச்சு
எழுந்துகொண்டிருந்தது. அவனை நாங்கள் பூசாரி என்று அழைக்கிற விஷயம் தெரிந்ததும்,
எங்கள் வீட்டை 'ஆசிரமம்' என்று அழைக்க ஆரம்பித்தார்கள் நண்பர்கள், இதில்
பெருமைப்படுவதற்கும் ஒன்றுமில்லை, 'துர்தேவதைகளின் ஆசிரமம்' என்பதைத்தான் இ
டக்கரடக்கி அப்படிச் சொல்கிறார்கள் என்பது எங்களுக்குப் புரிந்துவிட்டது. கூடியசீக்கிரம்
எங்களுக்கெல்லாம் 'உப பீடாதிபதிகள்' என்கிற பெயர் வந்து, அதை 'உபபீடா'
என்று அபத்தமாய் சுருக்கிக் கூப்பிடலானார்கள். நாங்கள் என்னவோ வீட்டுக்குள் சூனி
யம் வைப்பது, கூடுவிட்டுக் கூடு பாய்வது போன்ற அமானுஷ்ய வேலைகளை செந்தில்
தலைமையில் செய்துகொண்டிருப்பதைப்போல ஒரு கெட்டபெயர் உருவாகிவிட்டது.
பெண்கள் எங்களைப் பார்த்ததும் தலையில் கூடை இருப்பதுபோல
பாவனைசெய்துகொண்டு 'வேப்பிலை வேணுமா, வேப்பிலை' என்று அபிநயித்து
வெறுப்பேற்றினார்கள்.
தங்கியிருக்கும் வீட்டைப் பழித்தவனை,வளை தாய் தடுத்தாலும் விடமாட்டோம் என்று
மேலே பாய்ந்து தாக்கலாமென்றால் எத்தனைபேரைத்தான் தாக்குவது ? கன்னித்தீவு
தொடர்கதைபோல, டிவியின் அழுகை சீரியல்கள்போல, தமிழனின் லாட்டரி
ஆசைபோல, சினிமாவின் அபத்த சென்ட்டிமென்ட்கள்போல - இந்த ஊர்வாயையும்
மூடமுடியாது என்பது தெரிந்தபிறகு வேறு யோசனைகள் செய்தோம். இந்த அவப்பெயர்
போகவேண்டுமென்றால் ஒரே வழி, செந்தில் தாடியை எடுக்க
வேண்டும், அதற்கு அவனுடைய தாடி ரகசியத்தை எப்படியாவது தெரிந்துகொண்டாக
வேண்டும்.