From nagas baan@... Fri Mar 01 06:25:25 2002
Return-Path:
X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 1 Mar 2002 14:25:25 -0000
Received: (qmail 74628 invoked from network); 1 Mar 2002 14:25:25 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 1 Mar 2002 14:25:25 -0000
Received: from unknown (HELO n2.groups.yahoo.com) (216.115.96.52) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 1 Mar 2002 14:25:25 -0000
Received: from [216.115.96.47] by n2.groups.yahoo.com with NNFMP; 01 Mar 2002 14:25:16 -0000
Date: Fri, 01 Mar 2002 14:25:11 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: KaaLi Kovil Poosaari - 2
Message-ID:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 10401
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "nchokkan"
X-Originating-IP: 203.195.223.210
X-Yahoo-Group-Post: member; u=8108360
X-Yahoo-Profile: nchokkan
X-Yahoo-Message-Num: 16355

********************
காளி கோயில் பூசாரி - 2
********************

செந்தில் தாடியை எடுக்க வேண்டும், அதற்கு அவனுடைய தாடி ரகசியத்தை
எப்படியாவது தெரிந்துகொண்டாக வேண்டும் ...

'தண்ணியடிச்சா எவனா இருந்தாலும் உளறுவான் மாமு' என்றான் ஒரு அனுபவஸ்தன், இ
வன் போனதடவை தண்ணியடித்துவிட்டுத் திரும்பிவரும்போது, கர்ணனுக்கு கஸின்பிரதர்
என்கிற நினைப்பில் ஆட்டோ டிரைவருக்கு மூவாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு வந்தவன்.
(மறுநாள் 'தெளிந்த'பிறகு அதற்காக வெட்கப்பட்டு குடிப்பதையே நிறுத்திவிட்டான் என்பது
வேறு கதை), அவன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். ஆனால் செந்திலுக்குக் குடிக்கி
ற பழக்கம் இல்லையே ?
அது ஒரு பெரிய பிரச்சனையே இல்லை என்று அனுபவஸ்தன் மீண்டும் சொன்னான்.
வீட்டுக்கு பெப்ஸி வாங்கி வந்து, அதில் வேறெதையோ கலந்து கொடுத்துவிடலாம்
என்றான். முதலில் எங்களுக்கு பயமாகவே இருந்தது, ஆனாலும், சாம, பேத, தான,
தண்டங்களில் எதுவானாலும் அதை உபயோகித்து செந்திலைக் கவிழ்த்துவிடுவது என்கிற
முடிவில் எல்லோரும் உறுதியாக இருந்ததால் இதற்கு ஒப்புக்கொண்டோம். காலண்டர்,
பஞ்சாங்கம் பார்க்காமல் ஒரு நல்லதேதி நிர்ணயித்து அன்று பெப்ஸியை நான் வாங்கி
வருவது என்றும், மற்ற சமாச்சாரங்களை இன்னொருவன் பார்த்துக்கொள்வது என்றும்
முடிவு செய்தோம், செலவு ஐநூறைத் தாண்டியது, 'பரவாயில்லை, நமக்கு மானம்தானே
முக்கியம் !' என்று பேசிக்கொண்டபோது புறநானூற்றுத் தமிழர்கள்போல உணர்ந்தோம்.

அன்றிலிருந்து செந்திலைப் பார்க்கும்போதெல்லாம் பயம் அதிகமாயிருந்தது. அவன்
பார்வையைத் தவிர்த்து ஓரமாய் ஒதுங்கிப்போக ஆரம்பித்தோம். அவன் பூஜை
செய்யும்போது நாங்களெல்லாம் சினிமா பார்க்கப் போனோம், அல்லது தெருமுனை கிரி
க்கெட் கிரவுண்டில் சின்னப் பையன்களின் ரப்பர்பந்தாட்டத்தை ரசிக்கப்போனோம். வி
சுவாசமான மனைவிபோல அவன் சாப்பிட்டு முடித்தபிறகுதான் நாங்களெல்லாம்
சமையலறைக்குள் உட்கார்ந்து சாப்பிட்டோம், அவன் காலையில் எழுந்திருக்கும்முன்பே
நாங்களெல்லாம் ஆஃபீஸ் போய்விட்டோம். அவன் எங்களை நேருக்கு நேராய்ப்
பார்த்து, 'என்னடா பண்றீங்க எல்லோரும் ?' என்று ஒரு முறைப்போடு
கேட்டிருந்தால் காலில் விழுந்து ஒன்றுபாக்கியில்லாமல் சொல்லிவிடுவோம் என்பது
எல்லோருக்கும் தெரிந்திருந்ததால், அவனுக்கு அந்த வாய்ப்பையே தரவில்லை நாங்கள்.
ஒருவாரம் இந்த தலைமறைவு விளையாட்டை ஆடவேண்டியிருந்தது.

நாம் ஒன்று நினைக்க, தெய்வம் முப்பத்தேழு நினைக்கும் என்பது இந்த விஷயத்திலும்
உண்மையானது. செந்திலுக்கு 'ஊற்றிக்கொடுக்க' நாங்கள் திட்டமிட்டிருந்த தினத்துக்கு
ஒருநாள் முன்னால், ராத்திரி ஒன்பதரை மணி இருக்கும். எல்லோரும் தூங்கத் தயாராகி
க்கொண்டிருந்தபோது திடுதிப்பென்று கரன்ட் போய்விட்டது. சட்டென்று ஒரு பெரிய இருட்டு
வந்து நகர் முழுதையும் அணைத்துக்கொண்டதுபோல் சூழல் மாறிப்போனது. எங்கள் ஊரி
ன் வெய்யில் காலம் ராத்திரி, பகல் என்று பார்க்காது, குறைந்தபட்சம் நாற்பது செல்சியஸி
ல்தான் ஆரம்பிக்கும். ஃபேனிலிருந்து அனல் காற்றுதான் வீசும், என்றாலும் ஃபேன் இ
ல்லாமல் படுப்பது தீக்குளிப்பதற்கு சமம். ஆகவே எல்லோரும் பால்கனிக்கு வந்து,
கொஞ்சமாய் ஒளிபரப்பிக்கொண்டிருந்த நிலாவை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு, எதிர்க்
கம்பத்தில் மின்சாரம் வரும் வழிமேல் விழிவைத்து உட்கார்ந்திருந்தோம்.

அப்போது செந்தில் அவனுடைய ட்ரேட்மார்க் தாடி வருடலோடு பேச ஆரம்பி
த்தான், 'மச்சான், உங்களிலே யாராவது லவ் பண்றீங்களாடா ?'
எல்லோரும் குழப்பத்தோடு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டோம், நாங்கள் தி
ருதிருவென்று விழிப்பது அந்த இருட்டிலும் நன்றாகத் தெரிந்தது.
'என்னடா முழிக்கறீங்க ?' அதட்டினான் செந்தில்.
இதற்கும் யாரும் பதில் பேசவில்லை. செந்திலின் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது.
கறுப்பு தாடிக்கு நடுவில் வெளுப்புப் பற்கள் தெரிந்து மறைவது மின்னலடித்ததைப்போல இ
ருந்தது. அடுத்து இடிஇடிப்பதைப்போல ஏதாவது பேசிவிடப்போகிறானோ என்று பயமாய் இ
ருந்தது.

அவன் நிதானமாகவே பேசினான், ஆனால் குரல் ரொம்ப உறுதியாய் இருந்தது, 'நீங்க
ஏன் பேச மாட்டேங்கிறீங்க-ன்னு எனக்குத் தெரியும், லவ் பண்ணாதவன் டக்குன்னு
சொல்லிடுவான், லவ் பண்றவன்தான் அநாவசியமா வாயிலே பூட்டு மாட்டிகிட்டு பித்துப்பி
டிச்சவன்மாதிரி சுத்திகிட்டிருப்பான். காதல் விஷயத்திலே எவனாவது மௌனமா இ
ருந்தா, அவன் காதலிக்கிறான்னு அர்த்தம்' என்றான் பண்டிதன்போல. 'ஸோ, நீங்க
எல்லோரும் காதலிக்கிறீங்க' என்று ஒவ்வொருவர்பக்கமும் கைநீட்டிச்
சொன்னான். அவன் சொன்னதை நம்பமுடியாத மயக்கத்தில் இருந்தோம் நாங்கள். அவன்
பேசிய தோரணை, காதலித்தே ஆகவேண்டும் என்று எங்களை மிரட்டுவதுபோல் இ
ருந்தது. இன்னும் கொஞ்சம் விட்டால் நிச்சயதார்த்தம் முடித்து, கல்யாணமும் பண்ணி
வைத்துவிடுவான் போலிருந்தது.

'என்ன செந்தில் சொல்றே ?' என்று நான் பேசவந்ததை அவன் அனுமதிக்கவில்லை, வி
ரல்களை விரித்து டிராஃபிக் கான்ஸ்டபிள்போல என் முகத்துக்குநேராய் நீட்டி, 'எதுனா
பொய்சொல்லி என்னை ஏமாத்தப் பார்க்காதே, ஐ நோ' என்றான். என் வேகம் தணி
ந்து மௌனமாகிவிட்டேன். செந்திலை எதிர்த்துப்பேசுகிற தைரியமின்றி எல்லோரும் அமைதி
யாய் இருந்தார்கள். அவன் நாங்கள் காதலிப்பதாய் நினைத்தால் என்ன, கர்லாக்கட்டை
சுழற்றுவதாய் நினைத்தால் என்ன, கரென்ட் வந்தால் போய் தூங்கிவிடலாம் என்று இருந்தது.

அவன் எங்கள் மௌனத்தை (மறுபடி) சம்மதமாய் எடுத்துக்கொண்டு, 'ஸோ, நீங்க
எல்லோரும் காதலிக்கிறீங்க' என்று ஏழாவது முறையாக சொன்னான், ஒரு
தாடிவருடலுக்குப்பிறகு, 'பட், நான் காதலிக்கலை' என்று சொல்லிவிட்டு ஒரு வில்லன் சி
ரிப்பு, தொடர்ந்து 'ஏன்னா, என்னை யாரும் காதலிக்கலை' என்று மீண்டும் சிரி
த்தான். செந்திலின் அசட்டுத் தத்துவங்கள் எங்களுக்கெல்லாம் பழகிப் போயிருந்தது,
ஆனாலும் இது கொஞ்சம் அதிகமான உளறலாகவே தோன்றியது, மீண்டும் நான் தைரி
யமாய், 'உன்னை யாரும் காதலிக்கலைன்னா என்ன செந்தில், நீ யாரையாவது காதலி
க்கலாமே' என்றேன்.
அவனிடமிருந்து உடனே பதில் வந்தது. 'ந்நோ'., சற்று பொறுத்து மீண்டும், 'நோ,
நானா யாரையும் காதலிக்க மாட்டேன், என்னை யாராவது காதலிச்சா, அவங்களை பதி
லுக்குக் காதலிப்பேன்' என்றான். என்ன அபத்தம் இது ?

இன்னும் அவனைக் கிளறிப்பார்த்தால் ஏதேனும் விஷயம் கிடைக்கும் என்று தோன்றி
யது, 'என்ன செந்தில் சொல்றே ? யாராவது உன்னைக் காதலிக்கணுமா ? இப்படியே
எல்லோரும் நினைச்சா யார்தான் முதல்ல காதலிக்கிறது ?' என்றேன். என் கேள்வியே
முட்டாள்தனம் என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டிருக்க, செந்தில் அதைவிட
முட்டாள்தனமாய் ஒரு பதில் சொன்னான், ' ஏன், இப்போ நீங்க காதலிக்கலையா ?' -
எங்களுக்குள் மீண்டும் திருதிரு - ஒருவரை ஒருவர் பார்த்தல் போன்ற
குழப்பச்சடங்குகள் அரங்கேறின.

'அதாவது, பணம், பொண்ணு, பதவி - மூணும் உனக்குப் பின்னாலே
வரணும், அப்படித்தானே ?' என்று ரஜினி குரலில் ஒருவன் பேசிக்காட்டியதும் செந்தி
லைத்தவிர எல்லோரும் சிரித்தோம், அதைச்சொன்னவனை செந்தில் ஆசையாகப் பார்த்து
தலையாட்டினான், 'கிட்டத்தட்ட அப்படித்தான்'. உடனே நான் சும்மாயி
ருக்காமல், 'ஆஸ்தி, ஆம்பளை, அதிகாரம் - மூணும் எனக்குப் பின்னால வரணும்-
ன்னு அந்தப் பொண்ணு நினைச்சா கடைசி வரைக்கும் ரெண்டுபேரும் ரெண்டு
வெவ்வேற ரூட்ல போய்ட்டிருப்பீங்க செந்தில்' என்றேன்.
'பரவாயில்லை, தண்டவாளம் ரெண்டும் வெவ்வேற திசையிலே போற மாதிரிதான் தெரி
யுது, ஆனா ரயில் வந்து அது ரெண்டையும் இணைச்சுடுது, இல்லையா ?' என்றான்.
எனக்கு மயக்கமே வரும்போல ஆகிவிட்டது, இதென்ன பிதற்றல் வாஆஆரமா ?

நான் மறுபடி விஷயத்துக்கு வந்தேன், 'அதெல்லாம் இருக்கட்டும் செந்தில், இப்போ என்ன தி
டீர்ன்னு காதலைப்பத்தி பேச்சு ?' என்றேன்.
அவன் இன்னொரு வில்லன் சிரிப்பு செய்தான், நாங்களெல்லாம் ஆவலோடு
பார்த்துக்கொண்டிருக்கையில், 'காதல்தான் உலகத்திலே எல்லாம், காதல் இல்லாம
எத்த்த்துவும் இல்லை' என்றான் சினிமாக்கவிஞன் போல.
நாங்கள் தூண்டிலும் வலையும் வீசித் தேடிக்கொண்டிருந்த மீன், அடுத்த வாக்கியத்தில்
தானாய் எம்பிக்குதித்து எங்கள் சட்டைப்பையில் விழுந்தது, 'இவ்வளவு ஏன் ? டேக் மை
தாடி, இதுக்கும் காதல்தோல்விதான் காரணம்' என்றுவிட்டு செந்தில் வானம் பார்த்து தாடி
தடவினான். நிலா வெளிச்சத்தில் அவனைப்பார்க்கவே பயமாய் இருந்தது.

'என்ன சொல்றே செந்தில், காதல் தோல்வியா ? யார் அந்தப் பொண்ணு ?',
('யார் அந்த அதிர்ஷ்டசாலி ?' என்று கேட்டிருக்க வேண்டும், நிச்சயம் புத்திசாலி
ப்பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் !) அவன் காதலித்தான் என்பதே எங்களுக்கு
புதுச் செய்தி, கல்லூரியிலும், இந்த ஊருக்கு வேலைபார்க்க வந்தபிறகும் எந்தப்
பெண்ணோடும் அவனை அதிகம் பார்த்ததாய் நினைவில்லை. டிவியில் வருகிற
நடிகைகள் சிலரை அளவுக்கதிகமாய் சிலாகிப்பானேதவிர, வேறெந்தப் பெண்ணைப்பற்றி
யும் உருகிப் பேசியதில்லை, படுத்தவுடன் மூன்றாவது நிமிடம் தூங்கிவிடுகிற ஜாதி அவன் -
தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்ததைப் பார்த்ததில்லை, எந்த ஃபோனிலும் இ
ரண்டு நிமிடத்துக்குமேல் பேசியதில்லை, தனக்குத்தானே பேசிக்கொண்டதும் இல்லை,
கோடுபோட்ட நோட்டில் கவிதை எழுதியதில்லை, அவன் எப்போதும் உளறுவதை காதல்
மயக்கம் என்று எடுத்துக்கொள்வது சரியாகாது, இதையெல்லாம்
வைத்துப்பார்க்கும்போது அவன் சமீபத்தில் காதலித்திருக்க வாய்ப்பே இல்லை. அநேகமாய்
பள்ளிக்கூடத்தில் ஏழாப்பு படிக்கும்போது நடந்த ஒரு காதல் கதையைச் சொல்ல ஆரம்பி
க்கப்போகிறான் என்று நினைத்தேன்.

ஆனால் நாங்கள் என்ன நினைக்கிறோமோ அதற்கு நேர்மாறாய்ச் செய்வதுதானே செந்திலி
ன் ஸ்பெஷாலிட்டி, இப்போதும் நாங்கள் எதிர்பார்க்காத ஒரு விநோதமான பதிலைச்
சொன்னான் அவன், 'காதலிச்சு தோல்வி அடைஞ்சாதான் தாடி வளர்க்கணுமா ? காதலி
க்காம தோல்வி அடைஞ்சவங்க தாடி வளர்த்தா தப்பா ?' என்று அவன்
சொன்னதைக்கேட்டு, நாங்களெல்லாம் இருக்கிற தலைமுடியையும் பிய்த்துக்கொண்டு ஓடிவி
டலாமா என்று யோசிக்க ஆரம்பித்தோம்.
எங்களுடைய குழப்பமான முகங்களைப்பார்த்ததும் அவனுக்கு குஷியாகிவிட்டது, உருவாக்கி
க்கொண்ட பெருமிதத்தோடு ('பந்தா' என்று பச்சையாக சொல்லலாம்), 'விஷயம்
ரொம்ப ஸிம்பிள் ஃப்ரெண்ட்ஸ், என்னை யாரும் காதலிக்கலை, அதனால நான் தாடி
வளர்க்கறேன்' என்றான். அத்தனை எளிமையான அந்த வாக்கியமும் எங்களுக்கு
சுத்தமாய்ப் புரியவில்லை என்பதிலிருந்து நாங்கள் என்ன நிலையில் இருந்தோம் என்பதை ஊ
கித்துக்கொள்ளலாம்.

அப்போது பளிச்சென்று வீட்டிற்குள் விளக்குகள் எரிந்து மின்விசிறிகள் சத்தமாய்ச் சுழன்று
எங்களை அழைத்தன. யாரும் இருந்த இடத்தைவிட்டுக் கொஞ்சமும் நகரவில்லை. செந்தில்
சொன்னதன் அர்த்தத்தை யோசித்துக்கொண்டிருந்தோம். அவன் கண்காட்சியில் பாதி மனி
த உடல், பாதி பாம்பு என்றிருக்கிற பெண்ணைப் பார்ப்பதுபோல எங்களை விசித்திரமாய்
பார்த்தான்.
நான்தான் முதலில் சுதாரித்தேன், 'அப்படீன்னா, உன்னை யாராவது காதலிச்சா இந்த
தாடியை எடுத்துடுவியா ?' என்றேன். அவன் என்னை அற்பப்பதரைப்பார்ப்பதுபோல
பார்த்துவிட்டு, 'அஃப்கோர்ஸ்' என்றான்.
இன்னொருவன் புத்திசாலித்தனமாக ஒரு கேள்விகேட்டான், 'அதுக்குள்ள
உன் அப்பா, அம்மா உனக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சுட்டா ?'
'ஃபூல், கல்யாணம் என்ன காதலுக்கு ஃபுல்ஸ்டாப்பா ? எனக்கு நல்ல வைஃப் கி
டைச்சு, அவளுக்கும் என்னைப் பிடிச்சிருந்தா தாடியை எடுப்பேன், இல்லைன்னா
காலமெல்லாம் தாடி வளர்க' என்று சிரித்தான் அவன். ஒருவிதத்தில் யோசி
த்துப்பார்த்தபோது அவன் சொல்வதும் சரியாகவே தோன்றியது. பாஞ்சாலி சபதம்போல,
காதலிக்க யாராவது கிடைக்காவிட்டால் தாடியை எடுக்கமாட்டேன் என்ற உறுதியில் இருக்கி
றான் பையன்.

(தொடரும்)