From nagas baan@... Fri Mar 01 06:25:41 2002
Return-Path:
X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 1 Mar 2002 14:25:41 -0000
Received: (qmail 73670 invoked from network); 1 Mar 2002 14:25:40 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 1 Mar 2002 14:25:40 -0000
Received: from unknown (HELO n1.groups.yahoo.com) (216.115.96.51) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 1 Mar 2002 14:25:40 -0000
Received: from [216.115.96.48] by n1.groups.yahoo.com with NNFMP; 01 Mar 2002 14:25:39 -0000
Date: Fri, 01 Mar 2002 14:25:36 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: KaaLi Kovil Poosaari - 3
Message-ID:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 8419
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "nchokkan"
X-Originating-IP: 203.195.223.210
X-Yahoo-Group-Post: member; u=8108360
X-Yahoo-Profile: nchokkan
X-Yahoo-Message-Num: 16356

********************
காளி கோயில் பூசாரி - 3
********************

மறுநாள் மாலை செந்தில் வீட்டுக்கு வருவதற்கு முன்னால் எங்கள் பொதுக்குழு
கூடியது. பெப்ஸியில் கலப்படம் செய்யும் எங்கள் திட்டம் அவசியமில்லாமல் போனதில்
லேசான வருத்தம்தான் என்றாலும், செலவில்லாமல் செந்திலின் மனதுக்குள் இருப்பதைத்
தெரிந்துகொண்டது எங்களுக்கு சந்தோஷமாகவே இருந்தது. தண்ணியடித்து அதைக்
கொண்டாட வேண்டும் என்றவன் உதை வாங்கினான்.

செந்திலின் தாடியை எடுப்பதற்கான மந்திரம் இப்போது தெரிந்துவிட்டது, ஆனால் இதில்
நாங்கள் செய்யக்கூடியது எதுவும் இல்லை, அவனைக் காதலிப்பதற்கு யார் கி
டைப்பார்கள் ? கண்ணைத் திறந்துகொண்டு படுகுழியில் விழுவதற்கு எந்தப்பெண்ணாவது
சம்மதிப்பாளா ? செந்திலின் தாடியிடம் நாங்கள் தோற்றுப்போனதை ஏமாற்றத்தோடு
ஒப்புக்கொண்டோம்.
இப்படியாக, செந்திலின் தாடிநீக்கும்திட்டம் பாதி வெற்றி, பாதி தோல்வியோடு
முடிவடைந்தது.

*********

இது நடந்து ஒன்றிரண்டு மாதங்கள் கழிந்திருக்கும். செந்திலின் டிபார்ட்மென்ட்டில் புதிதாக
பத்துபேர் சேர்ந்தார்கள். எல்லோரும் நேராக கல்லூரியிலிருந்து வேலைக்கு வந்தி
ருப்பவர்கள் என்பதால், அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் பொறுப்பு இவன் தலையில் வி
ழுந்தது.
ஜாலியாக நினைத்த நேரத்தில் ஆஃபீஸ் போய்க்கொண்டிருந்தவன், ஒன்பது மணிக்கு
க்ளாஸ் ஆரம்பிக்க வேண்டும் என்பதால், ஒரு பாலோடு காலை உணவை
முடித்துக்கொண்டு, ஆஃபீஸர் கணக்காய் டையில் கழுத்தை
மாட்டிக்கொண்டு அலுவலகத்துக்கு ஓட ஆரம்பித்தான், ராத்திரி தாமதமாய்த் திரும்பி வந்து
கொஞ்சமாய் சாப்பிட்டுவிட்டு, ஃப்ளாஸ்க் நிறைய டீ போட்டு வைத்துக்கொண்டு
பரீட்சைக்குப் படிப்பவன்போல இரண்டரை மணிவரை அடுத்த நாள் சொல்லி
த்தரவேண்டிய பாடங்களைப் படித்துவிட்டு கொஞ்சூண்டு கோழித்தூக்கம்தான் தூங்கி
னான். அவனை நாங்கள் பார்ப்பதும் அவன் எங்களோடு பேசுவதுமே அரிதாகிவிட்டது.

இப்படி ஒருவாரம் கழிந்திருக்கும், ஒருநாள் ரொம்ப போரடித்ததால் ஆஃபீஸின் இ
ன்னொருமூலையில் உட்கார்ந்திருந்த செந்திலைப்பார்க்கப் போனேன், சீட்டுக்குப் பக்கத்தி
லேயே இருந்த க்ளாஸ்ரூமில் போர்டில் ஏதோ எழுதி விளக்கிக் கொண்டிருந்தான். அவன்
மேஜை மேல் உட்கார்ந்துகொண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா புரட்டினபடி கண்ணாடி வழி
யே அவனை கவனித்துக்கொண்டிருந்தேன். எப்போதாவது இந்தப்பக்கம் திரும்பினால் கூப்பி
டலாம்.
அப்போதுதான் அந்தப்பெண் என் பார்வையில் பட்டாள், கப்பல் கவிழ்ந்ததுபோல என்று
நம் ஊரில் சொல்வோமே, அதுபோல தாடைக்கு கைகளை ஸ்ட்ராங்காக
முட்டுக்கொடுத்துக்கொண்டு, மூன்றாவது வரிசையில் உட்கார்ந்திருந்தாள். கையில் மெல்லி
தான வளையல்கள் ஏகப்பட்டது மாட்டியிருந்தாள் - இருபது, முப்பது வளையலாவது இ
ருக்கும், வைத்தகண் வாங்காமல் செந்திலையே பார்த்துக்
கொண்டிருந்தாள் அவள், அவன் அங்கும், இங்கும் நகர்ந்தபோதெல்லாம் அவளுடைய
கண்கள்மட்டும் நகர்ந்தன, மற்றபடி அவள் அசையக்கூட இல்லை.

கொஞ்சநேரம் அவளைக் கண்காணித்துக்கொண்டிருக்கையில் செந்திலே என்னைப்
பார்த்துவிட்டான், வகுப்புக்கு சிறிய ப்ரேக் விட்டுவிட்டு என்னிடம் வந்தான், 'என்னடா இ
ந்தப்பக்கம் ?'
'சும்மாதான்' என்று சிரித்துவிட்டு, குரலைக் கொஞ்சம் இறக்கி, 'மூணாவது வரிசையிலே
ரெட் சுரிதார், கைநிறைய ஸ்டீல் வளையல், அந்தப் பொண்ணு யாருடா ?' என்றேன்.
நான் கேட்டதும் உடனே திரும்பாமல், சற்றுப்பொறுத்து இயல்பாக நோட்டமிடுவதுபோல
தலையைச் சுற்றிப்பார்த்தான். அந்தப்பெண் இப்போது எழுந்துநின்றிருந்தாள். செந்திலையே இ
ன்னும் பார்த்துக்கொண்டிருந்தாள். ஒருகையைக் கட்டிக்கொண்டு, இன்னொரு
கையால் அபிநயம் பிடிக்கிற பாவனையில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண்ணிடம் ஏதோ
பேசிக்கொண்டிருந்தாள் என்றாலும், கண்கள் அவனைவிட்டு சிறிதும் விலகவில்லை.
அவனும் அதை இப்போதுதான் கவனித்தான் போலிருக்கிறது, உடனே சமாளி
த்துக்கொண்டு, 'அவபேரு கவிதா' என்றான்.
'ஓ', அவள் இன்னும் இங்கேதான் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

'என்னடா, எதுக்கு திடீர்ன்னு அவளைப்பத்தி விசாரிக்கிறே ? டாவடிக்கிறியா ?'
என்றான் கண்ணடித்து.
'இல்லை, அவதான் உன்னை டாவடிக்கிறா-ன்னு நினைக்கிறேன்' என்று சொல்லிவி
ட்டு அவன் திகைப்பை மதிக்காமல் விறுவிறுவென்று நடந்து வந்துவிட்டேன். முதுகுக்குப்பி
ன்னால் அவன் திருதிருவென்று முழித்துக்கொண்டிருப்பதை கற்பனை செய்து ரசித்தேன்.

*********

பொதுவாக இந்தமாதிரி விஷயங்களில் நம் கணிப்புகள் பொய்யாய்ப் போவதில்லை. ஆண்பி
ள்ளைகள் எப்படியோ தெரியவில்லை, பெண்கள் என்னதான் முயன்றாலும் இந்த ரகசி
யத்தை மறைக்க முடியாது - அவர்களுடைய பார்வை ஒன்றே போதும், டைட்டிலிலி
ருந்து, சுபம் வரை எல்லாக் கதையும் சொல்லிவிடும். அந்தப் பெண்ணின் பார்வையில்
காதல் இருந்ததாக என்னால் நிச்சயமாக சொல்லமுடியவில்லைதான் - ஆனால் அது,
ஒரு அலுவலக நண்பனைப் பார்ப்பதுபோல் சாதாரணமாகவும் இல்லை. இதில்
என்னென்னென்னென்னமோ இருக்கிறது என்று தோன்றியது, சும்மா தூண்டில் வீசி
ப்பார்க்கலாமே என்று அவள் அவனைக் காதலிப்பதாக சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

அதன்பிறகு செந்தில் நிலைமைதான் பரிதாபமாகிப்போனது. நான் சொன்னதை நம்பவும்
முடியாமல், அலட்சியப்படுத்தவும் முடியாமல் தவித்தான். அவன் நம்புகிறானோ இ
ல்லையோ, எங்கள் வீட்டிலிருக்கிற அனைவரும் அதை நம்பிவிட்டார்கள், செந்திலை தைரி
யமாய் கிண்டலடிக்கவும் ஆரம்பித்தார்கள். இவைஎல்லாமே அவனுடைய இயல்புவாழ்க்கையை
பாதித்துவிட்டது உண்மை. ட்ரெய்னிங்கின்போது அவளை இயல்பாக பார்த்துப்பேச முடியவி
ல்லையாம், உள்ளே ஏதோ உறுத்திக்கொண்டே இருப்பதாக எங்களிடம் வெளிப்படையாக
ஒப்புக்கொண்டான். அவள் என்ன சொன்னாலும் வேறு ஒரு அர்த்தம் யோசிக்கத்
தோன்றுகிறதாம், 'எப்போடா ட்ரெய்னிங் முடியும்-ன்னு இருக்கு' என்று புலம்பினான்.

கஷ்டங்கள் எப்போதும் மெகாசீரியல்கள்போல - ஒன்றோடு நிற்பதில்லை, ஏழெட்டு கஷ்
டங்கள் ஒரே நேரத்தில் தலைமேல் கவிழ்ந்து எழுந்திருக்கமுடியாதபடி அடித்துவிடும். செந்தி
ல் எதிர்பார்த்தபடி ட்ரெய்னிங் முடிந்தது, ஆனால் கவிதா, செந்தில் இருக்கிற அதே
ப்ராஜக்ட்டில் சேர்ந்தாள். நாள்முழுக்க அவன் பக்கத்தில் உட்கார்ந்து வேலைபார்க்க
ஆரம்பித்தாள், செந்தில் தலையைப் பிய்த்துக்கொள்கிற அளவுக்குப் போய்விட்டான்,
போதாக்குறைக்கு கவிதா அவனோடு ஒரே ப்ராஜக்ட்டில் வேலை செய்யவேண்டும் என்று
மேனேஜரிடம் பிடிவாதம்பிடித்து வாங்கியதாக நாங்கள் ஒரு வதந்தியைக் கிளப்பிவிட்டோம்.
உலகம் அதை அநியாயத்துக்கு நம்பிவிட்டது - செந்திலை யார்பார்த்தாலும் முதலில் கேட்கி
ற கேள்வி, 'என்னடா, கவிதா சௌக்யமா ?' என்பதுதான்.

காதலில் ஊருக்குத் தெரியாத ரகசியம் ஒன்று உண்டு, கண்ணும், கண்ணும் சேர்ந்தோ,
மனதும், மனதும் சேர்ந்தோ காதல் பிறப்பது பாதி கேஸ்களில்தான் நடக்கிறது, மீதி
யெல்லாம் செந்தில்கதைதான், பக்கத்தில் இருக்கிறவர்கள், 'மச்சான், அந்தப் பொண்ணு
உன்னையே பார்க்கிறாடா', 'செக்குமாடு மாதிரி அவன் உன்னையே சுத்திச் சுத்தி
வரான்டி', 'அன்னிக்கு கோயில்ல உன் பேர்ல அவ அர்ச்சனை பண்ணிகிட்டிருந்ததைப்
பார்த்தேன்', 'ரெண்டுபேருக்கும் கவுண்டமணி, செந்தில் காமெடி பிடிச்சிருக்கு -
நீங்கதான் பொருத்தமான ஜோடி' என்றெல்லாம் ஏற்றிவிடுவதில் கிறங்கிப்போய்விடுகி
றார்கள்.
நண்பர்கள் பேசுகிற எதற்கும் இரண்டாவது அர்த்தம் உண்டு என்பது அந்த மயக்கத்தி
ல் அவர்கள் புத்திக்குத் தெரிவதில்லை. உதாரணமாய், மேலே சொன்ன வாக்கியங்களி
லேயே, முதல் வாக்கியத்தில் அந்தப்பெண்ணுக்கு லேசான ஒன்றரைக்கண் இருக்கலாம், இ
ரண்டாவது வாக்கியத்தில் அந்தப் பெண்ணின் முகத்தில் செக்குபோல எண்ணை
வடிவதை தோழி கிண்டலடிக்க நினைத்திருக்கலாம், மூன்றாவது வாக்கியத்தில் சாமி
பேரும் அவன் பேரும் ஒன்றாக இருந்து, அந்தப்பெண் சாமிக்கு அர்ச்சனை செய்தி
ருக்கலாம், நான்காவது வாக்கியம் சுத்தமான பிதற்றல் - கவுண்டமணி-செந்திலை ரசிக்கி
றவர்கள் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். ஆனால் இந்த
உள்ளர்த்தங்களெல்லாம் தெரியாதபடி சம்பந்தப்பட்டவர்கள்மனதில் காதல் நீக்கமற நி
றைந்துவிடுகிறது. தானாய் வலையில் மாட்டிக்கொள்கிறார்கள்.

கூடிய சீக்கிரத்தில் செந்தில் கவிதாவைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டான். அதுவாவது
பரவாயில்லை, அவளும் அவனைக் காதலிக்கிறாள் என்று திடமாய் நம்ப ஆரம்பித்துவி
ட்டான். ஆஃபீஸில் அவன் அவளிடம் பேசும் தோரணையே மாறிவிட்டது, நிறைய உரி
மை எடுத்துக்கொண்டு அவளை கிண்டலடிக்கவோ, அதிகாரம் செய்யவோ ஆரம்பி
த்தான், அவளும் பதிலுக்கு அப்படியே பேசவேண்டும் என்று எதிர்பார்த்து ஏமாந்தான் -
அவள் அடங்கி ஒடுங்கி பவ்யமாய் சீனியருக்குரிய மரியாதையோடு அவனிடம் பழகிக்
கொண்டிருந்தாள். தன்முயற்சியில் தளராத விக்கிரமாதித்தன் கணக்காய் செந்தில்
தொடர்ந்து முயன்று, சறுக்கி விழுந்துகொண்டிருந்தான். அவனைப்பார்க்கப்பார்க்க
எங்களுக்கெல்லாம் சிரிப்பாய் இருந்தது.

முன்னமே சொல்லியிருக்கிறேன் - செந்தில் விஷயத்தில் எப்போதும் நாங்கள் எதி
ர்பார்ப்பதற்கு நேர் எதிராகத்தான் நடக்கும், அப்படி ஒரு ராசி அவனுக்கு. ஒருநாள் நான்
ஆஃபீஸிலிருந்து களைத்துப்போய் திரும்பி வந்தபோது யாரோ ஹாலில் உட்கார்ந்து
குமுதம் படித்துக்கொண்டிருந்தார்கள். என்னைப்பார்த்ததும் நிமிர்ந்து, 'ஹாய்' என்றார்
(ன் ?).,
நானும் பதிலுக்கு சிரித்துவிட்டு அவரை அடையாளம் கண்டுகொள்ளாத பாவனையி
ல், 'நீங்க ...' என்று இழுத்தேன். 'டேய் பாவி, நான்தாண்டா செந்தில்' என்றான்
முகம்முழுக்க வெட்கச்சிரிப்புடன், கடவுளே, அவன் தாடி எங்கே போனது ?

(தொடரும்)