From nagas baan@... Fri Mar 01 06:27:26 2002
Return-Path: X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 1 Mar 2002 14:27:26 -0000
Received: (qmail 6217 invoked from network); 1 Mar 2002 14:27:26 -0000
Received: from unknown (216.115.97.172) by m6.grp.snv.yahoo.com with QMQP; 1 Mar 2002 14:27:26 -0000
Received: from unknown (HELO n5.groups.yahoo.com) (216.115.96.55) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 1 Mar 2002 14:27:25 -0000
Received: from [216.115.96.133] by n5.groups.yahoo.com with NNFMP; 01 Mar 2002 14:27:02 -0000
Date: Fri, 01 Mar 2002 14:26:52 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: KaaLi Kovil Poosaari - 4
Message-ID: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 5886
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "nchokkan" X-Originating-IP: 203.195.223.210
X-Yahoo-Group-Post: member; u=8108360
X-Yahoo-Profile: nchokkan
X-Yahoo-Message-Num: 16357
********************
காளி கோயில் பூசாரி - 4
********************
அதிர்ச்சியில் இரண்டடி பின்னால் போய்விட்டேன். என்னால் சுத்தமாய் நம்ப முடியவி
ல்லை. கண்பரிசோதனைக்கு வந்தவன் போல கண்களைச் சுருக்கியும், விரித்தும்
என்முன்னே நின்ற முகத்தை திரும்பத் திரும்ப பார்த்தேன், தாடியில்லாத செந்தி
ல்போலதான் இருக்கிறது - செந்திலின் தம்பி என்றால் கேள்விகேட்காமல் நம்பலாம்,
ஆனால் தாடியில்லாமல் செந்திலா ? இது எப்படி சாத்தியம் ? குரல் அடையாளம்
காட்டினாலும், கண் அந்த முகத்துக்குப் பழக மறுத்தது.
'செந்தில், நீயேதானா ?' என்றேன் சந்தேகமாய்.
'நானேதாண்டா, இப்போதான் ஷேவ் பண்ணினேன்' என்று பழைய ஞாபகத்தில் தாடி இ
ருந்த இடத்தைத் தடவிக் கொண்டான், அங்கே ஒரு மெகாதாடி இருந்ததற்கான தடயங்களே இ
ல்லை, மழுங்க மழுங்க மழித்திருக்கிறான். பாத்ரூமினுள் அநேகமாய் திருப்பதியில்
மொட்டையடிக்கிற ஏரியா அளவுக்கு முடி சிதறிக்கிடக்கும் என்று ஊகித்தேன்.
இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. தாடியில்லாமல் அவன் முகம் ஏதோ குறைபட்ட
சோனிக்குழந்தைபோலவும், காற்று இறங்கிய கால்பந்துபோலவும் சுருங்கிப்போயிருந்தது. இ
தற்காகத்தான் இத்தனைநாளாய் ஆசைப்பட்டு தெஹல்கா ரேஞ்சுக்கு திட்டமெல்லாம்
போட்டோம், என்றாலும் அந்த தாடி போய்விட்டபிறகு கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது.
அப்போதுதான் திடீரென்று நினைவுக்கு வந்தது, 'ஏஏஏய்' என்று என் உற்சாகத்தைக்
கட்டுப்படுத்தமுடியாமல் அலறினேன், 'யாராவது உன்னை லவ் பண்ணினாதான்
தாடியை எடுப்பேன்-னு சொன்னியே' என்றேன்.
புதுமணப்பெண்போல தலைகுனிந்துகொண்டான் அவன், காதலிப்பவர்களின் பூர்வீக
சொத்தான அசட்டுச் சிரிப்பு அவன் உதடுமுழுக்க ஆக்கிரமித்திருந்ததைப் பார்த்தேன், ரசி
த்தேன், 'ஏய், கமான் ய்யார், சொல்லு என்ன விஷயம் ?' என்றேன்.
அவன் நிமிர்ந்து என்னைக் கொஞ்சலாகப் பார்த்தான். 'தெரியாதமாதிரி கேட்காதேடா'
என்று சிணுங்கினான்.
என் ஆவல் இன்னும் அதிகமாகிவிட்டது, 'ஹேய், நிஜமா தெரியாது செந்தில், என்ன
விஷயம் சொல்லு' என்றான்.
அவன் தலையசைத்து மறுத்தான். 'சொல்ல முடியாது, நீயே கெஸ் பண்ணு' என்று பி
டிவாதம் பிடித்தான், செருப்பைக்கூட கழற்றாமல், கால்மணிநேரம் தொடர்ந்து
தொல்லைப்படுத்தியபிறகு, 'கவிதா' என்று ஒரே ஒரு வார்த்தை சொல்லிவிட்டு பாரதி
ராஜாவின் கதாநாயகிபோல் முகத்தை மூடிக்கொண்டு உள்ளே ஓடிவிட்டான். நான் அதி
ர்ச்சிமேல் அதிர்ச்சியாய் விழுவதை நம்பமுடியாமல் திகைத்து நின்றிருந்தேன்.
பையன்கள் எல்லாம் ஒவ்வொருவராய் ஆஃபீசிலிருந்து திரும்பி வந்து, உலக அதி
சயத்தைப்பார்ப்பதுபோல செந்திலின் முகத்தைக் கண்டு வாய்பிளந்து நின்றார்கள். பிறகு
எல்லோரும் சேர்ந்துகொண்டு அவனைப் பிய்த்து எடுத்துவிட்டோம், உடைந்த கிரிக்கெட்
பேட், அன்றைய ஹிண்டு பேப்பர், போர்வை, தலையணை போன்ற மி
தஆயுதங்கள்கொண்டு மிரட்டியபிறகு பாதி சிரிப்பும், பாதி கூச்சமுமாய் கவிதா அவனைக்
காதலிக்கிற விஷயத்தைச் சொன்னான். அவன் முகம் நன்றாக சிவந்திருந்தது. செந்தி
ல்போல ஒரு ஆஜானுபாகுவான ஆண்பிள்ளை வெட்கப்படுவதைப்பார்க்க
வேடிக்கையாய் இருந்தது.
'நீ முதல்ல சொன்னியா, அவளா ?' நான் விடாமல் கேட்டேன். அவன்தான்
சொன்னான் என்று தெரிந்தால், 'நானாய் யாரையும் காதலிக்க மாட்டேன்'
என்று அன்றைக்கு அளந்துவிட்டதைக் கிண்டலடிக்கலாம்.
'கவிதாதான்' என்று சொல்லிவிட்டு, தலையணையின் கீழிருந்து பிளாஸ்டிக் சுற்றிய
ரோஜாப்பூக்களை எடுத்துக் காட்டினான். 'ஓஓஓஓ' என்று காலனியே அதிரும்படி சத்தமி
ட்டோம்.
*********
மறுநாள் மதியம் சாப்பிடலாமா, வேண்டாமா என்று நான் யோசித்துக்கொண்டிருந்தபோது
செந்தில் என்னைத்தேடி வந்தான். அவன் கண்கள் நன்றாக சிவந்திருந்தது. அழுதி
ருப்பான் போல தெரிந்தது. 'டேய், என்னடா இது ?' என்றேன்.
அவன் என்னை கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு கேன்ட்டீனுக்கு வந்தான். ஆளுக்கு ஒரு
காபி வாங்கிக்கொண்டு உட்கார்ந்த அடுத்தவிநாடி, 'கவிதா என்னை பயங்கரமா தி
ட்டிட்டாடா' என்றான் அழாக்குறையாக.
ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வதும், அடித்துக்கொள்வதும், பார்ப்பவர்களை
முட்டாளாக்கும்படி அடுத்த மூன்றாவது மணிநேரத்தில் காற்றுக்கூட இடையில்புகமுடியாதபடி
கொஞ்சிக்கொள்வதும் திருவள்ளுவர் காலத்திலிருந்து காதலில் சகஜம் என்பது தெரியும்.
ஆனால் காதலிக்க ஆரம்பித்த இரண்டாவது நாளிலேயே சண்டையா ?
'என்னடா சண்டை ?' என்றேன் சற்றே அலுப்புடன். அதற்கு செந்தில் சொன்ன பதி
லை என்னால் என்றைக்கும் மறக்கமுடியாது.
'உன்கிட்டே எனக்குப் பிடிச்சதே அந்த தாடியும், மெச்சூரிட்டியும்தான், அதை
எடுத்துட்டு இப்படி சோமாலியா சின்னப்பையன்மாதிரி வந்து நிக்கறியே-ன்னு திட்றாடா'
என்றான். தொடர்ந்து, 'திரும்ப தாடி இல்லாம என்முன்னாலே வராதே-ன்னு கண்டிப்பா
சொல்லிட்டா' என்றான் பரிதாபமாய். நெடுநாள் காத்திருந்து பறித்த பழம் திடீரென்று கையி
லிருந்து குதித்து ஓடிப்போய்விட்டதைபோன்ற ஏமாற்றம் அவன்முகத்தில் படர்ந்திருந்தது.
**********
'அழிக்கிற கைதான் வளர்க்கும்' என்று புதுமொழியே சொல்லும் அளவுக்கு செந்தில்
தாடியை மொத்தமாக அழிப்பதற்குத் திட்டமிட்ட நாங்களே, இப்போது அதை வளர்ப்பதற்கு
பாடுபட்டோம். மூலிகை மணியிலிருந்து குமுதம் ஹெல்த்வரை இருக்கிற எல்லா மருத்துவப்
பத்திரிக்கைகளையும், ஒன்றரையணா பஸ்நோட்டீஸ் மருத்துவர்(?)கள்முதல், ஃபோனில்
ஆலோசனை சொல்கிற தூர்தர்ஷன் டாக்டர்வரை எல்லா நிபுணர்களையும் பிய்த்துப்பி
டுங்கி விரைவாக தாடி வளர்ப்பதற்கு மருந்துகளும், எண்ணைகளும்
கொணர்ந்துசேர்த்தோம், அதையெல்லாம் தடவித்தடவி செந்திலின் தாடையே பளபளப்பாகி
விட்டது, உரம்போட்டு வளர்க்காதகுறையாக மூன்றாவது வாரத்தில்
முன்போலவே அவனுடையதாடி வளர்ந்துவிட்டது. அவனும் கவிதாவும் மீண்டும்
நெருக்கமாகிவிட்டார்கள்.
இந்த தாடிவளர்ப்புப் படலத்தில் எங்களுக்குக்கி
டைத்த அனுபவங்களையெல்லாம், 'முப்பதுநாளில் முனிவர்தாடி வளர்ப்பது எப்படி'
என்று மணிமேகலைப்பிரசுரத்திலிருந்து எழுதக் கேட்டிருக்கிறார்கள். பிற்காலத்தில் எங்களில்
யாருக்காவது பெரிதாய் தாடி வளர்க்க ஆசைவந்தால் கவலையே இல்லை, ஊ
ரான்தாடியை இந்தஅளவு ஊட்டி வளர்த்திருக்கிறோமே, எங்கள்தாடி தானாய் வளராதா
என்ன !
நிற்க. செந்தில் இப்போதும் பழையபடி தாடியுடன் பூஜைகள் செய்கிறான். ஆனால் இ
ப்போதெல்லாம் அவனை நாங்கள் 'கவிதா கோயில் பூசாரி' என்று கூப்பிடுகிறோம்.
***
அவசியமான பின்குறிப்பு : இந்தக்கதை முழுக்கமுழுக்க கற்பனையே, யாரையும்
புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டதல்ல ... கொஞ்சம் நீளமாகிவிட்டாலும்,
பொறுத்துக்கொண்டு படித்தமைக்கு நன்றி :-)