From perichandra@... Fri Mar 01 07:37:31 2002
Return-Path:
X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 1 Mar 2002 15:37:30 -0000
Received: (qmail 43561 invoked from network); 1 Mar 2002 15:37:30 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 1 Mar 2002 15:37:30 -0000
Received: from unknown (HELO n35.groups.yahoo.com) (216.115.96.85) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 1 Mar 2002 15:37:30 -0000
Received: from [216.115.96.118] by n35.groups.yahoo.com with NNFMP; 01 Mar 2002 15:36:46 -0000
Date: Fri, 01 Mar 2002 15:36:24 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Thyagaraja's Kritis
Message-ID:
In-Reply-To: <3.0.3.32.20020301200847.00729a20@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1424
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra"
X-Originating-IP: 66.56.78.233
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 16360

--- In agathiyar@y..., jaybee wrote:
> At 07:01 AM 3/1/02 +0530, you wrote:
>
> சேஷாத்ரி என்பவர் ஓஸ்மானியா பல்கலைக் கழகத்தின்
> பொருளதிகாரியாக இருந்தவர். தியாகையரின் மீது ஆழ்ந்த
> ஈடுபாடு கொண்டவர். பல தியாகராஜ ஆராதனைகளில் பங்கேற்று
> உரைகள் நிகழ்த்தியவர்.
> தியாகையரின் கிருதிகளை பேருரைகளுக்காக
> ஆராயும்போது அவருக்கு ஒரு விசயம் புலனாகியது.

திரு. தி.நா. (TN) சேசகோபாலன் அவர்களுக்குப் புலனானது:
தியாகராசர் கம்பராமாயணம் கற்றிருக்கவேண்டும் என்பது.
கம்பனில் மட்டுமே பயிலும் சில செய்திகளைத் தியாகராசர்
தம் பாடல்களில் பாடியுள்ளார் என்று சொன்னார் இரண்டாண்டுகள் முன்பு.

எனவே தியாகராசருக்குத் தமிழ்மொழி தெரியாது என்று சொல்வது
இன்னும் மெலிகிறது. தமிழகத்தின் நட்ட நடுவே வாழும் குடும்பத்திற்கு
அதுவும் தமிழருக்கே உரிய இசையில் துறைபோகவேண்டுமென்றால்
உள்ளூரில் கற்க வேண்டிய ஒரே மொழி தமிழ்மொழி. அதுவும் இவருக்கு முன்பு
தெலுங்கில் தமிழிசைப் படைப்புகள் என்று சொல்லிக்கொள்ளும் அளவு பெரிதாக
ஒன்றும் இல்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.



தெலுங்கு மூவருள் (தியாகர்/முத்துச்சாமி) ஒருவர் ஆற்று வெள்ளந்தணியப் பாடிய நிகழ்ச்சியும்
இந்தத் தெலுங்கு மூவருக்கும் முந்தைய சீகாழி மூவருள் ஒருவருக்கு நிகழ்ந்ததாக உண்டு:
மாரிமுத்தாப் பிள்ளையோ முத்துத்தாண்டவரோ நினைவில்லை.
அதுவும் முன்பே இருந்த தமிழர் ஒருவரினின்று பின்வந்தவர்மேல் ஏற்றிக் கூறியுள்ளார்கள்
என்பதில் ஐயமில்லை.

அன்புடன்
பெ.சந்திரசேகரன்