From harikris@... Fri Mar 01 15:00:07 2002
Return-Path:
X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 1 Mar 2002 23:00:06 -0000
Received: (qmail 83912 invoked from network); 1 Mar 2002 23:00:06 -0000
Received: from unknown (216.115.97.172) by m9.grp.snv.yahoo.com with QMQP; 1 Mar 2002 23:00:06 -0000
Received: from unknown (HELO smtp02.vsnl.net) (203.197.12.8) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 1 Mar 2002 23:00:05 -0000
Received: from harikris ([203.199.240.67]) by smtp02.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GSBH8101.8FP for ; Sat, 2 Mar 2002 04:30:01 +0530
Message-ID: <004601c1c175$3edd27e0$43f0c7cb@harikris>
To:
Subject: Thamizh Thaaththa kAttum madha nalliNakkam
Date: Sat, 2 Mar 2002 04:31:07 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2314.1300
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
X-eGroups-From: "Hari Krishnan"
From: "Hari Krishnan"
X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Profile: harikrishnan61
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 16363


இறைவன் பெயரைச் சொல்லிக்கொண்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டும், கொன்று குவித்துக் கொண்டும் இருக்கும் இன்றைய சூழல் மனத்தில் ஆழமான துயரத்தை ஏற்படுத்துகிறது. இதில் யார் சரி, யார் தவறு, யார் முதலில் அடித்தார்கள், யார் முதன்முதலில் அடித்தார்கள், யார் அதற்கு முன்னால் அடித்தார்கள் என்பனவெல்லாம் தேவையற்ற கேள்விகள். இரு தரப்பிலும் ரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது. இளம் தளிர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வன்முறை தவறானது. கண்டிக்கப்பட வேண்டியது - எந்தத் தரப்பைச் சேர்ந்ததாக இருந்தாலும். எந்தக் காரணத்துக்காக ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும். நீதிபதி மு. மு. இஸ்மாயில் போன்றவர்களுடைய ஆழ்ந்த கம்பராமாயணப் பயிற்சிநமக்குப் பிரமிப்பை உண்டாக்கியிருக்கிறது. ஆனால் அவர் மட்டுமேயல்லர். நம்நாட்டில் எத்தனையோ அன்பர்கள் அவரைப்போன்றிருந்திருக்கிறார்கள். தமிழ்த்தாத்தாவின் 'என் சரித்திரத்'திலிருந்து பின் வரும் பத்தியை மத நல்லிணக்கத்திற்குக் காணிக்கையாக்குகிறேன்.

{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~
களத்தூர் முகம்மதியர்

சில நாட்களில் அருகில் உள்ள ஊர்களுக்குச் சொன்று முன்பே ழுழக்கமானவர்களைப்பார்த்து வருவேன். ஒருநாள் களத்தூருக்குச்சென்றேன். அங்கே தமிழ் படித்த முகம்திய வயோதிகர் சிலர் இருந்தனர். அவர்களோடு பேசுகையில் அவர்களுக்கிருந்த தமிழபிமானத்தின் மிகுதியை உணர்ந்து வியந்தேன். கம்பராமாயணம், அரிச்சந்திர புராணம் முதலிய பல நூல்களில் பல அரிய பாடல்களை அவர்கள் சொல்லும்போதே அவர்களுக்கு அப்பாடல்களில் எவ்வளவு ஈடுபாடு உண்டென்பது புலப்படும். நான் பிள்ளையவர்களிடத்தில் இருந்தத அறிந்தவர்களாதலின் என்பால் வந்து அவர்கள் மொய்த்துக் கொண்டார்கள். ஆசிரியர் புகழையும், கவித்துவ சக்தியையும் கேட்டுக் கேட்டு மகிழ்ந்தனர். சாதி, மதம் முதலிய வேறுபாடுகள் அவர்களுடைய தமிழனுபவத்துக்கு இடையூறாக நிற்கவில்லை. தமிழ்ச்சுவையை நுகர்வதில் அவர்கள் உள்ளம் என் உள்ளத்தைக் காட்டிலும் அதிக முதிர்ச்சியைப் பெற்றிருந்தது.

{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~{}~

மார்ட்டின் லூதர் கிங்கைப் போல் 'எனக்கொரு கனவுண்டு' என்று உரத்துக் கூவ வேண்டும்போலிருக்கிறது.

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.



[Non-text portions of this message have been removed]