From ganapathi s@... Fri Mar 01 15:29:31 2002
Return-Path:
X-Sender: ganapathi s@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 1 Mar 2002 23:29:31 -0000
Received: (qmail 70398 invoked from network); 1 Mar 2002 23:29:30 -0000
Received: from unknown (216.115.97.172) by m10.grp.snv.yahoo.com with QMQP; 1 Mar 2002 23:29:30 -0000
Received: from unknown (HELO mailweb17.rediffmail.com) (203.199.83.141) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 1 Mar 2002 23:29:29 -0000
Received: (qmail 10307 invoked by uid 510); 1 Mar 2002 23:27:20 -0000
Date: 1 Mar 2002 23:27:20 -0000
Message-ID: <20020301232720.10306.qmail@...>
Received: from unknown (12.235.67.33) by rediffmail.com via HTTP; 01 Mar 2002 23:27:20 -0000
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: [agathiyar]Is this freedom for?
Content-type: text/plain; charset=iso-8859-1; format=flowed
Content-Transfer-Encoding: 8bit
Content-Disposition: inline
From: "Madhurabarathi"
Reply-To: "Madhurabarathi"
X-Yahoo-Group-Post: member; u=83645613
X-Yahoo-Message-Num: 16364


சுதந்திரம் இதற்குத்தானா?
==================

நெருப்பினைத் தொழுவரேனும்
நீர்க்கடன்செய்வரேனும்
அருகமா மதத்தரேனும்
அன்றியிவ் வுலகின்மீது
பரவிய கணக்கிலாத
பாதைகள் எவற்றையேனும்
மருவுவர் ஆவரேனும்
மற்றதன் மூலவேராய்

நிற்பது நேயமன்றோ?
நினைவினின் றகலப்போமோ!
புற்பதரின்றி முற்றப்
பொசுங்கிய மனத்தினோர்க்கு
கற்பகத் தருவும் காம
தேனுவும் கிடைத்தபோதும்
சொற்பமும் நன்மை உண்டோ
சுகமுடன் அமைதி உண்டோ.

கலைகளின் பேராற் சண்டை
கட்சியிற் சண்டை, பெற்ற
தலைவனின் பேரால் சண்டை
சாதியின் பேரைச் சொல்லி
தலைகளைக் கொய்தே வீசும்
சண்டைகள் நித்தம் உண்டு
துலையிலே நிறுத்துப் பார்ப்பீர்,
சுதந்திரம் இதற்குத் தானா!


மனம் வெதும்பி

மதுரபாரதி