From harikris@... Fri Mar 01 16:43:47 2002
Return-Path:
X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 2 Mar 2002 00:43:47 -0000
Received: (qmail 79121 invoked from network); 2 Mar 2002 00:43:46 -0000
Received: from unknown (216.115.97.172) by m6.grp.snv.yahoo.com with QMQP; 2 Mar 2002 00:43:46 -0000
Received: from unknown (HELO smtp02.vsnl.net) (203.197.12.8) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 2 Mar 2002 00:43:46 -0000
Received: from harikris ([203.199.240.65]) by smtp02.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GSBM0T03.UEQ for ; Sat, 2 Mar 2002 06:13:41 +0530
Message-ID: <00c901c1c183$b3e9b900$43f0c7cb@harikris>
To:
Subject: jeyangkoNtaar and ottakkUththar
Date: Sat, 2 Mar 2002 06:14:22 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2314.1300
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
X-eGroups-From: "Hari Krishnan"
From: "Hari Krishnan"
X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Profile: harikrishnan61
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 16368

அன்புள்ள நாக. கணேசன்,

"தேவாரம் தவிர தமிழ் நூல்களில் வேறு எதிலாவது ஆரூர் தியாகராசர் பற்றியவிவரம் காணப்படுகிறதா? ஒட்டக்கூத்தர் ஆரூர் தியாகராசர் பற்றி கூறும் வரிகளை எவறேனும் வெளியிட முடியுமா?" என்று வித்யா அவர்கள் கேட்டிருந்தார்கள். அது தொடர்பாக ஒட்டக்கூத்தரின் மூவருலாவைப் புரட்டிக்கொண்டிருந்தேன். விக்கிரம சோழனுலாவில் பின்வரும் அடிகளுக்கு-

முட்டிய தெவ்வர் சடைகட்ட மொய்கழல்
கட்டிய காரனைக் காவலனும் ... (85)

உரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது. (கலாக்ஷேத்திரா பதிப்பு [1952], பதிப்பாசிரியர் ருக்மணிதேவியார். உரையாசிரியர் பெயர் தெரியவில்லை. "பழைய உரை குறிப்புரைகளுடன்" என்று காணப்படுகிறது.)

"காரானை: இப்பெயருள்ளது கச்சியூர் நாட்டைச் சேர்ந்த ஓர் ஊரென்று காஞ்சீபுரம் சாஸனம், 468 of 1919 கூறுகிறது. பிற்காலத்தில் 'காரனை விழுப்பரையர்' என்பாரொருவர் மாறவர்மன் சுந்தர பாண்டியனுடையவாயிற் புலவராக விளங்கியவரென்பதுபாண்டி நாட்டுப் பெருச்சிகோயில் என்ற ஊரிலுள்ள சிவாலயத்துச் சாஸனத்தால்அறியப்படுகிறதென்பர். (சாஸனத் தமிழ்க் கவிசரிதம் 105) 'காரானை விழுப்பரையன் மடல்' என்னும் நூல் ஒன்றும் உண்டு."

உடனே ஜெயங்கொண்டாருடைய காலத்தைப் பற்றிய கேள்வி மனத்தில் எழுந்தது. உரையில்தானே இந்தக் குறிப்புக் காணப்படுகிறது என்று மேலும் புரட்டினால், குலோத்துங்க சோழனுலாவில்

"விரும்பரணில் வெங்களத்தீ வேட்டுக் கலிங்கப்
பெரும்பரணி கொண்ட பெருமான்" (28)

என்று நேரடியாக ஜெயங்கொண்டாரைப் பற்றிய குறிப்பு கிடைத்தது. ஜெயங்கொண்டாரின் காலம் என்ன? ஒட்டக்கூத்தருக்குச் சமகாலத்தவரா அல்லது முற்பட்டவரா?

அன்புள்ள,
ஹரி கிருஷ்ணன்.



[Non-text portions of this message have been removed]