From arull@... Fri Mar 01 16:46:57 2002
Return-Path: X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 2 Mar 2002 00:46:57 -0000
Received: (qmail 91000 invoked from network); 2 Mar 2002 00:46:56 -0000
Received: from unknown (216.115.97.171) by m10.grp.snv.yahoo.com with QMQP; 2 Mar 2002 00:46:56 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 2 Mar 2002 00:46:56 -0000
Received: from tm.net.my (kmr-146-234.tm.net.my [203.106.146.234]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GSB0056CM608B@...> for agathiyar@yahoogroups.com; Sat, 02 Mar 2002 08:46:50 +0800 (SGT)
Date: Sat, 02 Mar 2002 08:44:10 +0800
Subject: திருமுறைத் தியானம்
To: "agathiyar@yahoogroups.com" Message-id: <3C802059.CBEC4749@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார் X-Yahoo-Group-Post: member; u=21400202
X-Yahoo-Message-Num: 16369
மண் பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
விண் பொருந்து தேவர்க்கும் வீடு பேறாய் நின்றானைப்
பண் பொருந்த இசை பாடும் பழனம் சேர் அப்பனை என்
கண் பொருந்தும் போதத்தும் கைவிட நான் கடவேனோ.
இந்நிலவுலகில் அறங்களைப் பொருந்தச் செய்து வரும்
இல்லறத்தார்க்கும், வேதங்கள் ஓதி மேன்மைகளை
விளைவிக்கின்ற வேதியர்க்கும், விண்ணுலகில் பொருந்தி
வாழ்கின்ற தேவர்களுக்கும், புகலிடமாகவும் வீட்டுப்
பேறாகவும் விளங்குகின்ற பழனத்துப் பெருமானை, கண்
உறங்குங் காலத்தும் மறவாது கை தொழுவேன் - தொழ மறந்து
ஒருபோதும் அத்தலைவனைக் கைவிடேன்.