From naga ganesan@... Fri Mar 01 16:51:04 2002
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 2 Mar 2002 00:51:04 -0000
Received: (qmail 87576 invoked from network); 2 Mar 2002 00:51:02 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 2 Mar 2002 00:51:02 -0000
Received: from unknown (HELO n11.groups.yahoo.com) (216.115.96.61) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 2 Mar 2002 00:51:02 -0000
Received: from [216.115.96.112] by n11.groups.yahoo.com with NNFMP; 02 Mar 2002 00:51:02 -0000
Date: Sat, 02 Mar 2002 00:50:59 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Poem from Dalit Magazine
Message-ID: In-Reply-To: <20020226090314.54147.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2303
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 209.144.25.119
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16370
தமிழில் முக்கிய வரவாகக் கணிக்கப்படும்
ஒடுக்கப்பட்டோர் இலக்கியங்கள் இன்னும் பரவலாகக்
கணிக்கப்படல் வேண்டும். சங்க இலக்கியத்தில்
இழிபிறப்பாளன், இழிசினன் என்றெல்லாம்
புறந்தள்ளப்பட்டவர்கள்.
பழைய இழை:
http://groups.yahoo.com/group/agathiyar/message/11139
http://groups.yahoo.com/group/agathiyar/message/11165
http://groups.yahoo.com/group/agathiyar/message/11191
http://groups.yahoo.com/group/agathiyar/message/11197
http://groups.yahoo.com/group/agathiyar/message/11195
--- In agathiyar@y..., Shaboo wrote:
>
> நிசும்ப சூதனி - ராகு கால காளி
> ===========================
>
> அண்ணாந்து பார்க்கும்
> கோபுரத்தில்
> அமர்ந்திருக்கிறான்
> சிவன்
>
> அகழிகளில்
> நடந்து கொண்டிருப்பதோ
> விபச்சாரம்
>
> ஆடற்கலை செழித்த
> ஆரண்மனை
> திட்டுகளில்
> ஊனக் கால்களோடு
> பிச்சைக்காரிகள்
>
> வெட்ட வெளி பொட்டல்
> வேகாத வெய்யில்
> நட்டநடு நிசியில்
> கொட்டும் மழையில்
>
> கூரையற்ற காளி
> குடையாகிக் காக்கிறாள்
> பூஜை புனஸ்காரமோ
> அங்காள பரமேஸ்வரிக்கு
>
> கர்நாடக கரையில்
> கமண்டலம்
> கவிழ்த்த காக்கை
> சோழ எல்லலையில்
> பறக்காமலில்லை
>
> காவிரியோரம்
> கொக்கு சுடுவதை
> நிறுத்தி விட்டு
> காக்கைக்கு குறி
> வைக்கும் உழவர்கள்
>
> சூலமேந்தும் காளியின்
> சுடர் விழியில்
> நீட்டும் நாக்கில்
> மன்னிப்பெழுதிப் போன
> மாறவர்மன்
>
> வரகை நட்டு
> வம்சமழிந்தும்
> பிழைத்துக் கொண்டது
> சோழ வம்சம்
> நானுறு வருட
> சோழ குலம்
> நாசமாப் போக
>
> அக்ரஹாரத்துக்குள்
> இப்போதும்
> காற்சிலம்போசை
> நீயும் நானும்
> யாருடைய பிள்ளைகள்
>
> தாலிக்கேங்கும்
> பூப்பெய்திய பெண்கள்
> பூக்கொண்டு போய்
> காளிக்குச் சூட்ட
> தீக் கண்களில்
> தேதி சொல்கிறாள்
>
> கர்ப்பம் தரிக்க
> மணமான மங்கை
> கற்பூரம் ஏற்றுகிறாள்
> மூன்றாவது மாசமே
> முதல் பேறின் அறிகுறி
>
> ஊர் காக்கும் காளி
> உலவுகிறாள் வெளியே
> நீயோ ஊருக்குள்
> கட்டுகிறாய்
> அம்பாள் சந்நிதி
>
>
> கவிஞர் யுகபாரதி
>
> =====
> அன்புடன்
>
> சாபு
> துபாய்
>
> __________________________________________________
> Do You Yahoo!?
> Yahoo! Sports - Coverage of the 2002 Olympic Games
> http://sports.yahoo.com