From sadayan50@... Sat Mar 02 02:03:15 2002
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 2 Mar 2002 10:03:15 -0000
Received: (qmail 63100 invoked from network); 2 Mar 2002 10:03:14 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 2 Mar 2002 10:03:14 -0000
Received: from unknown (HELO web13805.mail.yahoo.com) (216.136.175.15) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 2 Mar 2002 10:03:14 -0000
Message-ID: <20020302100314.40868.qmail@...>
Received: from [194.170.168.236] by web13805.mail.yahoo.com via HTTP; Sat, 02 Mar 2002 02:03:14 PST
Date: Sat, 2 Mar 2002 02:03:14 -0800 (PST)
Subject: Amma
To: agathiyar@yahoogroups.com
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 16379


தயவுசெய்து இதை கவிதையாக பாவித்து படியுங்கள். நான் கவிஞனல்ல


பெயர் சொல்ல இருவர்
==================

அம்புட்டு பேருக்கும்
பெயர் வாங்கிக் கொடுத்த
யம்மாவே
உன் பெயர் மட்டும்
சட்டுனு நினைவிற்கு
வருவதில்லையே

சொந்தக்காரர்களுக்கு நீ
சித்தி
பெரியம்மா
தெருசனங்களுக்கு
மாமி
வேலைக்காரர்களுக்கு
மொதலாளியம்மா
பண்ணையாரம்மா
பேரக்குழுந்தைகளுக்கு
பாட்டி

அப்பாவும் உன்னை
அடிக்கடி அடிப்பதாலோ
என்னவோ
அவர் உன்னை கூப்பிடுவதும்
'அடியேய்'

உன் பெயரை
ஒழுங்காகச் சொல்லி
கூப்பிடுபவன்
உன் உப்புநீருக்கு
மருத்துவம் பார்க்கும்
மன்னார்குடி* வைத்தியனும்

மாதா மாதம்
'மஸ்கட்டி'லிருக்கும்
மகனிடமிருந்து வரும்
'டிராப்டை'த் தரும்
தபால்காரனும்


* அந்தக் காலத்தில், எங்களுரிலிருந்து மருந்து வாங்குவதென்றாலும் மளிகை
வாங்குவதென்றாலும் மன்னார்குடிதான் போக வேண்டும்

=====
அன்புடன்

சாபு
துபாய்

__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! Sports - sign up for Fantasy Baseball
http://sports.yahoo.com