From naga ganesan@... Sat Mar 02 04:53:05 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 2 Mar 2002 12:53:04 -0000
Received: (qmail 30314 invoked from network); 2 Mar 2002 12:53:04 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 2 Mar 2002 12:53:04 -0000
Received: from unknown (HELO n35.groups.yahoo.com) (216.115.96.85) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 2 Mar 2002 12:53:04 -0000
Received: from [216.115.96.154] by n35.groups.yahoo.com with NNFMP; 02 Mar 2002 12:53:03 -0000
Date: Sat, 02 Mar 2002 12:52:59 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: jeyangkoNtaar and ottakkUththar
Message-ID:
In-Reply-To: <00c901c1c183$b3e9b900$43f0c7cb@harikris>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3620
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.24.232
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16383

--- In agathiyar@y..., "Hari Krishnan" wrote:
> அன்புள்ள நாக. கணேசன்,
>
> "தேவாரம் தவிர தமிழ் நூல்களில் வேறு எதிலாவது ஆரூர் தியாகராசர் பற்றிய விவரம் காணப்படுகிறதா?
ஒட்டக்கூத்தர் ஆரூர் தியாகராசர் பற்றி கூறும் வரிகளை எவறேனும் வெளியிட முடியுமா?" என்று வி
த்யா அவர்கள் கேட்டிருந்தார்கள். அது தொடர்பாக ஒட்டக்கூத்தரின் மூவருலாவைப் புரட்டிக்கொண்டிருந்தேன். வி
க்கிரம சோழனுலாவில் பின்வரும் அடிகளுக்கு -
>
> முட்டிய தெவ்வர் சடைகட்ட மொய்கழல்
> கட்டிய காரனைக் காவலனும் ... (85)
>
> உரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது. (கலாக்ஷேத்திரா பதிப்பு [1952], பதிப்பாசிரியர் ருக்மணிதேவி
யார். உரையாசிரியர் பெயர் தெரியவில்லை. "பழைய உரை குறிப்புரைகளுடன்" என்று காணப்படுகிறது.)
>
> "காரானை: இப்பெயருள்ளது கச்சியூர் நாட்டைச் சேர்ந்த ஓர் ஊரென்று காஞ்சீபுரம் சாஸனம், 468 of 1919
கூறுகிறது. பிற்காலத்தில் 'காரனை விழுப்பரையர்' என்பாரொருவர் மாறவர்மன் சுந்தர பாண்டியனுடைய வாயிற்
புலவராக விளங்கியவரென்பது பாண்டி நாட்டுப் பெருச்சிகோயில் என்ற ஊரிலுள்ள சிவாலயத்துச் சாஸ
னத்தால் அறியப்படுகிறதென்பர். (சாஸனத் தமிழ்க் கவிசரிதம் 105) 'காரானை விழுப்பரையன் மடல்' என்னும்
நூல் ஒன்றும் உண்டு."
>
> உடனே ஜெயங்கொண்டாருடைய காலத்தைப் பற்றிய கேள்வி மனத்தில் எழுந்தது. உரையில்தானே இந்தக் குறி
ப்புக் காணப்படுகிறது என்று மேலும் புரட்டினால், குலோத்துங்க சோழனுலாவில்
>
> "விரும்பரணில் வெங்களத்தீ வேட்டுக் கலிங்கப்
> பெரும்பரணி கொண்ட பெருமான்" (28)
>
> என்று நேரடியாக ஜெயங்கொண்டாரைப் பற்றிய குறிப்பு கிடைத்தது. ஜெயங்கொண்டாரின் காலம் என்ன?
ஒட்டக்கூத்தருக்குச் சமகாலத்தவரா அல்லது முற்பட்டவரா?
>
> அன்புள்ள,
> ஹரி கிருஷ்ணன்.
>


ஜெயங்கொண்டாருக்குப் பேரன் காலம் போல, ஒட்டக்கூத்தருடைய காலம்.
ஜெயங்கொண்டார் படைத்துக் கொடுத்த பரணியாப்பில்
ஒட். தக்கயாகப் பரணி யாமளதந்திர நூலாகப் பாடினார்.
பல இடங்களில் ஜெயங்கொண்டாரை விதந்தோதுகிறார்.

ஜெ. பெரிய புரட்சிக்காரர். காரானை விழுப்பரையன் மடல்,
க. பரணி போன்றன காண்க. தி. வை. சதாசிவப் பண்டாரத்தார்
போன்றோர் அவர்கள் ஆசிரியர் பின்னத்தூரார் (நற்றிணைப்
பதிப்பாசிரியர்) அவர்களை முன்வைத்துச் சிலம்பின்
அரும்பத உரையாசிரியர் ஜெயங்கொண்டார் என்றும் குறிப்பர்.
11-ஆம் நூற். கடைசி, முதற் குலோத்துங்கன் காலம்
ஜெயங்கொண்டார்.

அப்போது பாண்டிநாடு சோழர்வசம். மதுரையில் சோழ
இளவரசர் அரசப் பிரதிநிதியாய் இருப்பர். அவர்களுக்கு
போதிக்கும்வகையில் ஜெயங்கொண்டார் இருந்தார்.
அப்போது தமிழ் வளர்த்த கூடலில் பாடியது
காரானை விழுப்பரையன் மடல்.

காராணை/காரானை என்று இரண்டு விதமாகவும் சிலாசாசனத்தில்
வரும். பாசுபத மதம் ஓங்கி இருந்த ஊர்.
குஜராத்தில் கார்வான் என்னும் இடம் போல.
காயாரோகணம் > காரோணம் முழுப்பெயர், அதன் திரிபு காராணை/காரானை.

தென்னார்க்காடு மாவட்டத்திலிருந்து சோழ அரசாங்க உயர்பதவி
வகிக்கப் பாண்டிநாடு சென்றோர் காரானை விழுப்பரையர்.
பின்னர் பாண்டியர் மீட்டுவந்தபோதும் சந்ததியார் இருந்தனர்.
அவர்களில் ஒருவர் பற்றியே சுந்தரபாண்டியன் காலக் கல்வெட்டு
பேசுகிறது.

இவர்கள் முன்னோன்தான் ஆதிநாதன், குலோத்துங்கன் I இடம்
சேனாபதி. ஆறு கல்வெட்டுகள் ஆதிநாதன் பற்றிக் குலோத்துங்கன்
காலத்தது எடுத்துள்ளேன். உலகாயத மத நூலுக்கு
மடல் வகை தெரிந்தெடுத்து மதுரையை வைத்துப்
பாடியுள்ளார் ஜெயங்கொண்டார். எத்தனையோ தமிழ்ப்
புலவர் போல, ஜெயங்கொண்டாரும், ஆதிநாதனும்
கருணீகர்.

வெண்பா நிறைய அழகாக எழுதுகிறார்கள்:
ஆதிநாதன் குடுமியாமலையில் எழுதிய வெண்பா
(கல்வெட்டு) மிக அழகானது. நிந்தாஸ்துதி.
குடுமியாமலை சிகாநாதஸ்வாமி.

தலபுராணம்: கணிகையொருத்தியின் தலைமுடி,
அரசனுக்குச் சிவாச்சரியநம்பி தரிசனம் செய்யவந்த
அரசனுக்குச் சூட்டிய சுவாமி மாலையில் இருந்தது.
மன்னன் சினங்கொண்டான், ....

அன்புடன்,
நா. கணேசன்