From ramnrom@... Thu Mar 07 09:42:09 2002
Return-Path: X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 7 Mar 2002 17:42:09 -0000
Received: (qmail 74083 invoked from network); 7 Mar 2002 17:42:08 -0000
Received: from unknown (216.115.97.167) by m8.grp.snv.yahoo.com with QMQP; 7 Mar 2002 17:42:08 -0000
Received: from unknown (HELO web14205.mail.yahoo.com) (216.136.172.151) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 7 Mar 2002 17:42:08 -0000
Message-ID: <20020307174208.82006.qmail@...>
Received: from [4.35.187.102] by web14205.mail.yahoo.com via HTTP; Thu, 07 Mar 2002 09:42:08 PST
Date: Thu, 7 Mar 2002 09:42:08 -0800 (PST)
Subject: Re: [agathiyar]Killer Instint Re: Ramanar
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 16502
அன்புள்ள ஜேபி,
உற்று நோக்கினால், என் கருத்தை உங்கள் ஆமோதிப்பதாகவே
அமைகிறது உங்கள் பதில். "We aint no angels" என்பதை சரித்திர
ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறீர்கள். நன்றி.
ஆனால், ஒரு கலிங்கத்திலிருந்து அசோகன் பிறந்த மாதிரியோ,
பேரழிவைப் பார்த்து மனம் கலங்கி ஒரு புத்தன் பிறந்த வகையிலோ, மேலை
நாடுகளிலே ஏன் தோன்றவில்லை? ('ஒரு கன்னம், மறு கன்னம்' பற்றி நான்
இங்கே பேசவில்லை. அங்கே KI க்கு இடமில்லை.)
அவ்வளவு தொலைவு பின்னோக்கிச் செல்வானேன்? இந்திரா
அம்மையாரின் காலத்தில் பாகிஸ்தான் போரில் நாம் வென்ற பிறகு, லாகூர்
நம் கை வசம் வந்திருக்ககூடிய சூழ்நிலை அபரிமிதமாக இருந்தபோதும்,
'எதிரி சரணாகதி கேட்டு விட்டான், இனி அவனைத் தொடர்ந்து விரட்ட
வேண்டியதில்லை' என்பதாலேயே அல்லவா நாம் போர் நிறுத்தம் செய்தோம்?
(இன்னமும் நமக்கு புத்தி வரவில்லை என்பது வேறு விஷயம்!)
வெள்ளையரின் KI மகாத்மா காந்தியின் முன் ஆட்டம் காண்டு
விடவில்லையா?
போர்க்களச் சூழலை விடுங்கள். தற்காலத்தில் வியாபார நிமித்தம்
வியாபாரப் போர்களே மிக அதிகம்.
அமெரிக்க வியாபாரச் சூழலில் கூட, யூதர்கள் மாதிரி நம்மால்
killer instinct-உடன் நடந்து கொள்ள முடியவில்லை. சொந்த
அனுபவத்தில் சொல்கிறேன். எதிரிகளை அடியோடு அழித்துப்போட்டு, புல்
பூண்டு இல்லாமல் செய்து விட, மனசு ஒப்புவதில்லை. ஒரு பச்சாதாபம் பிறந்து
விடுகிறது. 'ஐயோ பாவம், போகட்டும், விட்டு விடுவோம்' என்கிற
உணர்வுகள் பீறிட்டு விடுகின்றன.
மேலை நாட்டவர்களுக்கு அவ்வகையான உபத்திரவம் இல்லை! நம்மாலோ
அந்த அளவுக்கு 'Killer Instinct'- உடன் ஐக்கியமாக முடியவில்லை! In
this respect, the twain shall never meet!
அதனால் தான் சொல்கிறேன், 'Killer Instinct with
Limits' தான் நமக்குச் சரி.
ஏனென்றால், வெற்றியைத் தாண்டியும் ஒரு வெற்றி உண்டு என்பதை நம்
கிழக்கத்திய கலாச்சாரம் நமக்குள் உண்டாக்கி இருக்கிறது.
இந்த 'ஐயோ, பாவம்' இருக்கிறதே, அது மிகப் பெரிய விஷயம்!
அன்புடன்
எல்லே ராம்
--- jaybee555 wrote:
>
> At 07:25 PM 3/6/02 -0800, LARam wrote:
>
> > சாதாரணமாக விளையாட்டு மற்றும் வியாபாரச் சூழலில்
> >அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் Killer instinct என்கிற
> >சொற்றொடர் இந்தியரிடையே கொஞ்சம் கெட்ட பெயரை சம்பாதித்துக்
> >கொண்டுள்ளது;-). நமக்கெல்லாம் அப்படி ஒரு 'திறமை' வேண்டாமே என்றும்
> >பலர் நினைப்பதுண்டு. நாம் வளர்ந்து வந்த நாகரிகச் சூழல் வேறானது.
> >'Victory at any cost' நமக்கு ஒவ்வாதது.
> >
> > எவ்வளவு திறமையாக டென்னிஸ் ஆடியும், சர்வதேச அளவில் புகழ்
> >பெற்றும் நண்பர் விஜய் அமிர்தராஜ் விம்பிள்டன் போன்ற கோப்பைகளை
> >வாங்காததற்கு மேற்சொன்ன Killer Instinct இல்லாமையே காரணம்
> என்று
> >பலரும் சொல்வதுண்டு. ஏனெனில் அமெரிக்காவில் எதிராளியைக்
> குற்றுயிரும்
> >குலையுயிருமாகக் கீழே சாய்த்து 'வெற்றி வாகை சூடுதல்'
> புகழப்படுகிறது.
> >அது மேற்கத்திய நாகரிகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. நம்முடைய
> >கிழக்கத்திய நாகரிகத்தில் அதற்கு இடமில்லை.
>
> JayBee writes:
>
> நம்முடைய நாகரிகத்தில் killer instinct என்பது மரபைப்
> பொறுத்ததாகவும், இனத்தைப் பொறுத்ததாகவும், தேவைகளைப்
> பொறுத்ததாகவும், தலைமைத்துவத்தைப் பொறுத்ததாகவும்,
> காலத்தைப் பொறுத்ததாகவும் இருந்து வருகிறது.
>
> ராஜேந்திர சோழருடைய சாளுக்கியப் படையெடுப்பும்
> நரசிம்மவர்மப் பல்லவரின் வாதாபிப் படையெடுப்பும், மூன்றாம்
> குலோத்துங்க சோழரின் மதுரைப் படையெடுப்பும், மாறவர்மன்
> சுந்தரபாண்டியரின் சோழப்படையெடுப்பும், செங்குட்டுவனின்
> அரையத்துப் படையெடுப்பும் killer instinct-டுக்கு எடுத்துக்காட்டுக்கள்.
> அவற்றில் over-kill situation இருக்கும். அதே போன்றதுதான்
> அசோகனின் கலிங்கத்துப்போரும். அந்த over-kill plus victory
> at all costs
> மனப்பான்மைதான் அவனை சங்கத்துள் சரணமடையச் செய்தது.
>
> ஆனால் அவ்வாறே போர் புரிந்த கீழ்த்திசை மன்னர்கள்
> அனைவருமே அசோகனல்லரே?
>
> சீனச்சக்கரவர்த்தி சின் ஷீ ஹுவாங்ட்டீ போன்ற மன்னர்களும்
> over-killer.கள்தாம். கான்ஃபூஷியஸின் போதனைகள் மக்களின்
> killer instinct-ஐ மழுங்கடுக்கும் என்றுதான் எல்லா அறிஞர்களையும்
> சகட்டுமேனிக்கும் கொன்றுகுவித்தான். அவனுடைய பெருஞ்சுவர்த்
> திட்டத்திலேயே லட்சக்கணக்கானவர்கள் இறந்துபோயினர். இதுவும்
> ஒருவகையான success(victory)-at-costs நிலைமைதான்.
> செங்கிஃஸ் கானும்
> கீழ்த்திசை ஆசாமிதான்.
>
> நம்முடைய பங்குக்கு நாமும் killer instinct, over-kill
> எல்லாவற்றையும்
> செய்துதானிருக்கிறோம். செய்துகொண்டும் இருக்கிறோம். அப்போதும்
> இப்போதும் எப்போதும், எங்கும்.
>
> We aint no angels, buddy!
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
>
> >
> > இங்கே நான் அந்தப் பதத்தைப் பயன்படுத்திய சூழல் சற்றே
> வேறுபட்டது.
> >என்னளவில் அதுவும் 'ஏகாக்கிரக சித்தத்தின் ஒரு வெளிப்பாடு தான்.
> >
> > 'மெய் நோக்கார் கண் துஞ்சார் ...' என்கிற மாதிரி.
> >
> > 'Killer Instinct with Limits' தான் நமக்கு சரிப்பட்டு
> >வரும்;-)
> >
> >அன்புடன்,
> >
> >எல்லே ராம்
> >
> >
> >--- Madhurabarathi > wrote:
> >>
> >>
> >> கோபத்தின் மூலவேர் எது? ஆசைதான். அதனால்தான் ஆசையே
> துன்பத்துக்குக்
> >> காரணம் என்றான் புத்தன். ஆசையிலிருந்துதான் பொறாமை, போட்டி,
> பூசல்
> >> அனைத்தும் விளைகின்றன. விரும்பியது கிட்டாதபோது நிராசை
> >> செயலிழப்பிலும் (inaction, frustration) மன அழுத்தத்திலும்
> >> (depression, tension) கொண்டு நிறுத்திவிடுகிறது. தேவதாஸ்
> >> படக்கதையை நினைத்துப் பாருங்கள்.
> >>
> >> எனவேதான் "பற்றுக பற்றற்றான் பற்றினை" என்றும் "ஈசனோடாயினும்
> ஆசை
> >> அறுமின்" என்றும் பெரியோர் சொல்லினர்.
> >>
> >> இவையெல்லாம் தவநெறி மேற்கொண்டோர்க்குத்தானே என்று கேட்கலாம்.
> நாம்
> >> கோபம்கொண்டால் ரத்த அழுத்தம் அதிகமாகிறது, நாடித்துடிப்பு
> >> எகிறுகிறது, ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுகிறது, வியர்க்கிறது,
> >> படபடக்கிறது, முகம் சிவக்கிறது, நாம் என்ன சொல்கிறோம் அல்லது
> >> செய்கிறோம் என்பதன்மேல் ஆளுமை இருப்பதில்லை, சிந்திக்கும்
> சக்தியை
> >> இழக்கிறோம், மூச்சு விரைவாகிறது - மொத்தத்தில்
> நோய்வாய்ப்பட்டவர்
> >> ஆகிறோம். அது "சேர்ந்தாரைக் கொல்லி" அல்லவா! கோபத்தில்
> >> சொன்னதையோ செய்ததையோ தன்னிலைமை திரும்பியபின் எண்ணி
> >> வருந்துகிறோம். என்ன பயன்?
> >>
> >> மிகக் கற்றோர், கலைகளில் பெரியோர், புகழும் பெருமையும்
> >> அடைந்தோர், செல்வம் பல பெற்றோர் - என இவ்வாறு வாழ்வின்
> >> உச்சாணியை அடைந்தவரிடமும் எளிதில் மூண்டெழு சினம் இருக்கக்
> >> காண்கிறோம். அப்படியானால் வெற்றியும், புகழும், செல்வமும் ஒருவனைச்
> >> சான்றோனாக்குவதில்லை என்றல்லவா விளங்குகிறது.
> >>
> >> கோபத்தை அடக்குதல் (repression of anger) அல்ல நான்
> >> சொல்லுவது. நற்சிந்தனை என்னும் அங்குசத்தால் மனமென்னும் யானையை
> >> வசப்படுத்தினால் கோபம் முதலியன நமக்குப் பணிசெய்து கிடக்கும்
> என்பதே
> >> நான் சொல்லவருவது.
> >>
> >> முடியும் - முயற்சியாலும், பயிற்சியாலும்.
> >>
> >> நான் சொன்னதற்கும் killer instinctக்கும் என்ன சம்பந்தம்?
> >>
> >> அன்புடன்
> >>
> >> மதுரபாரதி
> >>
> ========================>
__________________________________________________
Do You Yahoo!?
Try FREE Yahoo! Mail - the world's greatest free email!
http://mail.yahoo.com/