From arull@... Thu Mar 07 16:11:00 2002
Return-Path:
X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 8 Mar 2002 00:10:59 -0000
Received: (qmail 65706 invoked from network); 8 Mar 2002 00:10:24 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 8 Mar 2002 00:10:24 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 8 Mar 2002 00:10:24 -0000
Received: from tm.net.my (kmr-186-148.tm.net.my [202.188.186.148]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GSM008I5OHAXP@...> for agathiyar@yahoogroups.com; Fri, 08 Mar 2002 08:10:23 +0800 (SGT)
Date: Fri, 08 Mar 2002 08:07:30 +0800
Subject: திருமுறைத் தியானம்
To: "agathiyar@yahoogroups.com"
Message-id: <3C8800C2.4AB5437B@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார்
X-Yahoo-Group-Post: member; u=21400202
X-Yahoo-Message-Num: 16508

திருச்சிற்றம்பலம்

திருமுறைத்தியானம்

ஸ்ரீமடம் ஆஸ்தான வித்வான் புலவர்.
பு.மா.ஜய செந்தில்நாதன்

மார்ச்சு 8

திருநாவுக்கரசர்

திருவையாறு

பஞ்சநதீஸ்வரர் - தர்மசம்வர்த்தினி

"அரும்பொருளாகும் ஐயாறன் போற்றி"

உற்றார் இலாதார்க்கு உறுதுணையாவன ஓதி நன்னூல்
கற்றார் பரவப் பெருமையுடையன காதல் செய்ய
கிற்பார் தமக்குக் கிளரொளி வானகந்தான் கொடுக்கும்
அற்றார்க்கு அரும்பொருள் காண்க ஐயாறன் அடித்தலமே.

ஐயாறு அகலாத அருட்பெருஞ் சோதீ! உன்னுடைய
மேலான திருவடிகளே, உற்றார் உறவினர் இல்லாத எம்
போன்றோர்க்கு உற்ற துணையாவன;திருவருட் பெருக்கமான
அருள் நூல்களைக் கற்றும் ஓதியும் பரவுதற்குரிய பெருமை
யுடையன; உள்ளத்து அன்பொடு முட்டாது வழிபடுவோர்க்கு
முத்தி நிலையைத் தட்டாமல் தருவன; ஆதரவற்றோர்க்கு அரு
நிதியம் போல்வன. இத்தகைய பெருமை வாய்ந்த உன்
மலரடிகளை மனம் பொருந்தத் தொழுது மேன்மையடையத்
தக்க பேற்றை அருள்வாயாக!

அடித்தலத்தை முடியிருத்தி அன்புடன் தொழுவோம்

ஐயாறன் அருளாலே ஆனந்தம் பெறுவோம்.

திருச்சிற்றம்பலம்

ஓதுவார்
பினாங்கு.