From jaybee@... Thu Mar 07 21:50:31 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 8 Mar 2002 05:50:31 -0000
Received: (qmail 37766 invoked from network); 8 Mar 2002 05:04:46 -0000
Received: from unknown (216.115.97.172) by m11.grp.snv.yahoo.com with QMQP; 8 Mar 2002 05:04:46 -0000
Received: from unknown (HELO n11.groups.yahoo.com) (216.115.96.61) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 8 Mar 2002 05:04:45 -0000
Received: from [216.115.96.159] by n11.groups.yahoo.com with NNFMP; 08 Mar 2002 05:04:03 -0000
Date: Fri, 08 Mar 2002 05:04:00 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: [agathiyar]Killer Instint Re: Ramanar
Message-ID:
In-Reply-To: <20020307174208.82006.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 5841
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "jaybee555"
X-Originating-IP: 203.121.0.10
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16510

அன்புள்ள எல்லேய் ராம்,

Killer instinct பற்றி இன்னும் நிறைய எழுதலாம். இப்போதைக்குக்
கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொன்றாக எழுதமுயல்கிறேன்.

At 09:42 AM 3/7/02 -0800, you wrote:
>அன்புள்ள ஜேபி,
>
> உற்று நோக்கினால், என் கருத்தை உங்கள் ஆமோதிப்பதாகவே
>அமைகிறது உங்கள் பதில். "We aint no angels" என்பதை சரித்திர
>ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறீர்கள். நன்றி.
>
> ஆனால், ஒரு கலிங்கத்திலிருந்து அசோகன் பிறந்த மாதிரியோ,
>பேரழிவைப் பார்த்து மனம் கலங்கி ஒரு புத்தன் பிறந்த வகையிலோ, மேலை
>நாடுகளிலே ஏன் தோன்றவில்லை? ('ஒரு கன்னம், மறு கன்னம்' பற்றி நான்
>இங்கே பேசவில்லை. அங்கே KI க்கு இடமில்லை.)


A lonely swallow does not a spring make.
மேலும் இவர்கள் இருவருமே விதிவிலக்குகள்.


>
> அவ்வளவு தொலைவு பின்னோக்கிச் செல்வானேன்? இந்திரா
>அம்மையாரின் காலத்தில் பாகிஸ்தான் போரில் நாம் வென்ற பிறகு, லாகூர்
>நம் கை வசம் வந்திருக்ககூடிய சூழ்நிலை அபரிமிதமாக இருந்தபோதும்,
>'எதிரி சரணாகதி கேட்டு விட்டான், இனி அவனைத் தொடர்ந்து விரட்ட
>வேண்டியதில்லை' என்பதாலேயே அல்லவா நாம் போர் நிறுத்தம் செய்தோம்?
>(இன்னமும் நமக்கு புத்தி வரவில்லை என்பது வேறு விஷயம்!)


:-)
இதேமாதிரியான தவறுகளைப் பலருமே செய்திருக்கிறார்கள்.
சில எடுத்துக்காட்டுக்களைப் பார்ப்போம்.

முதலாவதாக ஹிட்லர்.
கே.ஐ. (K.I) பற்றிய சங்கதிக்கு ஹிட்லர் ஒரு பொறுத்தமான
எடுத்துக்காட்டு.

ஹிட்லரின் வாழ்க்கையில் அவர் முன்னேறுவதற்காக உருட்டிய
தலைகளுக்கு எண்ணிக்கையே கிடையாது. பிற்காலத்தில் ஹிட்லர்
செய்த ethnic cleansing-ஐ இங்கே குறிப்பிடவில்லை. அவர் கொன்று
குவித்த ஆயிரக்கணக்கான அசல் ஒரிஜினல் ஜெர்மானியர்களையே
குறிப்பிடுகிறேன்.
ஹிட்லர் பதவிக்கு வருவதற்குத் துணையாக நின்ற பெருந்தலைகள்
அவை. Brown Shirts என்று அழைக்கப்படும் சொந்தப் படை ஒன்றையும்
அதன் தலைமைத்துவத்தையும் நாசம் செய்தவர். இப்படி மேலே வருவதற்காக
அவர் செய்த கொலைகள் எக்கச்சக்கமானவை.
கே.ஐ. அளவுக்கும் அதிகமாக உள்ள ஆசாமி ஹிட்லர் என்பதில்
எள்ளளவும் சந்தேகமில்லை.
1933-இல் பதவிக்கு வந்தார்.
1934-இல் சான்ஸலராகினார்.
சில மாதங்களில் ஃபீரர்(தமிழில் உள்ள குற்றியல் இகரத்தையும்
குற்றியல் உகரத்தையும் ஒன்றாகச் சேர்த்துச் சொல்லிப் பாருங்கள்)
என்னும் சர்வாதிகாரி பதவியை ஏற்படுத்திக்கொண்டார். தம் பேரில்
விசுவாசப்பிரமாணத்தை அனைத்து ஜெர்மானியர்களையும் எடுக்கச்செய்தார்.

1936-இல் ஜெர்மனியின் படை பலம் அதிகரிக்கப்பட்டது.
அடுத்தாற்போல ஸ்பெயினின் உள்நாட்டுப்போரில் வெள்ளோட்டம்
பார்த்துக்கொண்டார். அதன்பின்னர் ரூஃர் நடுநிலைப் பகுதியைப்
பிடித்துக்கொண்டார். அதன்பின்னர் செக்கொஸ்லோவாக்கியா;
பின்னர் ஆஸ்திரியா.
பிறகு ஹாலந்து, பெல்ஜியம், டென்மார்க், நார்வே.
அதன்பிறகு போலந்து.
அதைத் தொடர்ந்து பிரிட்டனும் ஃபிரான்ஸும் போர்ப்பிரகடனம்
செய்தன.
ஃபிரான்ஸ் தன்னுடைய மேஜினோ பாதுகாப்பரணை நம்பிக்
கொண்டு இறுமாப்புடன் இருந்தது. எந்த வழியில் ஜெர்மானியர்
வரமாட்டார்கள் என்று எண்ணினரோ, அதே ஆர்ட்னெல்ஸ் மலைக்
காடுகளில் வழியே விரைவாக ஜெர்மானியர் வந்துவிட்டனர். ஃபிரான்ஸின்
வடபகுதியை ஜெர்மன் படைகள் பிடித்துக்கொண்டுவிட்டன.
ஃபிரெஞ்சுப்படை தெற்கு நோக்கி ஓடியது.
ஆனால் Brittish Expeditionary Force எனப்படும் படை சுற்றி
வளைக்கப்பட்டுவிட்டது. டன்கர்க் என்னும் கடற்கரைப்பகுதில் ஒரு
சிறிய பகுதியில் அது மாட்டிக்கொண்டது. ஜெர்மன் படை அதனை
முற்றிலும் நாசம் செய்யத் தயாராகியது.

ஆனால் எதிர்பாராத வகையில் ஹிட்லர் தம்முடைய படையைத்
தடுத்து வைத்துக்கொண்டார்.

அந்த நேரத்தில் இரண்டு லட்சத்து ஐம்பதினாயிரம் பேர்கள்
கொண்ட அந்தப் பெரும் படை இங்கிலீஷ் கடற்சந்தியைக் கடந்து
இங்கிலாந்துக்குச் சென்றுவிட்டது.
அது ஒரு பெரிய tactical error; ஆனால் ஹிட்லர் ஏன்
அவ்வாறு அந்தப் படையைத் தப்பிக்கவிட்டார்?
அந்தப் படையை முற்றிலுமாக அழித்துவிட்டு, உடனேயே
இங்கிலாந்தின்மீது தம்முடைய முப்படைகளையும் ஏவிவிட்டு
அந்நாட்டையே பணியச் செய்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால்
பிரிட்டிஷ் சாம்ராஜ்யமும் ஹிட்லரின் வசமாகியிருக்கும்.
அதற்குப்பதில் லூஃப்ட் வாஃப விமானப்படையை மட்டுமே
அனுப்பி, அதனை அங்கே பலிகொடுத்துவிட்டார்.
D-Day என்னும் திருப்பித்தாக்குதலின் போது தப்பிச்சென்ற
படையின் பலவீரர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இன்னொரு முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி
ஸ்டாலின்கிராடு. அங்கேயும் ஒரு கட்டத்தில் எளிதாக ரஷ்யர்களை
அழித்து வெற்றிபெற்றிருக்கமுடியும். அந்த நேரத்தில் ரஷ்யப்படையின்
முழுமையான அழிவு, காக்கஸஸ் நிலப்பரப்பு, ஆசியாவுக்குள் நுழைவு
ஆகியவற்றைவிட ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலினின் பெயரால் அமைந்த
ஸ்டாலின்கிராடு நகரைப் பிடிப்பதே பெரியதாக ஹிட்லருக்குத் தோன்றியது.
ஆகவே ஸ்டாலின்கிராடை இழந்ததுமட்டுமின்றி
ஃபீல்ட்மார்ஷல் பாவ்லஸின் தலைமையில் ஒரு ஜெர்மன் பெரும்படை
சரணடைய நேரிட்டது.

இன்னும் இருக்கிறது.

அன்புடன்

ஜெயபாரதி



>
> வெள்ளையரின் KI மகாத்மா காந்தியின் முன் ஆட்டம் காண்டு
>விடவில்லையா?
>
> போர்க்களச் சூழலை விடுங்கள். தற்காலத்தில் வியாபார நிமித்தம்
>வியாபாரப் போர்களே மிக அதிகம்.
>
> அமெரிக்க வியாபாரச் சூழலில் கூட, யூதர்கள் மாதிரி நம்மால்
>killer instinct-உடன் நடந்து கொள்ள முடியவில்லை. சொந்த
>அனுபவத்தில் சொல்கிறேன். எதிரிகளை அடியோடு அழித்துப்போட்டு, புல்
>பூண்டு இல்லாமல் செய்து விட, மனசு ஒப்புவதில்லை. ஒரு பச்சாதாபம் பிறந்து
>விடுகிறது. 'ஐயோ பாவம், போகட்டும், விட்டு விடுவோம்' என்கிற
>உணர்வுகள் பீறிட்டு விடுகின்றன.
>
> மேலை நாட்டவர்களுக்கு அவ்வகையான உபத்திரவம் இல்லை! நம்மாலோ
>அந்த அளவுக்கு 'Killer Instinct'- உடன் ஐக்கியமாக முடியவில்லை! In
>this respect, the twain shall never meet!
>
> அதனால் தான் சொல்கிறேன், 'Killer Instinct with
>Limits' தான் நமக்குச் சரி.
>
> ஏனென்றால், வெற்றியைத் தாண்டியும் ஒரு வெற்றி உண்டு என்பதை நம்
>கிழக்கத்திய கலாச்சாரம் நமக்குள் உண்டாக்கி இருக்கிறது.
>
> இந்த 'ஐயோ, பாவம்' இருக்கிறதே, அது மிகப் பெரிய விஷயம்!
>
>அன்புடன்
>
>எல்லே ராம்