From jaybee@... Fri Mar 08 05:46:19 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 8 Mar 2002 13:46:18 -0000
Received: (qmail 67975 invoked from network); 8 Mar 2002 13:46:18 -0000
Received: from unknown (216.115.97.172) by m12.grp.snv.yahoo.com with QMQP; 8 Mar 2002 13:46:18 -0000
Received: from unknown (HELO n22.groups.yahoo.com) (216.115.96.72) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 8 Mar 2002 13:46:18 -0000
Received: from [216.115.96.133] by n22.groups.yahoo.com with NNFMP; 08 Mar 2002 13:46:15 -0000
Date: Fri, 08 Mar 2002 13:46:12 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: [agathiyar]Killer Instint Re: Ramanar
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 5067
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "jaybee555"
X-Originating-IP: 203.121.0.10
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16516

At 05:04 AM 3/8/02 +0000, JayBee wrote:
>அன்புள்ள எல்லேய் ராம்,
>
> Killer instinct பற்றி இன்னும் நிறைய எழுதலாம்.
இப்போதைக்குக்
>கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொன்றாக எழுதமுயல்கிறேன்.
>
>At 09:42 AM
3/7/02 -0800, Ellay Ram wrote:
>>அன்புள்ள ஜேபி,
>>
>> உற்று நோக்கினால்,
என் கருத்தை உங்கள் ஆமோதிப்பதாகவே
>>அமைகிறது உங்கள் பதில். "We aint no angels"
என்பதை சரித்திர
>>ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறீர்கள். நன்றி.
>>
>> அவ்வளவு
தொலைவு பின்னோக்கிச் செல்வானேன்? இந்திரா
>>அம்மையாரின் காலத்தில் பாகிஸ்தான் போரில்
நாம் வென்ற பிறகு, லாகூர்
>>நம் கை வசம் வந்திருக்ககூடிய சூழ்நிலை அபரிமிதமாக
இருந்தபோதும்,
>>'எதிரி சரணாகதி கேட்டு விட்டான், இனி அவனைத் தொடர்ந்து விரட்ட
>>வேண்டியதில்லை' என்பதாலேயே அல்லவா நாம் போர் நிறுத்தம் செய்தோம்?
>>(இன்னமும் நமக்கு
புத்தி வரவில்லை என்பது வேறு விஷயம்!)
>
>
JayBee wrote:

> :-)
> இதேமாதிரியான தவறுகளைப் பலருமே செய்திருக்கிறார்கள்.
> சில
எடுத்துக்காட்டுக்களைப் பார்ப்போம்.
>
> முதலாவதாக ஹிட்லர்.
> கே.ஐ. (K.I)
பற்றிய சங்கதிக்கு ஹிட்லர் ஒரு பொறுத்தமான
>எடுத்துக்காட்டு.

----deleted

> இன்னும் இருக்கிறது.

JayBee writes:

தொடர்கிறேன்.....

இரண்டாம் உலக யுத்தத்தின் ஆரம்ப காலம்.
ஜப்பானியர்கள் கொரியா, ஃபார்மோஸா எனப்படும் தைவான்,
மஞ்சூரியா, ஆகியவற்றைப் பிடித்துக்கொண்டபின்னர் சீனாவின்
முக்கிய பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டனர்.
அவர்களின் நோக்கு தென்கிழக்காசியாவின் வளமான நாடுகள்.
அத்துடன் அதற்கப்பாலும் டாய் நிப்பனின் உதய சூரியக் கதிர் வீச்சு.
குறிப்பாக பாரதம், ஆஸ்திரேலியா. முடிந்தால் கலிஃபோர்னியாவும்
அதிலிருந்து ராக்கி மலைகளுக்கு மேல்திசையில் உள்ள பிரதேசங்களும்.
ஆனால் முதற்கட்டத்தையே குலைப்பதாக அமைந்தது,
ஃபிலிப்பைன்ஸில் உள்ள அமெரிக்கப்படைகள். அவற்றிற்குப்
பெருந்துணையாக குவாம், குவாடல்கானல், மிட்வேய், பெர்ல் ஹார்பர்
ஆகிய இடங்களிலிருந்த அமெரிக்கப்படைத்தளங்கள்.
ஜப்பான் போர் நடவடிக்கைகளுக்குரிய பயிற்சிகளைச்செய்து
வந்தது.
நடுவில் கண்துடைப்பு.
இந்தோசீனாவின்மீது படையெடுப்பு என்ற போர்வையில் வேறு
பல ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தனர்.

1941-ஆம் ஆண்டு டிசெம்பர் 7-ஆம் தேதி ஒரே சமயத்தில்
ஹாங்காங், குவாம், குவாடல்கானல், மிட்வேய், ஃபில்லிப்பைன்ஸ்,
மலாயா ஆகியவற்றின்மீது பாய்ந்ததோடு. மிக மிக ரகசியமாக
ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிலிருந்த பெர்ல் ஹார்பரையும்
தாக்கினர்.
பெர்ல் ஹார்பர் தாக்குதல் திட்டத்தின் சிருஷ்டிகர்த்தா
அட்மிரல் யாமாமோட்டோ. போரை தலைமையேற்று நடத்தியவர்,
அட்மிரல் நகுமோ(சிரித்தமுகம். ஆனால் படத்தில் பார்க்கும்போது
சிரித்த முகமாகக் காணப்படவில்லை). ஆறு முக்கிய விமானந்தாங்கிக்
கப்பல்களுடன் வேறு பலரகக்கப்பல்களும் சென்றிருந்தன. முன்னூற்று
அறுபதுக்கும் மேற்பட்ட விமானங்கள்.
மிக வெற்றிகரமாக மூன்று அலைகளாகத் தாக்குதல்கள்
நடந்தன.
பெர்ல் ஹார்பரில் பேரழிவு ஏற்பட்டது.
ஆனால் விமாத்தாக்குதல்களை நடத்திய கமாண்டர் ஃபுச்சிடாவுக்கு
ஒரே கேள்விதான் மேலெழுந்தது.
எங்கே அந்த நான்கு பலம்வாய்ந்த அமெரிக்க விமானந்தாங்கிகளும்
அவற்றின் துணைக்கப்பல்களும்?
அவற்றைத்தேடி உடனடியாக அழித்துவிடவேண்டும்.
துடிப்போடு ஜப்பானியர் அந்நடவடிக்கையில் ஈடுபட
முனைந்தன.

ஆனால் நகுமோ மறுத்துவிட்டார்.
"இப்போது யுத்தத்தின் ஆரம்பகட்டத்த்தில்தான் இருக்கிறோம்.
இன்னும் பல பெரும்போர்களை நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது.
அதற்கு இந்த விமானந்தாங்கிகள் மிக முக்கியம். நம்மிடம்
தேடுவதற்குரிய போதிய எரிபொருள் இல்லை. இன்னும் முக்கியமான
விஷயம்; நம்மிடம் இருந்துவந்த element of surprise இப்போது நம்மிடம்
அறவே இல்லை. இந்தக் கப்பல்களைப் பத்திரமாகக் ஜப்பானுக்குக்
கொண்டு சேர்ப்பது என்னுடைய தலையாய கடமை. நாம் உடனே
திரும்புகிறோம்", என்று முடிவாகச் சொல்லிவிட்டார்.

நகுமோவின் இந்த முடிவு, இரண்டாம் உலக யுத்தத்தில்
ஜப்பான் தோல்வியடைவதற்கு முக்கிய காரணங்கள்ல் ஒன்றாகிவிட்டது.

அந்த நான்கு விமானந்தாங்கிகளும், அவற்றின் நானூற்றுக்கும்
மேற்பட்ட விமானங்களும், அவற்றின் தரமான விமானமோட்டிகளும்,
மிட்வேய் கடற்போரின்போது ஜப்பானிய விமானந்தாங்க்கள்
அனைத்தையும் மூழ்கடித்தனர். அத்துடன் ஜப்பானிய கடற்படை
வலிவிழந்தது. ஆயிரக்கணக்கான தீவுகள் அடங்கிய ஜப்பானியப்
பரரரசு, விமானந்தாங்கிகளும் மற்ற பலமிகுந்த போர்க்கப்பல்களும்
இல்லாமல் தோல்விக்கு மேல் தோல்வியடைந்தது.

Killer instinct இருந்தும்கூட இத்தகைய பெருந்தவறை
ஜப்பானியர் செய்தனர்.

வள்ளுவர் சொன்னதாவது:

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.

செய்யத் தொடங்கிய தொழில், ஒழிக்கவேண்டிய பகை
ஆகிய இரண்டிலும் மிச்சம் வைத்தால் அவை மிச்சமாக விடப்பட்ட
நெருப்பு வளர்ந்துவிடுவதைப்போல வளர்ந்து கெடுக்கும்.

ஆசாரக்கோவை சொல்வதாவது, "நெருப்பு, பகை, கடன்
ஆகிய மூன்றையும் மிச்சம் வைக்கக்கூடாது; அப்படி வைத்தால்
அவை பெரிதாக வளர்ந்து அடக்கமுடியாத அளவுக்குப் போய்விடும்".

தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.

இந்த செயல்பாட்டுமுறைகளையெல்லாம் நாம் அறிந்து
தானிருக்கிறோம். மற்றவர்களும் அறிந்துதான் இருக்கின்றனர்.
இருப்பினும் செய்யாமல் தவறவிடுவது எல்லாருக்குமே ச்கஜம்தான்.

இன்ன்ன்னும்ம்ம்ம் இருக்கிறது.....

அன்புடன்

ஜெயபாரதி

=================