From jaybee@... Fri Mar 08 06:50:37 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 8 Mar 2002 14:50:37 -0000
Received: (qmail 25533 invoked from network); 8 Mar 2002 14:50:37 -0000
Received: from unknown (216.115.97.167) by m3.grp.snv.yahoo.com with QMQP; 8 Mar 2002 14:50:37 -0000
Received: from unknown (HELO n3.groups.yahoo.com) (216.115.96.53) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 8 Mar 2002 14:50:37 -0000
Received: from [216.115.96.167] by n3.groups.yahoo.com with NNFMP; 08 Mar 2002 14:49:36 -0000
Date: Fri, 08 Mar 2002 14:49:32 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: SuRusuRuppu
Message-ID:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2409
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "jaybee555"
X-Originating-IP: 203.121.0.10
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16518

அன்பர்களே,

இன்று காலையில் ஒரு நண்பர் வந்திருந்தார். அவர் இன்று
முழுமையும் கூடவே இருந்துவிட்டுச் சற்றுமுன்னர்தான் சென்றார்.
போகுமுன்னர் சில கேள்விகள் கேட்டார். அவர் பார்த்த
சில விஷயங்களையும் சொன்னார்.

"நீங்கள் காலையில் வெள்ளென எழுந்துவிடுவதாகச்
சொன்னீர்கள். நாள் முழுவதும் யாராவது ஆட்கள் வந்து பார்த்துச்
சென்றவண்ணம் இருக்கின்றனர். நடுநடுவே டெலிபோன்.
இன்று மட்டுமே நான் பார்க்க, நாலைந்து ஈமெயில் எழுதினீர்கள்.
அதில் இரண்டு நீளமானவை. என்னுடன் பேசிக்கொண்டே அதையும்
எழுதினீர்கள். மதியம் எனக்குத் தூக்கம் வந்தது. ஆனால் நீங்கள்
இண்டர்நெட்டில் தொடர்ந்து என்னவோ செய்துகொண்டிருந்தீர்கள்.
நடுவில் பேத்தியைக் கவனித்துக்கொண்டிருந்தீர்கள். இத்தனையும்
செய்தும் இப்போது 9-00 மணியாகிறது - அப்படியே ஃப்ரெஷ்ஷாக
இருக்கிறீர்களே? இரவில் 12 மணிக்கு மேலாகத்தான் தூங்கச்
செல்வதாக சொன்னீர்கள். இதெல்லாம் எப்படி முடிகிறது? குறிப்பாக
இண்டர்நெட்டில் தொடர்ந்து உட்கார்ந்து மணிக்கணக்கில் எப்படி
எழுதமுடிகிறது. மனசெல்லாம் நிலைகுத்திப் போகுமே?"

அவரிடம் விளக்கினேன்.
கேட்டுக்கொண்டார்.

இண்டர்நெட்டில் எழுதும்போது எப்படி சுறுசுறுப்பை ஏற்படுத்திக்
கொள்கிறேன்?
அதற்குச் சில முறைகள் வைத்திருக்கிறேன்.

அவற்றில் ஒன்று.......

கீழ்க்கண்ட இலக்குகளில் ஆடியோ இருக்கிறது. அதன்மூலம்
காராஓக்கே(Karaoke) கிடைக்கிறது. ஓர் இலக்கில் மாம்போ இசையும்
இன்னொன்றில் கலவையாகவும் கிடைக்கும். அவற்றிலேயே இசை,
தாளத்துக்கேற்ப சின்னச்சின்ன உருவங்கள் ஆடும். Mambo with Rambha@
Maria Mambo கேட்டிருக்கிறீர்களா? அதான் "ஓ மரீய்யா..ஓ மரீய்யா...
ஈமேய்லில் லவ் லெட்டர் தரீய்ய்யாஆ? கடலுக்குஊஉ ஃபிஷிங் நெட்டூஊஉ...
காதலுக்குஊஉ இண்டர்நெட்டூ.." அந்த இசைதான் மாம்போ.
மாம்போவிலேயே மாம்போ#5 என்பது மிகவும் பிரபலமானது.
அந்த இலக்கிற்குச் சென்று அந்தப் பாட்டைப்போட்டுக்கொள்ள
வேண்டும்.

http://www.mrznet.com/mambo.html

இசைக்கும் தாளத்துக்கும் ஏற்ப மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு,
தோள்களைக் குலுக்கிக்கொண்டு, கைகளை வீசி வீசி இருக்கையிலேயே
ஆடவேண்டும்.
இரண்டு ரவுண்டு ஆடினாலேயே போதும்.
சுறுசுறுப்பு ஏறிவிடும்.

அடுத்தாற்போல இந்த இலக்குக்குச் செல்லுங்கள்.

http://members.aol.com/chichix/club411/index.html

Dancing Baby Club 411 என்ற இலக்கு. அங்கு குழந்தை ஒன்று ஆடும்.
மிகவும் சுறுசுறுப்பான இசை 'Los Del Rio - Macarena' என்பதுதான்.

போய்ப்பாருங்கள்.
பின்னர் அனுபவத்தைச் சொல்லுங்கள்.

அன்புடன்

ஜெயபாரதி

=============================