From jaybee@... Fri Mar 08 08:04:05 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 8 Mar 2002 16:04:04 -0000
Received: (qmail 12410 invoked from network); 8 Mar 2002 15:30:46 -0000
Received: from unknown (216.115.97.172) by m11.grp.snv.yahoo.com with QMQP; 8 Mar 2002 15:30:46 -0000
Received: from unknown (HELO n8.groups.yahoo.com) (216.115.96.58) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 8 Mar 2002 15:30:45 -0000
Received: from [216.115.96.140] by n8.groups.yahoo.com with NNFMP; 08 Mar 2002 15:28:58 -0000
Date: Fri, 08 Mar 2002 15:28:48 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: [agathiyar]Killer Instint
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2506
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "jaybee555"
X-Originating-IP: 203.121.0.10
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16520

At 09:42 AM 3/7/02 -0800, you wrote:
>அன்புள்ள ஜேபி,
>
> அவ்வளவு தொலைவு பின்னோக்கிச் செல்வானேன்? இந்திரா
>அம்மையாரின் காலத்தில் பாகிஸ்தான் போரில் நாம் வென்ற பிறகு, லாகூர்
>நம் கை வசம் வந்திருக்ககூடிய சூழ்நிலை அபரிமிதமாக இருந்தபோதும்,
>'எதிரி சரணாகதி கேட்டு விட்டான், இனி அவனைத் தொடர்ந்து விரட்ட
>வேண்டியதில்லை' என்பதாலேயே அல்லவா நாம் போர் நிறுத்தம் செய்தோம்?
>(இன்னமும் நமக்கு புத்தி வரவில்லை என்பது வேறு விஷயம்!)


லாகூர் பெரிய மாநகரம். நிறைய மக்கள்தொகை கொண்டது.
மூலை முடுக்குகள் இண்டு இடுக்குகள் நிறைந்தது.
அத்தகையதொரு நகரத்தைப் பிடிப்பதில் முனைவது கூடாது
என்று சீன யுத்த சாஸ்திர நிபுணர் ஃட்ஸுன் ட்ஸு கூறியிருக்கிறார்.
அத்தனை லட்சம் விரோதமான மக்கள்கூட்டத்திற்கு
சோறுபோட்டு மாளுமா? ஸப்வெர்ஷனில் இறங்கினால் என்ன செய்வது?
அதைவிடச்சிறந்த strategy, துப்பாக்கிகளையெல்லாம்
மாநகரை நோக்கிக்குறிவைத்து தூரத்திலிருந்தே பயமுறுத்துவதுதான்.
'எந்த நேரத்திலும் நாங்கள் உள்ளே புகுந்துவிடுவோம்', என்று
அச்சுறுத்தவேண்டும். அதற்குத்தான் அதிக demoralising effect
உண்டு.
6 Day Arab/Israeli 6 Day War-ரின்போது இஸ்ரயெல் ஸீரியா
நாட்டின் தலைநகரமாகிய டமாஸ்கஸிலிருந்து நாற்பதே மைல் தூரத்தில்
நிலைகொண்டுவிட்டது. ஆனால் டமாஸ்கஸைப் பிடிக்கவில்லை.
அதனை அடுத்து நிகழ்ந்த Yon Kippr War-ரின் போது
சூவெஸ் கால்வாயையும் தாண்டி எகிப்தின் தலைநகரமாகிய கைரோவுக்கு
அருகில் வந்து இஸ்ரயெலியர் நிலைகொண்டனர். ஆனால் ஊரைப்
பிடிக்கவில்லை.

செய்யவேண்டியதைச் செய்யாமல் விடுத்த தவறை இந்தியா
1947-இல் செய்தது.
பாக்கீஸ்தானுடைய படையும் பத்தான் மிலிஷியாப் படையும்
காஷ்மீரைக் கிட்டத்தட்ட கபளீகரம் செய்து அடுத்து பஞ்சாபைக்
குறிபார்த்தன. அப்போது ஜெனரல் கரியப்பா, இந்தியப்படைகளைத்
திறமையாக நடத்தி ஜம்முவை விடுவித்து, இன்றைய ஆஸாத்
காஷ்மீருக்குள் நுழைந்துவிட்டார். அதனைத் தொடர்ந்து பாக்கீஸ்தானுடைய
படையை அழித்துவிடவேண்டும் என்ற திட்டத்தையும் செயல்படுத்த
இருந்தார்.
அப்போது பார்த்துப் போர்நிறுத்தத்தைச் செய்ததோடல்லாமல்
கரியப்பாவையும் பதவி நீக்கம் செய்தார் நேரு.

பாக்கீஸ்தானுடைய பங்குப்பணத்தைக்கொடுத்தால், அது
அதையெல்லாம் பயன்படுத்தி, ஆயுதங்களை வாங்கி, போர்முயற்சியில்
இன்னும் அதிகமாகத் தீவிரமாக இறங்கி, இந்தியாவின்மீதே
படையெடுக்க முயற்சிக்கும் என்று தெரிந்திருந்தும் தார்மீக
அடிப்படையில் அந்தப் பங்கைப் பாக்கீஸ்தானுக்குக் கொடுத்தது.

இச்செயல்கள் இன்னும் பாதிப்புகளை ஏற்படுத்தியவண்ணம்
இருக்கத்தானே செய்கின்றன?

இன்னும் இருக்கு....

அன்புடன்

ஜெயபாரதி

==================