From ramnrom@... Fri Mar 08 12:10:50 2002
Return-Path: X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 8 Mar 2002 20:10:49 -0000
Received: (qmail 32945 invoked from network); 8 Mar 2002 18:52:44 -0000
Received: from unknown (216.115.97.167) by m8.grp.snv.yahoo.com with QMQP; 8 Mar 2002 18:52:44 -0000
Received: from unknown (HELO web14207.mail.yahoo.com) (216.136.173.71) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 8 Mar 2002 18:52:44 -0000
Message-ID: <20020308185244.48900.qmail@...>
Received: from [4.35.187.102] by web14207.mail.yahoo.com via HTTP; Fri, 08 Mar 2002 10:52:44 PST
Date: Fri, 8 Mar 2002 10:52:44 -0800 (PST)
Subject: Only in Tamil!?
To: tamil-ulagam@yahoogroups.com
Cc: agathiyar@yahoogroups.com
In-Reply-To: MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 16527
அவசரத்தின் காரணமாகவோ, புரிதலின் காரணமாகவோ அங்கங்கே
தேவையான அளவில் ஆங்கில அல்லது வடமொழி போன்ற பிற மொழிச்
சொற்களைப் பயன்படுத்துதல் என்னைப் பொறுத்த வரையில் தவறில்லை.
தமிழிலே மட்டுமே எழுத வேண்டுமென்பதற்காகத் தேடிப் பிடித்துச் செந்தமிழ்ச்
சொற்களைக் கஷ்டப்பட்டுப் பயன்படுத்துவதிலோ, பிறரை 'மண்டை காய
வைப்பதிலோ' எனக்கு உடன்பாடில்லை.
பிற மொழிச் சொற்கள் சில நேரம் கலப்பதால் தமிழுக்கு இன்னமும்
உரம் தான், தவறில்லை என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். பலரும்
அப்படியே நினைக்கிறார்கள். ஆனால், சில நேரம் அதைச் சொல்லக்கூட
அஞ்சுகிறார்கள். அந்த அளவுக்கு நாம் அவர்களைத் தமிழாலேயே அடிக்கிறோம்!
பயமுறுத்தி வைத்திருக்கிறோம்! கரை கட்டி வைத்திருக்கிறோம்!
சுத்தமான அக் மார்க் தமிழில் மட்டுமே எழுதுவதாக நினைத்துக்கொண்டு
சிலர் எழுதுவதைப் படிக்கையில், இவர் என்ன சொல்ல வருகிறார் என்பதே
புரியாமல் படிப்பவர்கள் விழிப்பதில் எனக்கு இஷ்டமில்லை. The main
purpose of communication is to make the other person
understand you. அதிலும் யாழ்ப்பாணத் தமிழ், புறநானூற்றுத் தமிழ்,
முற்சங்கத் தமிழ், பிற்சங்கத் தமிழ் என்ரு பின்னோக்கி மட்டுமே சென்று
படிப்பவரைக் குழப்பி, சொல்ல வந்ததையும் சொதப்புவதில் எனக்கு
உடன்பாடில்லை.
தமிழும், தமிழனும் வளரவேண்டுமென்பதில் இங்கே இரு வேறு கருத்துகள்
இல்லை. பிறமொழிச் சொற்கள் கலப்பதால் தமிழ் வீழ்வதாக, வளர்ச்சி
குன்றி வாடிவிடுவதாக நான் நினைக்கவில்லை. மாறாக, just the
opposite.
யார் தமிழன் என்பதிலே கூட நமக்குள் ஆயிரம் வேறுபாடுகள், அனல்
கக்கும் கருத்துகள், ஜாதீயவெறி வெளிப்பாடுகள். 'நான் தமிழனா, நீ
தமிழனா?'. 'என் வட்டாரத் தமிழ் உயர்ந்ததா, உன் பேட்டைத் தமிழ்
உயர்ந்ததா?', 'உன் பாட்டன் தமிழ் உயர்ந்ததா, என் முப்பாட்டன் எழுதிய
தமிழ் பெட்டரா?' என்கிற ஆயிரம் பயனில்லாச் சிந்தனைகள். இதில்
அரசியல்வாதிகள் ஊடே புகுந்து நெருப்பைத் தூவி, ஊதி வளர்த்து, நன்றாகக்
குளிர் காய்ந்து தமிழின் பெயரில் கோடி கோடியாய்ப்
பண்ணிக்கொண்டிருப்பதைதான் பார்க்கிறோமே!
'தமிழ் தான் எனக்கும் உயிர் மூச்சு, ஆனாலும் அதைப் பிறர் மீது விட
மாட்டேன்' என்று எழுதியவன் மீது எனக்கு மதிப்பு அதிகம்.
வலை போட்டு வளர்த்து நிற்க
இது என்ன இளஞ்செடியா
மலரா மொட்டா
ஆல விருட்சமல்லவா அகிலத்துக்கும் நிழலல்லவா?
காவல் காத்துக் கூட்டம் போட
இது என்ன ஓடுகாலியா
ஒன்றுமறியாப் பேதையா
கற்புக் கனலல்லவா கண்ணகியின் தீ அல்லவா?
தணிக்கை செய்து தனிமையில் படிக்க
இது என்ன மஞ்சள் பத்திரிகையா
அசிங்கமா அடுத்தவன் பார்க்காமல் ஒளிக்கவா
ஆதி கால மொழியல்லவா ஆண்டவனின் குரலல்லவா
வேண்டாம் வீண்பயங்கள் கற்பனைகள்
தோண்டத் தோண்ட இனிக்கும் என் தமிழில்
பிறமொழிக் கரும்புகளால் சேர்க்கையினால்
இனிப்பு கூடுமன்றிக் குறைவில்லை பயமில்லை
புது நூற்றாண்டில் நாம் செய்யவேண்டியவை, சாதிக்க வேண்டியவை
எத்தனையோ உள்ளன. முதலில் நமக்குள் ஒற்றுமையை வளர்ப்போம். வெறுப்புகளை
வேற்றுமைச் சிந் தனைகளை வேரோடு கிள்ளி எறிவோம். வளர்வோம்.
என்றென்றும் அன்புடன்,
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
__________________________________________________
Do You Yahoo!?
Try FREE Yahoo! Mail - the world's greatest free email!
http://mail.yahoo.com/