From ramnrom@... Fri Mar 08 13:04:58 2002
Return-Path:
X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 8 Mar 2002 21:04:58 -0000
Received: (qmail 69515 invoked from network); 8 Mar 2002 19:44:30 -0000
Received: from unknown (216.115.97.172) by m9.grp.snv.yahoo.com with QMQP; 8 Mar 2002 19:44:30 -0000
Received: from unknown (HELO web14206.mail.yahoo.com) (216.136.173.70) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 8 Mar 2002 19:44:30 -0000
Message-ID: <20020308194430.49763.qmail@...>
Received: from [4.35.187.102] by web14206.mail.yahoo.com via HTTP; Fri, 08 Mar 2002 11:44:30 PST
Date: Fri, 8 Mar 2002 11:44:30 -0800 (PST)
Subject: Re: [agathiyar] SuRusuRuppu
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <20020308181028.27590.qmail@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram
X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 16528

'சம்போ சங்கரா' ன்னு சும்மா கெடக்காம பெரிசு அவரு தான்
'மம்போ மகரீனா'ன்னு ஏதோ சங்கு ஊதறாருன்னா, அத்தக் கேட்டுட்டு
மெய்யாலுமே ஆடிப் பார்த்து விட்ட மெய்யடியவர்க்கு,

அதற்குத் தான் அட்வான்சாகவே கதவை முதலிலேயே மூடிக் கொண்டு
விடவேண்டும் என்பது. (என் பூட்டப்பட்ட அறையில் ஜன்னலே இல்லை என்பது வேறு
விஷயம்.)

குருஜியுடைய எனர்ஜி லெவலே 'சித்த' வேற. ஆகாசத்திலயும் சுத்தும்,
அண்டகிரவுண்ட்லயும் படுத்துக் கிடக்கும். அப்பால வைப்ரேஷன், அது இதுங்கும்.
நமக்குப் புரியாது. எப்ப தூங்குதோ, எப்ப முழிக்குதோ. முழிக்கும்போதே
தூங்கும். தூங்கும்போதே முழித்திருக்கும்.

நம்ப ரேஞ்சுக்கு சிம்பிளா சைட்ல ஒரு சேஷகோபாலன், ஜெயலஷ்மி
பாடிக் கொண்டிருந்தாலே போதும். திபேத்தன் சன்யாசி கணக்கா சர்ருன்னு BP
எறங்கிடும். சுர்ருன்னு இருக்கும்.

அதையும் தாண்டி சுறு சுறுப்பு வேணும்னா. இருக்கவே இருக்கு ஸ்ரீ... அய்ய
நான் சொல்ல மாட்டேன்பா. சொல்லாமலே புரிய வைக்கிறது தான்
சிஷ்யனோட ஸ்டைல். தென்திசைக் கடவுள் எனக்கும் குருவல்லவா!

அன்புடன்,

எல்லே ராம்
--- Madhurabarathi wrote:
>
> சுங்கைப்பட்டாணிவாலா பெருசுக்கு
>
> நண்பர் கேட்டதுக்கு மேலே இன்னுமொரு கேள்வி:
>
> இவ்வளவும் செய்தபின் உங்களுக்குப் பாடியாடவும் (body ஆடவும் என்பார்
> முருகு) நேரம் இருக்கிறதா? ;-)
>
> கையோடு போய்ப்பார்த்தேன். மெல்ல அசைந்தேன். பிறகு எழுந்தேன்.
> அப்புறம் ஆடினேன். பின் கையையும் காலையும் வீசி விசிறும்போது
> வீட்டினர் வந்து பார்த்துவிட்டு...
>
> இரண்டு மணி நேரம் அறைக்குள் அடைத்துவைத்துவிட்டனர். (அவர்களுக்கு
> முதலிலேயே சந்தேகம் இருந்தது வேறு சமாச்சாரம்).
>
> உங்கள் மாம்போநிறைந்த,
>
> மதுரபாரதி
>
> On Fri, 08 Mar 2002 jaybee555 wrote :
> >அன்பர்களே,
> >
> > இன்று காலையில் ஒரு நண்பர் வந்திருந்தார். அவர் இன்று
> >முழுமையும் கூடவே இருந்துவிட்டுச் சற்றுமுன்னர்தான் சென்றார்.
> > போகுமுன்னர் சில கேள்விகள் கேட்டார். அவர் பார்த்த
> >சில விஷயங்களையும் சொன்னார்.
> >
> > "நீங்கள் காலையில் வெள்ளென எழுந்துவிடுவதாகச்
> >சொன்னீர்கள். நாள் முழுவதும் யாராவது ஆட்கள் வந்து பார்த்துச்
> >சென்றவண்ணம் இருக்கின்றனர். நடுநடுவே டெலிபோன்.
> >இன்று மட்டுமே நான் பார்க்க, நாலைந்து ஈமெயில் எழுதினீர்கள்.
> >அதில் இரண்டு நீளமானவை. என்னுடன் பேசிக்கொண்டே அதையும்
> >எழுதினீர்கள். மதியம் எனக்குத் தூக்கம் வந்தது. ஆனால் நீங்கள்
> >இண்டர்நெட்டில் தொடர்ந்து என்னவோ செய்துகொண்டிருந்தீர்கள்.
> >நடுவில் பேத்தியைக் கவனித்துக்கொண்டிருந்தீர்கள். இத்தனையும்
> >செய்தும் இப்போது 9-00 மணியாகிறது - அப்படியே ஃப்ரெஷ்ஷாக
> >இருக்கிறீர்களே? இரவில் 12 மணிக்கு மேலாகத்தான் தூங்கச்
> >செல்வதாக சொன்னீர்கள். இதெல்லாம் எப்படி முடிகிறது? குறிப்பாக
> >இண்டர்நெட்டில் தொடர்ந்து உட்கார்ந்து மணிக்கணக்கில் எப்படி
> >எழுதமுடிகிறது. மனசெல்லாம் நிலைகுத்திப் போகுமே?"
> >
> > அவரிடம் விளக்கினேன்.
> > கேட்டுக்கொண்டார்.
> >
> > இண்டர்நெட்டில் எழுதும்போது எப்படி சுறுசுறுப்பை ஏற்படுத்திக்
> >கொள்கிறேன்?
> > அதற்குச் சில முறைகள் வைத்திருக்கிறேன்.
> >
> > அவற்றில் ஒன்று.......
> >
> > கீழ்க்கண்ட இலக்குகளில் ஆடியோ இருக்கிறது. அதன்மூலம்
> >காராஓக்கே(Karaoke) கிடைக்கிறது. ஓர் இலக்கில் மாம்போ இசையும்
> >இன்னொன்றில் கலவையாகவும் கிடைக்கும். அவற்றிலேயே இசை,
> >தாளத்துக்கேற்ப சின்னச்சின்ன உருவங்கள் ஆடும். Mambo with Rambha@
> >Maria Mambo கேட்டிருக்கிறீர்களா? அதான் "ஓ மரீய்யா..ஓ
> மரீய்யா...
> >ஈமேய்லில் லவ் லெட்டர் தரீய்ய்யாஆ? கடலுக்குஊஉ ஃபிஷிங்
> நெட்டூஊஉ...
> >காதலுக்குஊஉ இண்டர்நெட்டூ.." அந்த இசைதான் மாம்போ.
> > மாம்போவிலேயே மாம்போ#5 என்பது மிகவும் பிரபலமானது.
> > அந்த இலக்கிற்குச் சென்று அந்தப் பாட்டைப்போட்டுக்கொள்ள
> >வேண்டும்.
> >
> >http://www.mrznet.com/mambo.html
> >
> >இசைக்கும் தாளத்துக்கும் ஏற்ப மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு,
> >தோள்களைக் குலுக்கிக்கொண்டு, கைகளை வீசி வீசி இருக்கையிலேயே
> >ஆடவேண்டும்.
> > இரண்டு ரவுண்டு ஆடினாலேயே போதும்.
> > சுறுசுறுப்பு ஏறிவிடும்.
> >
> > அடுத்தாற்போல இந்த இலக்குக்குச் செல்லுங்கள்.
> >
> >http://members.aol.com/chichix/club411/index.html
> >
> >Dancing Baby Club 411 என்ற இலக்கு. அங்கு குழந்தை ஒன்று ஆடும்.
> >மிகவும் சுறுசுறுப்பான இசை 'Los Del Rio - Macarena'
> என்பதுதான்.
> >
> > போய்ப்பாருங்கள்.
> > பின்னர் அனுபவத்தைச் சொல்லுங்கள்.
> >
> >அன்புடன்
> >
> >ஜெயபாரதி
> >
> >=============================
>
>


__________________________________________________
Do You Yahoo!?
Try FREE Yahoo! Mail - the world's greatest free email!
http://mail.yahoo.com/