From perichandra@... Fri Mar 08 17:26:56 2002
Return-Path:
X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 9 Mar 2002 01:26:55 -0000
Received: (qmail 20639 invoked from network); 9 Mar 2002 01:26:55 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 9 Mar 2002 01:26:55 -0000
Received: from unknown (HELO n30.groups.yahoo.com) (216.115.96.80) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 9 Mar 2002 01:26:55 -0000
Received: from [216.115.96.38] by n30.groups.yahoo.com with NNFMP; 09 Mar 2002 01:26:55 -0000
Date: Sat, 09 Mar 2002 01:26:51 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Only in Tamil!?
Message-ID:
In-Reply-To: <20020308185244.48900.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2429
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra"
X-Originating-IP: 66.56.78.233
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 16536

--- In agathiyar@y..., Los Angeles Ram wrote:
...
>
> சுத்தமான அக் மார்க் தமிழில் மட்டுமே எழுதுவதாக நினைத்துக்கொண்டு
> சிலர் எழுதுவதைப் படிக்கையில், இவர் என்ன சொல்ல வருகிறார் என்பதே
> புரியாமல் படிப்பவர்கள் விழிப்பதில் எனக்கு இஷ்டமில்லை. The main
> purpose of communication is to make the other person
> understand you.

அந்த ஆங்கில வாக்கியம் சொல்லும் கருத்து இண்டெல் குழுமம் நேற்றுப் படைத்த ஒரு
நுட்பமன்று. அதைத் தமிழ்மொழியில் சொல்லக்கூட உங்களால் முடியவில்லையென்றால் நீங்கள்
ஏன் தமிழ்மொழியில் பிறமொழிக் கலப்புப் பற்றிய கோட்பாடுகளைப் பேச முன்வரவேண்டும்?
நுணுக்கமான கருத்துப் பரிமாற்றக் கலையைத் தமிழ்மொழியில் அதன் எல்லைக்கே எடுத்துச்
சென்றவர் பேசினாலாவது பொருளுண்டு அல்லவா?
அடுத்து: நீங்கள் சொல்வது மொழி ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி என்கிறீர்கள்.
அப்படியென்றால் ஒரு பெண் குழந்தை பெறுதற்கும் காமத்தைத் தீர்க்கவும் உள்ள உயிர் என்பது
ஒன்றுதானே?
இரண்டு கூற்றுகளுக்கும் வேறுபாடென்ன?

அப்படியென்றால் வடமொழியை மத்திய அரசும் பிராமணர்களும் ஏன் இன்னும் மறவாமல்
இருக்கவேண்டும்?

...
>
> தமிழும், தமிழனும் வளரவேண்டுமென்பதில் இங்கே இரு வேறு கருத்துகள்
> இல்லை.

பேசலாம் நன்றாக. இப்படி முன்கூட்டியே (preemptively)
மறுதலித்துவிட்டால் (disclaim) காவலாகிவிடுமோ?

>பிறமொழிச் சொற்கள் கலப்பதால் தமிழ் வீழ்வதாக, வளர்ச்சி
> குன்றி வாடிவிடுவதாக நான் நினைக்கவில்லை. மாறாக, just the
> opposite.

மேலே சொன்ன தமிழ்க்காவல் ஆவலன் என்ற கூற்றுக்கு நேரெதிர்ச் செயல்!
>
> யார் தமிழன் என்பதிலே கூட நமக்குள் ஆயிரம் வேறுபாடுகள், அனல்
> கக்கும் கருத்துகள், ஜாதீயவெறி வெளிப்பாடுகள். 'நான் தமிழனா, நீ
> தமிழனா?'. 'என் வட்டாரத் தமிழ் உயர்ந்ததா, உன் பேட்டைத் தமிழ்
> உயர்ந்ததா?', 'உன் பாட்டன் தமிழ் உயர்ந்ததா, என் முப்பாட்டன் எழுதிய
> தமிழ் பெட்டரா?'

பெட்டரா?

இது என்ன மைக்றோசாப்டுவின் விண்டோசு 2002-இல் வரவிருக்கும்
நுட்பமா? தமிழ்ச்சொல் காணாமல் இருக்க?

இராம் நீங்கள் இந்தக் கடித்தை விளையாட்டாகத் தான் எழுதியிருக்கவேண்டும்.
இல்லாவிட்டால் உங்கள் தகுதிக்கு இழுக்கு.

>என்கிற ஆயிரம் பயனில்லாச் சிந்தனைகள். இதில்
> அரசியல்வாதிகள்

அரசியல்வாதி அகத்தியத்தில் உலவுவார் நம்போல்வாரின் பிரதிநிதானே?

>ஊடே புகுந்து நெருப்பைத் தூவி, ஊதி வளர்த்து, நன்றாகக்
> குளிர் காய்ந்து தமிழின் பெயரில் கோடி கோடியாய்ப்
> பண்ணிக்கொண்டிருப்பதைதான் பார்க்கிறோமே!

...

அன்புடன்
பெ.சந்திரசேகரன்

>