From poo@... Fri Mar 08 18:51:26 2002
Return-Path: X-Sender: poo@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 9 Mar 2002 02:51:26 -0000
Received: (qmail 48783 invoked from network); 9 Mar 2002 02:51:25 -0000
Received: from unknown (216.115.97.172) by m9.grp.snv.yahoo.com with QMQP; 9 Mar 2002 02:51:25 -0000
Received: from unknown (HELO backupsrv.nesma.net.sa) (212.71.32.151) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 9 Mar 2002 02:51:25 -0000
Received: from mail.nesma.net.sa ([192.168.1.18]) by backupsrv.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.197.19); Sat, 9 Mar 2002 05:47:15 +0000
Received: from s0024156401.giasmd01.vsnl.net.in ([212.71.58.191]) by mail.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.537.53); Sat, 9 Mar 2002 05:50:56 +0300
Message-Id: <4.3.0.20020309060411.02c62710@...>
X-Sender: poo/giasmd01.vsnl.net.in@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Sat, 09 Mar 2002 06:12:29 +0300
To: agathiyar@yahoogroups.com,tamil-ulagam@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Only in Tamil!?
In-Reply-To: <20020308185244.48900.qmail@...>
References: Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: poo@...
From: Krishnan Ramasamy X-Yahoo-Group-Post: member; u=23389931
X-Yahoo-Profile: iramaki
X-Yahoo-Message-Num: 16541
At 10:52 AM 03/08/2002 -0800, you wrote:
> அவசரத்தின் காரணமாகவோ, புரிதலின் காரணமாகவோ அங்கங்கே
>தேவையான அளவில் ஆங்கில அல்லது வடமொழி போன்ற பிற மொழிச்
>சொற்களைப் பயன்படுத்துதல் என்னைப் பொறுத்த வரையில் தவறில்லை.
>தமிழிலே மட்டுமே எழுத வேண்டுமென்பதற்காகத் தேடிப் பிடித்துச் செந்தமிழ்ச்
>சொற்களைக் கஷ்டப்பட்டுப் பயன்படுத்துவதிலோ, பிறரை 'மண்டை காய
>வைப்பதிலோ' எனக்கு உடன்பாடில்லை.
>
> பிற மொழிச் சொற்கள் சில நேரம் கலப்பதால் தமிழுக்கு இன்னமும்
>உரம் தான், தவறில்லை என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். பலரும்
>அப்படியே நினைக்கிறார்கள். ஆனால், சில நேரம் அதைச் சொல்லக்கூட
>அஞ்சுகிறார்கள். அந்த அளவுக்கு நாம் அவர்களைத் தமிழாலேயே அடிக்கிறோம்!
>பயமுறுத்தி வைத்திருக்கிறோம்! கரை கட்டி வைத்திருக்கிறோம்!
>
> சுத்தமான அக் மார்க் தமிழில் மட்டுமே எழுதுவதாக நினைத்துக்கொண்டு
>சிலர் எழுதுவதைப் படிக்கையில், இவர் என்ன சொல்ல வருகிறார் என்பதே
>புரியாமல் படிப்பவர்கள் விழிப்பதில்எனக்கு இஷ்டமில்லை. The main
>purpose of communication is to make the other person
>understand you. அதிலும் யாழ்ப்பாணத் தமிழ், புறநானூற்றுத் தமிழ்,
>முற்சங்கத் தமிழ், பிற்சங்கத் தமிழ் என்ரு பின்னோக்கி மட்டுமே சென்று
>படிப்பவரைக் குழப்பி, சொல்ல வந்ததையும் சொதப்புவதில் எனக்கு
>உடன்பாடில்லை.
>
> தமிழும், தமிழனும் வளரவேண்டுமென்பதில் இங்கே இரு வேறு கருத்துகள்
>இல்லை. பிறமொழிச் சொற்கள் கலப்பதால் தமிழ் வீழ்வதாக, வளர்ச்சி
>குன்றி வாடிவிடுவதாக நான் நினைக்கவில்லை. மாறாக, just the
>opposite.
>
> யார் தமிழன் என்பதிலே கூட நமக்குள் ஆயிரம் வேறுபாடுகள், அனல்
>கக்கும் கருத்துகள், ஜாதீயவெறி வெளிப்பாடுகள். 'நான் தமிழனா, நீ
>தமிழனா?'. 'என் வட்டாரத் தமிழ் உயர்ந்ததா, உன் பேட்டைத் தமிழ்
>உயர்ந்ததா?', 'உன் பாட்டன் தமிழ் உயர்ந்ததா, என் முப்பாட்டன் எழுதிய
>தமிழ் பெட்டரா?' என்கிற ஆயிரம் பயனில்லாச் சிந்தனைகள். இதில்
>அரசியல்வாதிகள் ஊடே புகுந்து நெருப்பைத் தூவி, ஊதி வளர்த்து, நன்றாகக்
>குளிர் காய்ந்து தமிழின் பெயரில் கோடி கோடியாய்ப்
>பண்ணிக்கொண்டிருப்பதைதான் பார்க்கிறோமே!
>
> 'தமிழ் தான் எனக்கும் உயிர் மூச்சு, ஆனாலும் அதைப் பிறர் மீது விட
>மாட்டேன்' என்று எழுதியவன் மீது எனக்குமதிப்பு அதிகம்.
>
> வலை போட்டு வளர்த்து நிற்க
> இது என்ன இளஞ்செடியா
> மலரா மொட்டா
> ஆல விருட்சமல்லவா அகிலத்துக்கும் நிழலல்லவா?
>
> காவல் காத்துக் கூட்டம் போட
> இது என்ன ஓடுகாலியா
> ஒன்றுமறியாப் பேதையா
> கற்புக் கனலல்லவா கண்ணகியின் தீ அல்லவா?
>
> தணிக்கை செய்து தனிமையில் படிக்க
> இது என்ன மஞ்சள் பத்திரிகையா
> அசிங்கமா அடுத்தவன் பார்க்காமல் ஒளிக்கவா
> ஆதி கால மொழியல்லவா ஆண்டவனின் குரலல்லவா
>
> வேண்டாம் வீண்பயங்கள் கற்பனைகள்
> தோண்டத் தோண்ட இனிக்கும் என் தமிழில்
> பிறமொழிக் கரும்புகளால் சேர்க்கையினால்
> இனிப்பு கூடுமன்றிக் குறைவில்லை பயமில்லை
>
> தமிழுக்கும் தமிழனுக்கும் குறைவில்லை
> குறையுமில்லை குற்றமுமில்லை
> வெறுப்புக்கும் வேதனைக்கும் இங்கே
> வேலையில்லை வாழ்க தமிழும் தமிழனும்
>
> புது நூற்றாண்டில் நாம் செய்யவேண்டியவை, சாதிக்க வேண்டியவை
>எத்தனையோ உள்ளன. முதலில் நமக்குள் ஒற்றுமையை வளர்ப்போம். வெறுப்புகளை
>வேற்றுமைச் சிந் தனைகளை வேரோடு கிள்ளி எறிவோம். வளர்வோம்.
>
>என்றென்றும் அன்புடன்,
>
>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
அன்பிற்குரிய இராம்,
சில மாதங்கள் முன்பு மின்சுவடியில் கண்ணனும், திருவாட்டி வாசந்தியும் இது பற்றி எழுதியிருந்தார்கள்.
அப்பொழுது நான் எழுதிய மடலை மறுபடியும் வெட்டி ஒட்டி அனுப்புகிறேன். உரையாடல் தொடரட்டும்.
அன்புடன்,
இராம.கி.
-------------------------------------------
அன்பிற்குரிய கண்ணனுக்கு,
இன்று நேற்று என்று இல்லாத, காலகாலமாய் இருக்கின்ற, பழங் கேள்வியை மறுபடியும் உலவ விட்டிருக்கிறீர்கள்.
"தமிழில் பிறமொழிச் சொல் கலக்கலாமா, கூடாதா?"
இதற்கு இருசாரார் எப்போதுமே உண்டு. இவர்கள் இருவருமே தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொண்டதில்லை.
குத்தாட்டத்தில் (chess) சில போது, தளைப்பட்டு (stalemate)ப் போகிறோம் அல்லவா, அதைப்
போல இங்கும் முன் பின் போக முடியாத ஒருவிதமான தளைப்பாடு.
இது எப்படி என்றால், 1972 -ல் இருந்து தமிழ்நாட்டில் வாக்காளர் முன்றாகப் பிரிந்ததுபோல என்று
சொல்லவேண்டும்.
அ.தி.மு.க என்றால் அவர்கள் குடும்பமே அ.தி.மு.க. தான்.
அதே போல தி.மு.க.என்றால் கணமும் பிறழாத ஒரு கூட்டம், பரம்பரை பரம்பரையாய்.
மூன்றாவதாக பேராயக் கட்சிக்கென்று ஒரு கூட்டம், "வெள்ளையனே வெளியே போ" என்ற காலத்தில் இருந்து.
தலைமுறை தலைமுறையாக இந்த உறுதிப்பாடு தொண்டர்களிடம் மாறியதில்லை. ஒருசிறு தலைவர்கள்,
குடிமகன்கள் (:-)) ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்குப் போகலாம்; ஏன் போய்த் திரும்பிக் கூட
வரலாம். ஆனால் இந்த வாக்கு வங்கிகள் ஒருநாளும் மாறுவதில்லை. அதனால் தான் இங்கே இரண்டு அணி ஒன்று
சேர்ந்தால் இன்னொரு அணியின் கதை தேர்தலில் முடிந்துவிடுகிறது. அதாவது வாக்குவாதம் பண்ணி ஒருவர்
கருத்தை மாற்றி இன்னொரு அணிக்குச் சேர்ப்பது என்பது இங்கு குதிரைக் கொம்பு. ஆனாலும், ஒவ்வொரு
தேர்தலுக்கும் தலைவர்கள் சுற்றுப்பயணம் என்ன, மேடைப் பேச்சு என்ன, வீடுவீடாக வாக்குச் சேகரிப்பு என்ன
என்று ஒரு வளையம் வருவார்கள். இது ஒவ்வொரு தேர்தலிலும் நடக்கும். ஏனென்றால் 10% மக்கள் முடிவு செய்யாது
இருக்கிறார்கள் அல்லவா? அவர்களைக் கரைக்கிறார்களாம்.
அதுபோலத்தான் இந்த தனித்தமிழ், மொழிக் கலப்பு பற்றிய உரையாடலும்.
என்னை எவ்வளவு முறை கேட்டாலும் திருப்பித் திருப்பி, நான் சொன்னதையே சொல்லிக்கொண்டு இருப்பேன்.
அதுபோல திருவாட்டி. வாசந்தி போன்றோர் அவர்கள் கருத்தையே வலியுறுத்திக் கொண்டு இருப்பார்கள்.
ஆனாலும் இந்த உரையாடல் அவ்வப்பொழுதுதிரும்பி வரும். இன்னொரு சுற்று; இன்னொரு கரைப்பு.
இனி உரையாடலுக்கு வருகிறேன். (இங்கு தமிழிலே நான் எழுதுவதை ஆங்கிலத்தில்மொழிபெயர்ப்பது
மற்றோருக்கு நலம்பயக்கும் என்றால் செய்யுங்கள். எனக்கு உடன்பாடே!)
ஒரு ஊரில் ஒரு அரசர் இருந்தார். "மக்கள் எப்பொழுதும் நேர்மையானவர்கள்; நாம் இட்ட கட்டளையை மதித்துப்
போற்றுபவர்கள்" என்ற எண்ணத்தை அவர் கொண்டிருந்தார். ஆழ்ந்த அறிவும் பட்டறிவும் கொண்ட அவருடைய முதிய
அமைச்சரோ வேறு கருத்துக் கொண்டவர். இந்த மக்கள் வாய்ப்பு இருந்தால் ஏமாற்றுச் செய்யத் தயங்காதவர்கள்
என்பது அவர் கணிப்பு. எனவே அரசர் கருத்தை அமைச்சர் மறுத்திருக்கிறார். இருவருக்கும் இடையே நடந்த இந்த
கருத்து வேறுபாட்டை ஒட்டி மக்களைச் சோதிக்க எண்ணி அரசர் ஒரு கட்டளை இடுகிறார். அதன்படி நாட்டுமக்கள்
எல்லாம் ஒருபடி பாலை தூர்ந்து போய்க் கிடந்த ஒரு குளத்தில் அடுத்த நாள் காலைக்குள் கொட்ட வேண்டும் என்று
ஆணையிடுகிறார்கள். அரசரும் மூத்த அமைச்சரும் அடுத்த நாள் போய்ப் பார்த்தால் குளம் முழுக்கத் தண்ணீர்.
அரசர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.
ஒவ்வொருவரும் "நான் ஒருபடி தண்ணீர் கலந்தால் யாருக்குத் தெரியப் போகிறது?" என்று எண்ணியதன்
மீநிலை இது. இப்படித்தான் பாலைச் சேர்க்கப் போன இடத்தில் தண்ணீர் இட்டது போல் தமிழ் என்று
தொடங்கித் தமிங்கிலம் ஆகி தமிழேஅறியாமல் ஆங்கிலம் மட்டுமே படித்து அதில் பெருமை கொள்ளும்
போக்கு வந்து சேரும். பாலில் தண்ணீர் கலக்கத் தொடங்கிய பின்னர் பிரித்துக்கொடுக்க அன்னமா வரும்?
பரத நாட்டியம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு ஒரு ஆசிரியரை நாடி மெய்வருத்தம் பாராமல்
உழைத்துக் கற்றுக் கொள்ளும் பெண்கள், "இந்த அடவு மிகச் சரவலாக இருக்கிறது, இங்கே மேல்நாட்டு துவட்டு
(twist) நடையைச் சேர்த்தால் என்ன?" என்று தங்கள் ஆசிரியரைக் கேட்கமுடியுமா? இல்லை, அதுதான் பரத
நாட்டியத்தை வளர்க்கும் என்று கூறமுடியுமா? முடிவில் இப்படிச் சேர்த்துக் கொண்டு போனால் அது பரத
நாட்டியமாக இருக்குமா? டப்பாங் குத்து என்று சொல்ல மாட்டோம்? இல்லை டப்பாங் குத்து தான் இன்றையர்
தமிழர் நடனம் என்று சொல்லிவிடுவோமா?
தமிழிசையில் (இதைத் தானே மதி மயங்கி கருநாடக சங்கீதம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்?)
ஒரு பண்ணைப் பாடிக் கொண்டு இருக்கிறோம். அதில் ஒரு சுரம் மாறிப் பிசிர் அடித்தது என்றால் சுப்புடு
விட்டுவிடுவாரா? இல்லை, பண்ண மாலை அல்லது அராக மாலையில் (இந்தக் காலத்தில் வடமொழித்
தோரணையில் இராக மாலிகை என்று சொல்லுவார்கள்) பலதும் கலப்பது போல் "இட்டது பட்டானால் வாட்டென்ன
சேசொல்லு?" என்று சொல்லிவிட்டுச் சிரிப்போமா? இப்படிக் கலந்தால், நாம் தமிழிசைக் கலைஞர் என்ற
பெயரைப் பெறுவோமோ? இசைவு தவறினால் அது இசையாகுமோ?
ஒரு அலுவ(லக)த்திற்கு வேலை வேண்டிப் போகிறோம். அங்கே இரோப்பிய முறையில் ஆடை அணிந்தால் தான்
மதிப்பார்கள் என்று இருந்தால், அந்த இடத்தில் ஒரு துண்டை மேலே போட்டுக் கொண்டு போவோமோ?
திருவனந்த புரத்தில் பெருமாள் கோயிலுக்குள் போகவேண்டும். சட்டை போட்டுக் கொண்டு தான் கோயில்
உள்ளே போகவேண்டும் என்று அடம் பிடிப்போமோ? இங்கெல்லாம் அந்தந்த ஒழுங்கைக் கடைப்பிடிக்க முன்வரும்
நாம் தமிழ் என்று வந்தால் மட்டும் கலப்படம் வேண்டுமோ? அதற்கென்று ஒழுங்கு இல்லையா? இந்த ஒழுங்கு உங்கள்
ஆளுமையைக் குறைக்கிறதா?
மொழியென்றால் ஒரு கட்டு இருக்கத்தான்செய்யும் அய்யா! அதில் என்ன தப்பு? ஆங்கிலத்தில் பரிமேல் அழகர்
என்று பலுக்குகிற முறையில் எழுத முடியுமோ? இந்த மொழியின் கட்டுக்குத் தகுந்தாற் போல்
Parimelalagar என்றோ Parimelazhagar என்றோ ஏதோ ஒருமுறையில் எழுதுகிறோம்
இல்லையா? இது ஒரு கட்டுத் தானே? நான் விசிட் பண்ணினேன் என்று தமிழில் எழுத உரிமம் கேட்கும் நாம்
I pannified a visit அல்லது I did a visit என்று ஆங்கிலத்தில் எழுதி India Today ஆங்கில
இதழுக்கு அனுப்பிப் பாருங்களேன். "யாராவது ஏற்றுக் கொள்ளுகிறார்களா?" என்று பார்ப்போம்.
ஆங்கிலம் பேசும் போது ஒரு மடல் எழுதுவதானாலும் "அது யாருக்கு எழுதுகிறோம்? உள்ளூர் அலுவ(லக)த்திற்கா?
வெளியூர் அலுவ(லக)த்திற்கா? நண்பருக்கா? பெற்றோருக்கா? தாளிகைக்கா? நாளிதழுக்கா?" என்றெல்லாம்
ஒர்ந்து, முடிந்தால் Wren and Martin பார்த்து பிரித்தானிய ஒழுங்கு தவறாத படியோ, இல்லை
அமெரிக்க முறைப்படியோ எழுதுகிறோம் இல்லையா? இங்கு மட்டும் கவனம் எப்படி வந்தது? எங்கே பண்ணித்
தமிழ்ப் பாணியை அங்கே காண்பித்துப் பார்ப்போமே? யாராவது ஒப்புக் கொள்வார்களா? ஒரு New York
Times - ஒ, ஒரு Guardian - ஓ, இல்லை நம்மூர் Hindu - வோ ஒப்புக் கொண்டுவிடுமா? தினத்
தந்தி, தினமலரில் எழுதுவதுபோல கலவை மொழியில் ஆங்கிலத்தில் எழுதி அனுப்பிப் பாருங்களேன். ஏற்றுக்
கொள்ளப் படுகிறதா என்று தெரிந்து விடுமே? பின், தாய்மொழியில் எழுதுவதுமட்டும் விதிவிலக்கா?
நான் பேச்சுத் தமிழைக் குறை சொல்ல வில்லை. ஆங்கிலம் எழுதுவதில் உள்ள மொழிக் கவனம் தமிழில் ஏன்
காணோம்.?
"இன்றைய இந்தியா" என்று எழுத மறுத்து "இந்தியா டுடே" என்று எழுத்துப் பெயர்ப்புச் செய்தார்கள். இன்று
அதைப் போல "சன் டீவி" (இவர்கள் கதை படிக்கிறது இராமாயணம், இடிக்கிறது பெருமாள் கோயில்) இனி
இன்னொருவர் இன்னும் பாய்வார். இதுதான் மொழியை வளப் படுத்துவதோ? தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி
பதினாறு அடி பாயாதோ? நாம் சரிவர மொழியைப் பயிலவில்லை என்றால், இளையோர் தமிழைப்
பேசுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?இந்த "இஷ்ஷு புஷ்ஷு" பெயர்கள் (கணேஷ், மகேஷ்,
வெங்கடேஷ்......) "அன்"னைத் தவிர்த்து, 70 களின் தொடக்கத்தில் இருந்து மிகுதியாக எழுந்து, இன்று
நீங்கள் கூறியது போல விளங்காத பெயர்களாக வந்தது எதனால்? மேலே சொல்லிய மொழிக் கலப்பின்
குற்றம் தான்.
இப்படிக் கலப்பாகப் பேசி, எழுதித் தானே களி தெலுங்கும், கன்னடமும் முடிவில் கவின் மலையாளமும்
எழுந்தன. இன்றைய ஆந்திரத்தில் 100 B.C -யில் சாதவாகன அரசின் மன்னன் சதகர்ணி வெளியிட்ட
நாணயம் ஒருபக்கம் பிராமி எழுத்தில் பாகதத்திலும், மறுபக்கம் தமிழி எழுத்தில் தமிழிலும் தானே
இருந்தது? என்ன அருத்தம்? அப்பொழுது தமிழ் அவ்வளவு தொலைவு அறியும் மொழியாக இருந்தது. கி.மு.
500, 600 களைச் சேர்ந்த புத்தர் தமிழ் படித்தார் என்று அவரைப் பற்றிய நூல்கள் கூறுகின்றன. என்ன
அருத்தம்? லிச்சாவி வரை தமிழைக் கற்பது தேவை என்று ஒரு அரச குடும்பத்தின் இளவரசர்
உணர்ந்திருக்கிறார் என்றல்லவா தோன்றுகிறது? அதே காலத்தில் இருந்த சமண நூல் திராவிட லிபியை 18
எழுத்துக்களில் ஒன்றாகத் தெரிவிக்கிறது.
ஆனால் நாளடைவில் வரலாற்றுக் காரணமாய் (இதை யாராவது ஆழமாக ஆய்ந்தால் நல்லது) வடமொழி கலக்கக்
கலக்க கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய், குமரிக்கும் வட மாலவன் குன்றத்திற்கும் இடைப்பட்டதாய்க்
குறுகிப் போகவில்லையா? இன்று ஆங்கிலம் கலந்து எழுதுகிற தமிங்கிலம் பார்த்துமா இப்படிக் கலவை மொழி
வேண்டும் என்கிறார்கள்?
மொத்தத்தில், இவர்களுக்குத் தமிழ் அடையாளம் வேண்டாம் என்றுதான் சொல்லாமல் சொல்லுகிறார்களோ?
என்னைக் கேட்டால், இவர்கள் அதை ஒத்துக் கொண்டு வேறு அடையாளத்தை ஏற்றுக் கொண்டு தமிழை
தமிழர்களிடம் விட்டுவிடலாமே!
முடிவாக நான் ஏற்கனவே சொன்னது போல் தமிழர்கள் வேறு, தமிங்கிலர்கள் வேறு.
அவர்கள் பிரிந்துவிட்டார்கள். இனி ஒட்ட முடியாது.