From ramnrom@... Fri Mar 08 19:20:12 2002
Return-Path:
X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 9 Mar 2002 03:20:11 -0000
Received: (qmail 92364 invoked from network); 9 Mar 2002 03:20:10 -0000
Received: from unknown (216.115.97.171) by m10.grp.snv.yahoo.com with QMQP; 9 Mar 2002 03:20:10 -0000
Received: from unknown (HELO web14206.mail.yahoo.com) (216.136.173.70) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 9 Mar 2002 03:20:10 -0000
Message-ID: <20020309032007.20278.qmail@...>
Received: from [4.35.187.102] by web14206.mail.yahoo.com via HTTP; Fri, 08 Mar 2002 19:20:07 PST
Date: Fri, 8 Mar 2002 19:20:07 -0800 (PST)
Subject: Engey En Guru?
To: agathiyar@yahoogroups.com, tamil-ulagam@yahoogroups.com
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram
X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 16542

எங்கே என் குரு?
==============

விரல் நுனியில் வேதம் கற்றான்
பரம்பொருளின் 'பாவம்' கண்டான்

காற்றிடை வெற்றிடம் கண்டான்
கரகோஷத்திடை பக்குவம் கொண்டான்

நெற்றி நடுவிலொரு ஆழ்கடல் கண்டான்
சூனியத்திலும் சுகமெனத் திளைத்தான்

நேற்றும் நாளையும் ஒன்றெனத் தெளிந்தான்
போற்றும் திட்டும் வெறும் பேச்சென மறந்தான்

ஆற்று மணலும் அறுசுவை உணவும்
ஆன பக்குவம் ஒன்றெனத் தெரிந்தான்

ஐம்புலனடிமையும் ஆறறிவுக்கப்பாலும்
ஏழு ஸ்வரங்களும் எண்மாசக்தியும்

இன்னமும் எத்தனை எத்தனையோ
தெளிந்த என் குரு எங்குற்றான்?

தென் திசை நோக்கியோ?
என் மிசை திரும்பியோ?

பொன்னிற நிறத்திலோ?
பொய்மன நிகழ்விலோ?

கண்ணெதிரே ஒரு காட்சிப் பொருளிலோ?
பெண்ணிலோ பேச்சிலோ பேதமைச் சிரிப்பிலோ?

எங்கே என் குரு?
இங்கே வெறும் உரு

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

__________________________________________________
Do You Yahoo!?
Try FREE Yahoo! Mail - the world's greatest free email!
http://mail.yahoo.com/