From ramnrom@... Fri Mar 08 21:29:36 2002
Return-Path:
X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 9 Mar 2002 05:29:36 -0000
Received: (qmail 67712 invoked from network); 9 Mar 2002 05:29:35 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 9 Mar 2002 05:29:35 -0000
Received: from unknown (HELO web14204.mail.yahoo.com) (216.136.172.146) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 9 Mar 2002 05:29:35 -0000
Message-ID: <20020309052935.36736.qmail@...>
Received: from [4.35.187.102] by web14204.mail.yahoo.com via HTTP; Fri, 08 Mar 2002 21:29:35 PST
Date: Fri, 8 Mar 2002 21:29:35 -0800 (PST)
Subject: Ettam number Kadai # March 9, 02
To: agathiyar@yahoogroups.com
Cc: tamil-ulagam@yahoogroups.com
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram
X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 16549

எட்டாம் நம்பர் கடை - மைலாப்பூர், சென்னை 600 004. மார்ச் 9 காலை.
(நமது சிறப்பு நிருபர்)

வார விடுமுறை. அதுவும் மாதத்தில் இரண்டாவது வாரமாதலால கடையில்
கும்பாபிஷேகக் கூட்டம், மன்னிக்கவும், குட முழுக்கேற்றிக் கூட்டம்.

தலிவர் கபாலி வழக்கம் போல் எட்டாம் நம்பர் கடை வாசல் மண் மேட்டின்
மேல் ஆரோகணித்திருக்கிறார். கையில் கிளாஸ். உற்ற நண்பன் வட்டம்.
கோபால் வருகிறான்.

கபாலி: "இன்னாடா கோவாலு, இன்னாடா ஆளே ஒரு மாதிரியா கீற?
நடக்கும்போதே நொண்டிகினே வார? ஆராச்சும் வெச்சிட்டாங்களா ஆப்பு?"

கோபால்: "அய்ய, சும்மா கெடண்ணே, நீ வேற. உஷ்ணக் கொப்ளம்ணே.
அதுக்குள்ளயே வெய்யிலு இந்தப் போடு போடுது. குளுமைக்கு ஒரு பீரு
எறக்கலாம்னு பாத்தாக்க..."

கபாலி: "இன்னாய்யா நாயரு. ஒரு மூத்த குடிமவன் சொல்றான். ஒடனே
கவுனிக்கத் தாவலை? ஒரு கல்யாணி ஃபைவ் தௌஜண்ட் ஓப்பன் பண்ணும்மா.
அப்டியே ஒரு கடா மார்க்கு நோட் பண்ணிக்க. இந்தாடா பீட்டரு. எங்கடா
லைட்டரு, நாட்ல இன்னாடா மேட்டரு?"

பீட்டர்: அண்ணே நீங்க....... நீங்க கவிஞ்ஞருண்ணே.... இன்னா ரைமா
போட்டீங்க பாருங்க, அய்யோ......ஃபெல்ட ஆயிப் போச்சுண்ணே. பீட்டரு,
லைட்டரு, மேட்டரு.. அடாடா. வைரமுத்து ரேஞ்சுக்குத் தூக்கிட்டீங்கண்ணே.

கபாலி: நாய்ரு, பீட்டருக்கும் குடுய்யா ஒரு குவார்ட்டரு

பீட்டர்: அய்யோ, ஃபுல்லரிக்குதுண்ணே. இன்னாய்யா யோசிக்கற நாயரு,
அய்யா சொல்லிட்டாரில்ல...?

நாயர்: எந்தா, 'கடன் அன்பை முறிக்கும்' போர்டு ஆரும் நோக்கலையாக்கும்?
சர்யான ப்ராந்த்தப்பா......

கோபால்: காபாலிண்ணே. நாட்ல அல்லாரும் உங்களப்பத்தித்தாண்ணே
பேசிக்குறாங்கோ. அந்த அய்யரு சேஷன் கையப் புடிச்சி நீங்க என்னவோ ...

கபாலி: அடச்சீ, கஸ்மாலம். அந்த அய்யரு கையத் தொட உடுவாராடா
என்னிய? கை மேல ஜில்க் துணி போட்டுக்கினு ...

இஸ்மாயில்: இன்னாண்ணே நாடி புட்சீங்களா?

கபாலி: இவன் எவண்டா இவன், சுத்த பேமானியா கீறான்? நாடி மேட்டர்
வேறடா. இது பாமிஷ்ட்ரி. சீரோன்னு நம்க்கு ஒரு குருடா...

பீட்டர்: ஆருண்ணே ஜீரோவா?

கபாலி: த்தா..டமாஸ் பண்றான் பார்ரா...ஜீரோ இல்லடா முண்டம்,
சீரோ..சொல்ல்லு... சீ....ரோ.....

பீட்டர்: ஸாரிண்ணே. மன்னிச்சிடுங்கண்ணே. அந்த ஊறுகாவ இப்படி நவுத்துங்க.

கபாலி: அய்ரோட ரைட் ஹாண்ட்ல லைஃப் லைன்ல அங்க ஒரு கீறல்
பாத்தேன்பா. அத்த வெச்சு கணக்கு பண்னாக்க..

இஸ்மாயில்: அண்ணே, அவரு அங்க சொறிஞ்சிருப்பாருங்கண்ணே. அதான்
கீறலு...

கபாலி: மவனே, உன்னைய இன்னிக்குக் கொடல உருவி மாலையாப் போடல,
நா முன்சாமி இல்லடா

இஸ்மாயில்: அண்ணே நீங்க முன்சாமி இல்லிங்கண்ணே.

பீட்டர்: தோடா, வ்ந்துட்டாண்டா இவன். கமல்காசன் கணுக்கா..அண்ணனுக்கே ஐடி
குடுக்கறான் ..உடாதீங்கண்ணே, அவுன ...டாய்...

இஸ்மாயில்: அண்ணனுக்குப் போடுங்கடா ஜே. அப்டியே அம்மாவுக்கும் போடுங்கடா
ஜே, ஜே!

எல்லோரும்: ஜே ஜே ஜே!

தூரத்திலிருந்து விசில் சப்தம் கேட்கிறது.

கோபால்: அண்ணே, ஃபைவ் நாட் ஒன் வாய்ல வெச்சுகினு ஊதறாருண்ணே.

கபாலி: சொதப்பீட்டீங்களேடா சோமாறிப் பசங்களா. ஆள் இண்டியா
ரேடியோ, தூர்தெவசன் அல்லாரும் பேட்டிக்கு வர்ர நேரம்
...போங்கடா..சேசன் மேட்டர் இன்னான்னு அல்சேசன் கணுக்கா ஃபாரீன்ல
கொரைக்கரான். நீங்க லோக்கல் பசங்க வேஸ்ட்டுடா....நாயரே, வர்ட்டா?
ரஜ்னி அர்ஜண்ட்டா கூப்டுகினாராம். போய்ப் பாக்கத் தாவலை? பாபா
ஸலாம். நான் ஐடியா குடுக்கறேன் பாபா. கவலைய உடு. வந்துனே கீறேன்.
வுடு ஜூட்..."

கான்ஸ்டபிள் 501: இன்னாய்யா நாயரு, மாமூல் ஒழுங்கா குடுக்கத்
துப்பில்ல,...இன்னாய்யா கலாட்டா அங்க...?

கூட்டம் 'மப்'போடு கலைகிறது.

மறுபடியும் கூடும்.

--லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்



__________________________________________________
Do You Yahoo!?
Try FREE Yahoo! Mail - the world's greatest free email!
http://mail.yahoo.com/