From ganapathi s@... Fri Mar 08 22:03:17 2002
Return-Path:
X-Sender: ganapathi s@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 9 Mar 2002 06:03:17 -0000
Received: (qmail 38912 invoked from network); 9 Mar 2002 06:03:17 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 9 Mar 2002 06:03:17 -0000
Received: from unknown (HELO mailweb15.rediffmail.com) (203.199.83.27) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 9 Mar 2002 06:03:08 -0000
Received: (qmail 13541 invoked by uid 510); 9 Mar 2002 06:01:17 -0000
Date: 9 Mar 2002 06:01:17 -0000
Message-ID: <20020309060117.13540.qmail@...>
Received: from unknown (12.235.67.33) by rediffmail.com via HTTP; 09 Mar 2002 06:01:17 -0000
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] aLavaikaL
Content-type: text/plain; charset=iso-8859-1; format=flowed
Content-Transfer-Encoding: 8bit
Content-Disposition: inline
From: "Madhurabarathi"
Reply-To: "Madhurabarathi"
X-Yahoo-Group-Post: member; u=83645613
X-Yahoo-Message-Num: 16550



On Sat, 09 Mar 2002 Krishnan Ramasamy wrote :
>அன்பிற்குரிய இணையத்தாருக்கு,
>
>அண்மையில் திரு சாபு மரக்கால் பற்றி இட்ட இடுகையின் பின், பழைய அளவைகள் பற்றி
>உரையாடல் எழுந்தது.
>இனிப் படிப்போர் பார்வைக்கு:
>
>எடுத்தல்:
>
>4 கஃசு = 1 தொடி அல்லது பலம்

இதைப் படித்ததும்

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்

என்ற வள்ளுவப் பேராசானின் வாய்மொழி நினைவுக்கு வந்தது.

பொருள்: நிலத்தை நன்கு உழுது தொடியளவு மண் நன்கு உலர்ந்து நான்கில் ஒரு பங்காக அதாவது
ஒரு கஃசா அளவு ஆனபின் பயிரிட்டால் கைப்பிடியளவு எருக்கூட இடாமலே பயிர் செழித்து
வளரும்.

இரண்டாண்டுகளுக்கு முன் திண்டுக்கல்லில் நான் வங்கிப்பணி செய்துகொண்டிருந்தபோது நடந்த
சம்பவம்:

வேளாண் அதிகாரி ஒருவர் ஒரு கருத்தரங்கில் மண்ணை உழுதபின் சூரிய ஒளியில் உலருமாறு
விடுதல் நல்ல பயிர் வளர்ச்சிக்கு மிக அவசியம் என்றும் அதனால் மண்ணில் தீமை விளைக்கும்
புழுவகைகள் அழிகின்றன என்றும் நன்மைபுரியும் நுண்ணுயிரிகள் வளர்கின்றன என்றும் பேசினார்.
அவர் பேசி முடிந்ததும் இந்தக் குறளைச் சொல்லிப் பொருளும் சொல்லி இரண்டாயிரம் வருடத்துக்கு
முன்னமேயே வள்ளுவன் இதைச் சொல்லியிருக்கினான் எனக் கூறினேன். அந்த அதிகாரியும்
அவையோரான எளிய விவசாயிகளும் இதைக் கேட்டு மலைத்துப் போனார்கள்.

அன்புடன்

மதுரபாரதி

>8 பலம் = 1 சேர்
>5 சேர் = 1 வீசை
>5 வீசை = 1 துலாம்
>8 வீசை = 1 மணங்கு
>20 மணங்கு = 1 கண்டி
>
>பொன்னளவை:
>
>5 கடுகு = 1 சீரகம்
>5 சீரகம் = 1 நெல்
>4 நெல் = 1 குன்றிமணி
>2 குன்றி மணி = 1 மஞ்சாடி
>2 மஞ்சாடி = 1 பணவெடை
>10 பணவெடை = 1 கழஞ்சு
>
>முகத்தல்:
>
>260 நெல் = 1 செவிடு அல்லது கண்டு
>2 செவிடு = 1 ஆழாக்கு
>2 ஆழாக்கு = 1 உழக்கு
>2 உழக்கு = 1 உரி
>2 உரி = 1 நாழி அல்லதி படி
>8 நாழி = 1 குறுணி அல்லது மரக்கால்
>2 குறுணி = 1 பதக்கு (பாண்டி நாட்டில் 10 படி)
>2 பதக்கு = 1 தூணி
>3 தூணி = 1 கலம் (தஞ்சை வட்டார வழக்கு)
>21 மரக்கால் = 1 கோட்டை (பாண்டிநாட்டு வழக்கு)
>18 மரக்கால் = 1 புட்டி (மேலை வடார்க்காட்டு வழக்கு)
>4 (சிறு)படி = 1 வள்ளம்
>40 வள்ளம் = 1 கண்டகம் ( செலம் வட்டார வழக்கு)
>6 மரக்கால் = மூட்டை
>64 மூட்டை = 1 கரிசை
>5 மரக்கால் = 1 பறை
>80 பறை = கரிசை
>
>படியை இடங்கழி என்பது சேரநாட்டு வழக்கு. சிறுபடியை மானம் என்பது மேலை வடார்க்காட்டு
>வழக்கு
>
>நீட்டல்:
>
>8 அணு = 1 தேர்த்துகள்
>8 தேர்த்துகள் = 1 பஞ்சிழை
>8 பஞ்சிழை = 1 மயிர்
>8 மயிர் = 1 நுண்மணல்
>8 நுண்மணல் = 1 கடுகு
>8 கடுகு = 1 நெல்
>8 நெல் = 1 பெருவிரல்
>12 பெருவிரல் = 1 சாண்
>2 சாண் = 1 முழம்
>4 முழம் = 1 கோல் அல்லது பாகம்
>500 கோல் = 1 கூப்பீடு
>4 கூப்பீடு = 1 காதம்
>
>பரப்பளவு:
>
>144 சதுர அடி = 1 குழி
>100 குழி = 1 மா
>20 மா = 1 வேலி
>
>மேலே உள்ள அளவைக்ள் பாவாணரின் தமிழ் வரலாறில் இருந்து படித்தவை. சில அளவைச்
>சமன்பாடுகள்
>(காட்டு: முகத்தலில் சொல்லப் படும் கரிசை; இரண்டு விதமாகச் சமனில்லாது இருக்கிறது.)
>பொருத்தம்
>இல்லாதது போல் தோற்றம் அளிக்கின்றன. யாராவது இவற்றை ஆய்வு செய்து இருப்பின்,
>படித்திருப்பின்
>அவற்றை உள்ளிட்டால் புரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும்.
>
>அன்புடன்,
>இராம.கி.