From naga ganesan@... Sat Mar 09 05:54:40 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 9 Mar 2002 13:54:40 -0000
Received: (qmail 61683 invoked from network); 9 Mar 2002 13:54:39 -0000
Received: from unknown (216.115.97.171) by m6.grp.snv.yahoo.com with QMQP; 9 Mar 2002 13:54:39 -0000
Received: from unknown (HELO n7.groups.yahoo.com) (216.115.96.57) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 9 Mar 2002 13:54:39 -0000
Received: from [216.115.96.178] by n7.groups.yahoo.com with NNFMP; 09 Mar 2002 13:54:39 -0000
Date: Sat, 09 Mar 2002 13:54:37 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Only in Tamil!?
Message-ID:
In-Reply-To: <20020308185244.48900.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 4281
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 216.88.65.144
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16555

--- In agathiyar@y..., Los Angeles Ram wrote:
> அவசரத்தின் காரணமாகவோ, புரிதலின் காரணமாகவோ அங்கங்கே
> தேவையான அளவில் ஆங்கில அல்லது வடமொழி போன்ற பிற மொழிச்
> சொற்களைப் பயன்படுத்துதல் என்னைப் பொறுத்த வரையில் தவறில்லை.
> தமிழிலே மட்டுமே எழுத வேண்டுமென்பதற்காகத் தேடிப் பிடித்துச் செந்தமிழ்ச்
> சொற்களைக் கஷ்டப்பட்டுப் பயன்படுத்துவதிலோ, பிறரை 'மண்டை காய
> வைப்பதிலோ' எனக்கு உடன்பாடில்லை.
>
> பிற மொழிச் சொற்கள் சில நேரம் கலப்பதால் தமிழுக்கு இன்னமும்
> உரம் தான், தவறில்லை என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். பலரும்
> அப்படியே நினைக்கிறார்கள். ஆனால், சில நேரம் அதைச் சொல்லக்கூட
> அஞ்சுகிறார்கள். அந்த அளவுக்கு நாம் அவர்களைத் தமிழாலேயே அடிக்கிறோம்!
> பயமுறுத்தி வைத்திருக்கிறோம்! கரை கட்டி வைத்திருக்கிறோம்!
>

அன்பு நண்பர் ராம்,

எந்த மொழியிலிருந்தும் சொற்கள் தமிழுக்கு
வரலாம். வாழ்க்கை அதிவேகமாக நகர்ந்து
கொண்டுள்ளது. பல கருத்துக்களும் கண்டுபிடிப்புகளும் தமிழில் புகவேண்டும்.
தொல்காப்பியர் தமிழ் எழுத்துப் புணர்த்தி
எந்த மொழிச் சொல்லையும் பாவிக்கச்
சொல்கிறார்:
வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே
- தொல். சூத்திரம்



இதை அடியார்க்கு நல்லார் மேலும் நன்கு விளக்குகிறார்:
"தமிழாவது வடவெழுத்து ஒரீஇ வந்த
எழுத்தானே கட்டப்பட்ட வாக்கியக்கூறுகளும்,
இயல் இசை நாடகங்களுமென்று சொல்லப்படாநின்ற மூன்று தமிழ்களும்".

தெளிவாக, எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்தும்
இலக்கணம் தமிழின் மூலவர்கள் அளித்துளர்.

Diacritical marks என வழங்கும் தொப்பி,
பாதக் குறியீடுகள் பொதுவாக ஒன்பது அன்னிய
எழுத்துகளுக்குத் தேவை. வடமொழி, தமிழ் வாக்கியங்களை
ரோமன் எழுத்தில் எழுதக் கச்சிதமான தொப்பிக்குறிகளைப்
பயன்படுத்துகிறார்கள். அதுபோல், அயல் எழுத்து 9க்குத் தமிழ் எழுத்துமேல்
எழுதுருவங்கள் அழகமைதியுடன் செய்து தகுதர எழுத்திருக்கையில் சேர்த்துவிடலாம்.
நல்ல தொப்பி-பாதக் குறிகள் (diacritcal marks)
தேவைப்படும் 9 எழுத்துக்கள்:
g, j, D (retroflexed D), d (pronounced as dh), b, s, S(sh or .s), h, f.
இவற்றின் தொப்பிக்குறி வந்துவிட்டால்,
தமிழ் எழுத 12 உயிர் எழுத்தும், 18
மெய்யெழுத்தும் போதும். இதனாலேயே
தொல்காப்பியர் தமிழ் எழுத்து முப்பது தான்
என்கிறார்.


என் பழைய மடலிலிருந்து
http://groups.yahoo.com/group/agathiyar/message/10276
<<<
இந்த எழுத்துக்களைத் தமிழ் முறையில் எழுதத் தொல்காப்பியம்
ஒரு எளிய முறையை அருமையாக வகுத்துள்ளது. அதைப் பயனுக்குக்
கொண்டுவந்தால் இந்தக் கிரந்த எழுத்துக்களை எளிதில் தமிழில்
எழுதிவிடமுடியும். காலப்போக்கில் அவை தமிழ்ப்படுத்தப்படும்
(தத்சமமாகவோ, தற்பவமாகவோ).

வடமொழி, ங்கிலம் போன்ற இந்தோ-ஐரோப்பிய மொழிகளில்
இருந்து தமிழ் கடன் வாங்கும்போது முக்கியமாக 9 எழுத்துக்களை
உபயோகிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

அவற்றைப் பின்வருமாறு எழுதி, மூல உச்சரிப்பைச் சொல்லிப்
பழகினால் தமிழ் எழுதுதல் திருந்தும்:

g = 'க் , j = 'ச் , D (retroflexed D) = 'ட் , d (pronounced as dh)
= 'த் , b = 'ப் ,
s = ~ச் , S(sh or .s) = ^ச் , h = 'ஃ , f = 'வ்

இவற்றைக் கொண்டு எப்படி ங்கில வார்த்தைகளை, சம~ச்கிருதப் பதங்களை எழுதுவது
என்று திரு. செல்வகுமார், நான், திரு. நாக. இளங்கோவன், ... போன்றோர் சில பல
கட்டுரைகளை தமிழ் இணையத்திலும், அகத்தியரிலும் எழுதினோம்.

ஜலஜா (=திருமகள்) = 'சல'சா
ஷார்ஜா = ^சார்'சா
ஹென்றி = ஃஎன்றி
Bryan = 'பிரையன்
fan = 'வேன்
Gary = 'கேரி
Mudhdhu (தெலுங்கில் முத்து இவ்வாறு மெலிந்து ஒலிக்கும்) = மு'த்'து
....
(இந்த 9 எழுத்துக்கான குறியீட்டைத் (diacriticals) தமிழில் இது
போல இறக்கினால், ங்கிலம், வடமொழி போன்ற எவற்றின்
உச்சரிப்பையும் பேசுவது எளிது.)

பல கோடி மக்களால், பலவேறு நாடுகளில் வாழும் தமிழர் தம் பா^சையில்
பல வேற்றுமொழிப் பதங்களைப் பிரயோகிப்பது இயற்கைதான். அதனைச் சட்டமிட்டுத்
தடைசெய்தல் இயலாவொன்று. மேலும் உலக மொழிகளில் வழங்கும்
எல்லாக் கருத்துக்களுக்கும் தமிழில் சொற்கள் இல்லை. சிலர் உருவாக்கி
வருவதைப் பார்க்கிறோம். அவை மேலும் பயனாக, பொறியியல், மருத்துவக்
கல்லூரிகள் தமிழில் இயங்கும் நிலை வரவேண்டும்.
>>>

மேலும், பார்க்கவும்
http://groups.yahoo.com/group/agathiyar/message/3669
http://groups.yahoo.com/group/agathiyar/message/3258

அன்புடன்,
நா. கணேசன்