From kisna@... Sat Mar 09 06:20:56 2002
Return-Path:
X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 9 Mar 2002 14:20:56 -0000
Received: (qmail 49843 invoked from network); 9 Mar 2002 14:20:56 -0000
Received: from unknown (216.115.97.172) by m12.grp.snv.yahoo.com with QMQP; 9 Mar 2002 14:20:56 -0000
Received: from unknown (HELO sombre.pacific.net.sg) (203.120.90.146) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 9 Mar 2002 14:20:55 -0000
Received: from smtp2.pacific.net.sg (smtp2.pacific.net.sg [203.120.90.169]) by sombre.pacific.net.sg with ESMTP id g29EKr217249 for ; Sat, 9 Mar 2002 22:20:53 +0800
Received: from Kisna (cm63.omega44.scvmaxonline.com.sg [218.186.44.63]) by smtp2.pacific.net.sg with SMTP id g29EKqY17110 for ; Sat, 9 Mar 2002 22:20:52 +0800
Message-Id: <3.0.6.32.20020309222622.008381c0@...>
X-Sender: kisna@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sat, 09 Mar 2002 22:26:22 +0800
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Siddhar Bhoomi
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: Krishnan
X-Yahoo-Group-Post: member; u=21549133
X-Yahoo-Message-Num: 16557



At 04:57 PM 3/8/2002 -0800, you wrote:
>திருவண்ணாமலை சித்தர்கள் பற்றிய கட்டுரை ஒன்று இப்போது தான் கும்தம்
>ஜங்ஷனில் பார்த்தேன்.
>
>பார்க்க: http://www.kumudam.com/junmain1.html
>
>anputan,
>
>எல்லே ராம்

>மலை உட்டியில் இருக்கும் நாராயண சுவாமி சித்தரைத்தான் பலருக்கு
>நன்றாக தெரிகிறது.
> பத்து வருடங்களுக்கு முன் மலையேறியவர். கீழே இறங்கவில்லை.
> சாப்பிட ஏதாவது கொடுத்தால் வாங்கமாட்டார். பால் வாங்கிக்கொள்வார்.
> அவர் குடித்ததை யாரும் பார்க்கவில்லை
*******************************************


சில ஆண்டுகளுக்கு முன் நான் சென்றிருந்த போது நானும் மற்றும் மூன்று நண்பர்களும்
திருவண்ணாமலை உச்சியில் ஏறிபார்க்கவும், தீபம் ஏற்றுமிடம் பார்க்கவும் விருப்பட்டோ(ன்)ம்
மேலும் அங்கு ஒரு சித்தர் இருப்பதாகவும் கேள்விப்பட்டு அவரையும் சந்திக்கவிரும்பினோம்.

மறுநாள் அதிகாலை 5 மணிக்கு மலை ஏற புறப்பட்டோம். சரியான பாதை கிடையாது.
தடமும் கிடையாது. வந்த மூவரில் ஒருவர் அங்கு போலீஸ் உளவு இலாக்காவில்
பணி புரிபவர். அவரின் ஊகத்தின் பேரில் சென்றோம். மலை உச்சியடைய காலை
8 ஆகிவிட்டது ( 7கி.மை.தூரம்).

உச்சியடைந்த போது சில குரங்குகள் அங்கு இருப்பது கண்டு வியந்தோம்.
அவை எங்களை முறைத்து, உறும நாங்கள் சிறிது நேரம் அமைதியாக நின்றோம்.
பின் அந்த குரங்குகள் இடது புறமாக சென்றுவிட்டது. மலை உச்சியில் தீபம் ஏற்றும்
இடம் சம தரையாக இருந்தது. காலை பனியும், மேகமும் சூழ்ந்து இதமாக இருந்தது.
திருவண்ணாமலை தெளிவாக தெரிந்தது.

இதனை இரசித்திருந்த சமயம் இரண்டொரு குரங்குகள் அங்கு வந்தன. நாங்கள்
உடன் கொண்டு சென்றிருந்த நிலக்கடலையை கொடுத்தோம்.
அமைதியாக வாங்கி நின்றன.
அப்போதுதான் நினைவு வந்த இங்கு ஒரு சித்தர் இருப்பதாக சொன்னார்களே...
காணவில்லையே என்று பேசிக்கொண்டிருந்த சமயம் அந்த குரங்கள் மலையின்
சரிவில் கீழ் இறங்கின. மலையின் சரிவில் அடர்ந்த செடிகள், சின்ன மரங்கள்
இருப்பதைக் கண்டோம்.குரங்குகள் அங்கு சென்று மெதுவாக இறங்கி நின்றது.
அங்கு நாராயண சுவாமி சித்தர் இருப்பதைக் கண்டோம்.

செடிகளை வளைத்து, சின்ன மரங்களின் கிளைகளை வளைத்தும், அட்டை வைத்தும்
இருந்த அந்த இடத்தில் சித்தர் குக்காலிட்ட நிலையில் அமர்ந்திருந்தார்.
எங்களை கண்டு எந்த சலனமும் காட்டவில்லை.
மிக குறுகலான அந்த இடத்தில் அவருக்கு பக்கத்தில் நானும்-அடுத்து நண்பர்களும்
அமர்ந்தனர். சுருங்கிய தோல். ஒல்லியான உருவம். உள் ஒடுங்கிய கண். தீட்சையான
பார்வை. வணங்கினோம். திருநீரு இட்டார்.

கொண்டு சென்ற வாழைப்பழம், நிலைக்கடலை அவரிடம் கொடுத்தோம்.
அதனை வாங்கிய சித்தர் ஆளுக்கு இரண்டு வாழைப்பழம் கொடுத்தார். இரண்டு
அவர் சாப்பிட்டார்.மீதமிருந்த பழங்களை குரங்குகளுக்கு கொடுத்தார்.
அதோ போல் நிலைக்கடலை கொடுத்தார். பிறகு கொண்டு சென்ற நீரும் கொடுத்தோம்.
அருகில் கிடந்த உடைந்த ஓட்டில் நீரை ஊற்றி அருந்தினார்.
ஆனால், பேசவில்லை. வந்த மற்ற நண்பர்கள் சில கேள்விகளை கேட்டுக்கொண்டு
இருந்தார்கள். அவரும் சைகை, ஜாடை மூலம்பதில் அளித்துக்கொண்டு இருந்தார்.

நான் அமைதியாக அவரை பார்த்தவண்ணமிருந்தேன். காற்றையே உணவாகக் கொண்டு,
தனது தவவலிமையால் தன்னை சுற்றி ஒரு சுவலையை, அரனையும் கொண்டு இருப்பதை
அறிந்தேன். இறுதியாக நான் வெளியூரிலிருந்து வந்திருப்பதாகவும், புறப்படும்நாளையும்
சொன்னேன். சிறிது நேரம் அமைதியாக சிந்தித்தார்.பின் சைகை மூலம் அண்ணமலையாரை
5 முறையும், உண்ணாமுலையை 3 முறையும் வலம் வந்து செல்லபடி கூறி எனக்கு நெற்றியில்
திருநீரு இட்டு ஆசீர்வதித்தார்.

சமீபத்தில் நான் மலை சென்றபோது [மலை உச்சிக்கு அல்ல] கந்தர் ஆசிரமம்,
[குகை] நமச்சிவாயார் சித்தர் சமாதி சென்ற போது [ இவைகள் மலையின் நடுபகுதியில் இருக்கிறது]
அங்கு மாடுகளை மேய்க்கொண்டு இருந்த ஒருவர் எங்களை அணுகி எங்களுடன்
பேசிக்கொண்டு இருந்தார்.

அவரிடம் மலை உச்சியிலிருக்கும் சித்தரைப் பற்றி விசாரித்தோம். இப்போது
முன் போல் எப்போது அவரை பார்க்க இயலாது என்று அதிகாலை மட்டும் பார்க்க
இயலும் என்றும் கூறினார். அங்கிருக்கும் ஒரு குடிசைக்காட்டி அங்கு நின்ற பசு மாட்டையும்
காட்டி, சித்தரை பார்க்க விரும்புவர்கள் அங்கிருந்து பாலை வாங்கிக்கொண்டால், அங்கிருந்து
ஒருவர் சித்தரைப் பார்க்க அழைத்துச் செல்வார். சித்தர் பேசமாட்டார். அவர் சித்தரின் சைகையை
புரிந்துக்கொண்டு அவர்களுக்கு விளக்கம் அளிப்பார். சிலருக்கு அங்கிருக்கும் முலிகையைப்
பறித்து நோய்க்கு கொடுப்பதாகவும், பலருக்கு நோய் தீர்ந்து இருப்பதாகவும் கூறினார்.

எனக்கும் மீண்டும் மலை உச்சியிலிருக்கும் சித்தரைப் பார்க்க ஆசைதான்.
என்ன செய்வது நமது குரு உத்தரவு கொடுக்கவில்லை. அவர் சொன்ன
காரணம் நான் ஏற்றுக்கொண்டேன்.

வாய்ப்பு அமைந்தால் நான் தரித்த குகை நமச்சிவயா
சித்தரை பற்றி எழுதுகிறேன்.

அன்புடன்,
கிருஷ்ணன்
சிங்கை


At 04:57 PM 3/8/2002 -0800, you wrote:
>திருவண்ணாமலை சித்தர்கள் பற்றிய கட்டுரை ஒன்று இப்போது தான் கும்தம்
>ஜங்ஷனில் பார்த்தேன்.
>
>பார்க்க: http://www.kumudam.com/junmain1.html
>
>anputan,
>
>எல்லே ராம்
>
>__________________________________________________
>Do You Yahoo!?
>Try FREE Yahoo! Mail - the world's greatest free email!
>http://mail.yahoo.com/
>
>
>---------------------------------------------------------------------------
------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------
------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>
-----------------------------------------------------------
வலைத்தள குறிப்பு (For Your Book Mark:-)
http://www.geocities.com/singaikrish/
-----------------------------------------------------------