From perichandra@... Sat Mar 09 07:20:09 2002
Return-Path:
X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 9 Mar 2002 15:20:07 -0000
Received: (qmail 83545 invoked from network); 9 Mar 2002 15:20:06 -0000
Received: from unknown (216.115.97.172) by m10.grp.snv.yahoo.com with QMQP; 9 Mar 2002 15:20:06 -0000
Received: from unknown (HELO n4.groups.yahoo.com) (216.115.96.54) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 9 Mar 2002 15:20:05 -0000
Received: from [216.115.96.50] by n4.groups.yahoo.com with NNFMP; 09 Mar 2002 15:19:40 -0000
Date: Sat, 09 Mar 2002 15:16:44 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Only in Tamil!?
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2879
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra"
X-Originating-IP: 66.56.78.233
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 16559

--- In agathiyar@y..., "naga_ganesan" wrote:
...
> >
>
...
>
>
> இதை அடியார்க்கு நல்லார் மேலும் நன்கு விளக்குகிறார்:
> "தமிழாவது வடவெழுத்து ஒரீஇ வந்த
> எழுத்தானே கட்டப்பட்ட வாக்கியக்கூறுகளும்,
> இயல் இசை நாடகங்களுமென்று சொல்லப்படாநின்ற மூன்று தமிழ்களும்".
>
> தெளிவாக, எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்தும்
> இலக்கணம் தமிழின் மூலவர்கள் அளித்துளர்.

அங்கே வடமொழிக்கு மட்டும் சிறப்பான இடம் உள்ளது. எல்லா மொழிக்கும் இல்லை.
ஏனெனில் இரண்டுக்கும் உள்ள தொடர்பு சிறப்பானது.
பலசொற்கள் உண்மையிலேயே
மேலும் பல தமிழ்ச்சொற்கள் வடதிராவிடகளால் ஒலிப்புச் சிதைத்து வழங்கியதும் காரணம்.
சூடு என்பதை ஜூடு என்றும் பச்சியை பஜ்ஜியென்றும் தமிழகத்தின் வடபகுதியார் ஒலித்துச்
சிதைந்ததை வேற்றுமொழியாக்காமல் இருக்கவே அந்த ஏற்பாடு.

...

>
> அவற்றைப் பின்வருமாறு எழுதி, மூல உச்சரிப்பைச் சொல்லிப்
> பழகினால் தமிழ் எழுதுதல் திருந்தும்:
>
> g = 'க் , j = 'ச் , D (retroflexed D) = 'ட் , d (pronounced as
dh)
> = 'த் , b = 'ப் ,
> s = ~ச் , S(sh or .s) = ^ச் , h = 'ஃ , f = 'வ்
>
....
>
> ஜலஜா (=திருமகள்) = 'சல'சா
> ஷார்ஜா = ^சார்'சா
> ஹென்றி = ஃஎன்றி
> Bryan = 'பிரையன்
> fan = 'வேன்
> Gary = 'கேரி
> Mudhdhu (தெலுங்கில் முத்து இவ்வாறு மெலிந்து ஒலிக்கும்) = மு'த்'து
> ....


> (இந்த 9 எழுத்துக்கான குறியீட்டைத் (diacriticals) தமிழில் இது
> போல இறக்கினால், ங்கிலம், வடமொழி போன்ற எவற்றின்
> உச்சரிப்பையும் பேசுவது எளிது.)


சரி. சுடலைமுத்துப் பழனியப்பன் வினாவிய நல்லதொரு வினா:
ஆங்கிலத்தில் உள்ள உயிரோசைகளைக் குறிக்க எங்கே போவது?
cash என்பதில் உள்ள aவுக்கும் ஒரு குறியைக் காண்போமே?
அவ்வளவு தூரம் ஏன்? வடமொழியில் உள்ள ரு/ரூ/லூ ஆகிய உயிர்களையும் குறிக்க
குறி வகுப்போம். அதன்படிக் க்ருஷ்ணன் என்பதில் உள்ள ருக்குறியை மாற்றிக் குறித்தால்
வடமொழியின் உயிரோசையைச் செம்மையாகக் குறிக்கலாமே.

சப்பானியரும் சீனரும் ரகர/லகரம் என்னும் பரவலான ஓசைகூட இன்றி உலகைக்
கலக்குகிறார்கள். காரணம் அவர்களுக்குத் தாழ்மனப்பான்மை இல்லை.
பொருளாதார ஒழுங்கு உண்டு.

இந்தக் குறியீட்டு வேட்கைக்குக் காரணம் ஆங்கில வேட்கைதான்.
அத்தகையவர்கள் இந்த மாற்றத்தோடு அமையார்கள். அந்த மாற்றத்தின்பின்
அடுத்தகட்டமாக இன்னும் மாற்றுங்கள் என்பார்கள். அந்தமாற்றம் ஆங்கிலத்திற்கு
அருகில் இன்னும் இட்டுச்செல்லும். அதேகும்பல்தான் "ஒன்று உற்றக்கால் விற்றற்குரியர்
விரைந்து" என்று விற்றுவிடுவார்கள்.

தமிழின் மூன்று கூறுகளும் உள்ளத்தின் தெளிவுக்கு அளவுகோல்கள்.
உள்ளம் குழம்பினால் அம்மூன்றும் குழம்பும்.

நம்மிடம் இருப்பது தொலைந்தால் மீட்கமுடியாதது. இதில் குழப்படி செய்து
"பதியிழந்தனம் பாலனை இழந்தனம்..படைத்த நிதி இழந்தனம்...
கதியிழக்கிலும் கட்டுரை இழக்கிலேம்" என்ற அரிச்சந்திரபுராணத்துக் கூற்றில்
உள்ள நிலைமையை மாற்றிச் சமுதாயத்தை வீணடிக்கவேண்டாம்.


அன்புடன்
பெ.சந்திரசேகரன்