From naga ganesan@... Sat Mar 09 08:12:15 2002
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 9 Mar 2002 16:12:15 -0000
Received: (qmail 12144 invoked from network); 9 Mar 2002 16:12:15 -0000
Received: from unknown (216.115.97.167) by m12.grp.snv.yahoo.com with QMQP; 9 Mar 2002 16:12:15 -0000
Received: from unknown (HELO n9.groups.yahoo.com) (216.115.96.59) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 9 Mar 2002 16:12:15 -0000
Received: from [216.115.96.47] by n9.groups.yahoo.com with NNFMP; 09 Mar 2002 16:12:14 -0000
Date: Sat, 09 Mar 2002 16:12:12 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Only in Tamil!?
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 4374
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 209.144.229.199
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16560
> --- In agathiyar@y..., "naga_ganesan" wrote:
> > இதை அடியார்க்கு நல்லார் மேலும் நன்கு விளக்குகிறார்:
> > "தமிழாவது வடவெழுத்து ஒரீஇ வந்த
> > எழுத்தானே கட்டப்பட்ட வாக்கியக்கூறுகளும்,
> > இயல் இசை நாடகங்களுமென்று சொல்லப்படாநின்ற மூன்று தமிழ்களும்".
> >
> > தெளிவாக, எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்தும்
> > இலக்கணம் தமிழின் மூலவர்கள் அளித்துளர்.
> --- In agathiyar@y..., "perichandra" wrote:
> அங்கே வடமொழிக்கு மட்டும் சிறப்பான இடம் உள்ளது. எல்லா மொழிக்கும் இல்லை.
> ஏனெனில் இரண்டுக்கும் உள்ள தொடர்பு சிறப்பானது.
> பலசொற்கள் உண்மையிலேயே
> மேலும் பல தமிழ்ச்சொற்கள் வடதிராவிடகளால் ஒலிப்புச் சிதைத்து வழங்கியதும் காரணம்.
> சூடு என்பதை ஜூடு என்றும் பச்சியை பஜ்ஜியென்றும் தமிழகத்தின் வடபகுதியார் ஒலித்துச்
> சிதைந்ததை வேற்றுமொழியாக்காமல் இருக்கவே அந்த ஏற்பாடு.
தொல்காப்பிய, அடியார்க்கு நல்லார் காலங்களில்
தமிழுடன் தொடர்பு வடமொழிக்கு மாத்திரம் தான் முக்கியமாக.
இப்போது தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் உள்ள தொடர்பு
வரலாறு கண்டிராதது, ஆங்கில-தமிழ் தொடர்புகளில்
ஒரு சிறுகூறே தமிழ்-வடமொழிக்கு.
NG> >
> > அவற்றைப் பின்வருமாறு எழுதி, மூல உச்சரிப்பைச் சொல்லிப்
> > பழகினால் தமிழ் எழுதுதல் திருந்தும்:
> >
> > g = 'க் , j = 'ச் , D (retroflexed D) = 'ட் , d (pronounced as
> dh)
> > = 'த் , b = 'ப் ,
> > s = ~ச் , S(sh or .s) = ^ச் , h = 'ஃ , f = 'வ்
> >
> ....
> >
> > ஜலஜா (=திருமகள்) = 'சல'சா
> > ஷார்ஜா = ^சார்'சா
> > ஹென்றி = ஃஎன்றி
> > Bryan = 'பிரையன்
> > fan = 'வேன்
> > Gary = 'கேரி
> > Mudhdhu (தெலுங்கில் முத்து இவ்வாறு மெலிந்து ஒலிக்கும்) = மு'த்'து
> > ....
>
>
> > (இந்த 9 எழுத்துக்கான குறியீட்டைத் (diacriticals) தமிழில் இது
> > போல இறக்கினால், ஆங்கிலம், வடமொழி போன்ற எவற்றின்
> > உச்சரிப்பையும் பேசுவது எளிது.)
>
இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால், தமிழர் வசதிபெற்றதும்
குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்புகின்றனர்.
மருத்துவ, பொறியியல் வேலைகள் இந்தியாவின் பல மாநிலங்கள், சிங்கை, அரபகம்,
ஐரோப்பா, அமெரிக்கா என்று பெற வெகுவாக உழைப்பது
கண்கூடு.
தமிழ் மாத்திரம் அறிந்தோர் மக்கட்பெயரைச் சரியாக
உச்சரிப்பதில்லை என்பது பொதுவாக வரும் குற்றச்சாட்டு.
இதனால் தாழ்வு மன்ப்பான்மை ஏறுகிறது.
இதை மறுக்கவே, தமிழர் மேலும் மேலும் ஆங்கில
வார்த்தைகளைச் சேர்க்கின்றனர்.
இந்தோ-ஐரோப்பிய மொழி உச்சரிப்பு எதுவெனக்
காட்டத் தமிழில் வழியில்லை. அதற்கு
diacriticals உதவும். அவை உரோமன் எழுத்தில்
பயன்படுகிறதே? அது ஆகாதா தமிழுக்கு?
இந்தோ-ஐரோப்பிய மொழி உச்சரிப்பு இதுதான்
என்று காட்ட தொப்பிக்குறிகள் தமிழ் எழுத்தின்மீது
மிக உதவும். தமிழ் வடமொழி ஒலிப்பைக்காட்ட
வெள்ளையன் தொப்பிக்குறிகள் உபயோகிப்பதுபோல்
இவை தமிழில் ஏறவேண்டும். நோய்க்கு மருந்து,
விமானம், தொழில்நுட்பம், கல்வி, வேலை, இன்ன
பிறவற்றை வெள்ளையரிடமிருந்து பெறும் இந்தியர்
தொப்பிக்குறிகளைப் பெறுவதில் தவறில்லை.
அவற்றைத் தமிழ் இலக்கணத்துக்கு ஒவ்வுமாப்போல
18 மெய்களில் தேர்ந்து மொழியியலார் அமைத்தல்
வேண்டும்.
>
> சரி. சுடலைமுத்துப் பழனியப்பன் வினாவிய நல்லதொரு வினா:
> ஆங்கிலத்தில் உள்ள உயிரோசைகளைக் குறிக்க எங்கே போவது?
> cash என்பதில் உள்ள aவுக்கும் ஒரு குறியைக் காண்போமே?
சுடலைமுத்து பழனியப்பன் எங்கே இதுபற்றி எழுதியிருக்கிறார்?
அது தமிழில் இருக்கிறதா? அல்லது, ஆங்கிலத்தில் உள்ளதா?
> அவ்வளவு தூரம் ஏன்? வடமொழியில் உள்ள ரு/ரூ/லூ ஆகிய உயிர்களையும் குறிக்க
> குறி வகுப்போம். அதன்படிக் க்ருஷ்ணன் என்பதில் உள்ள ருக்குறியை மாற்றிக் குறித்தால்
> வடமொழியின் உயிரோசையைச் செம்மையாகக் குறிக்கலாமே.
cash, apple இவற்றில் வரும் a ஓசை இரண்டாம்பட்சம்.
அதற்கும் தொப்பிக்குறி செல்வா எழுதியுள்ளார்.
வடமொழி ரு/ரூ/லு இதற்கெல்லாம் அங்கேயே
வார்த்தை இல்லை.
முக்கியமாக, ஆங்கில வடமொழி வார்த்தைகள் எழுதும்போது
கீழ்க்கண்ட 9 எழுத்துகள் பயன்படுகின்றன. அவற்றுக்கு
சரியான வடிவைத் தமிழ் எழுத்தில் காணாவிட்டால்
தமிழ் மாத்திரம் படிப்போர் என்னவென்று சொல்லமுடியாது.
அதனால்தான் சொல்கிறேன்
g = 'க் , j = 'ச் , D (retroflexed D) = 'ட் , d (pronounced as dh)
= 'த் , b = 'ப் ,
s = ~ச் , S(sh or .s) = ^ச் , h = 'ஃ , f = 'வ்
அன்புடன்,
நா. கணேசன்
இன்னொன்று: உங்கள் எழுத்தில் இன்னும் இகரம் தெரிவதில்லை