From ganapathi s@... Sat Mar 09 09:22:58 2002
Return-Path:
X-Sender: ganapathi s@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 9 Mar 2002 17:22:57 -0000
Received: (qmail 68845 invoked from network); 9 Mar 2002 17:22:57 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 9 Mar 2002 17:22:57 -0000
Received: from unknown (HELO mailweb16.rediffmail.com) (203.199.83.28) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 9 Mar 2002 17:22:55 -0000
Received: (qmail 13122 invoked by uid 510); 9 Mar 2002 17:20:26 -0000
Date: 9 Mar 2002 17:20:26 -0000
Message-ID: <20020309172026.13121.qmail@...>
Received: from unknown (12.235.67.33) by rediffmail.com via HTTP; 09 Mar 2002 17:20:26 -0000
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] aLavaikaL
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
Content-Disposition: inline
From: "Madhurabarathi"
Reply-To: "Madhurabarathi"
X-Yahoo-Group-Post: member; u=83645613
X-Yahoo-Message-Num: 16566


மிகத்துல்லியமாக அளக்கப்படவேண்டிய பொன்னளவை கடுகு என்ற அலகிலிருந்தும், நீட்டல் அளவை அணு என்ற அலகிலிருந்தும் துவங்குவதைக் காண்கிறோம்.

இரணியன் வதைப் படலத்தில் "எங்கே இருக்கிறான் ஹரி, தூணிலிருக்கிறானா?" என்று இரணியன் கேட்க அதற்குப் பிரகலாதன் பதிலுரைக்கையில்:

சாணிலும் உளன் ஓர் தன்மை அணுவினைச் சதகூறிட்ட
கோணிலும் உளன் மாமேருக் குன்றிலும் உளன் இந்நின்ற
தூணிலும் உளன் நீ சொன்ன சொல்லினும்உளன் இத்தன்மை
காணுதி விரைவின் என்றான் நன்று எனக்கனகன் சொன்னான்

என வருகிறது.

ஒரு அணுவை நூறு பங்காகக் கூறிட்டால் அதில் ஒரு பங்கு கோண் என்று சொல்கிறது இப்பாடல். தமிழில் இருந்த அளவையா? (வால்மீகியிலிருந்தும் இதைக் கம்பன் பெற்றிருக்க முடியும், அதனால்தான் இந்த வினா)

அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்

என்று திருக்குறள் பாயிரத்தில் வரும். நாம் அந்த அணுவை atom என்று பொருள் கொள்கிறோம். நம் முன்னோர் அறிந்த அணு இந்த நீட்டலளவையின் அணுவாகத்தான் இருக்கமுடியும்.
அறிந்தோர் விளக்கவும்.

அன்புடன்

மதுரபாரதி


> >On Sat, 09 Mar 2002 Krishnan Ramasamy wrote :
> > >அன்பிற்குரிய இணையத்தாருக்கு,
> > >
> > >அண்மையில் திரு சாபு மரக்கால் பற்றி இட்ட இடுகையின் பின், பழைய அளவைகள் பற்றி
> > >உரையாடல் எழுந்தது.
> > >இனிப் படிப்போர் பார்வைக்கு:
> > >
> > >எடுத்தல்:
> > >
> > >4 கஃசு = 1 தொடி அல்லது பலம்
> > >8 பலம் = 1 சேர்
> > >5 சேர் = 1 வீசை
> > >5 வீசை = 1 துலாம்
> > >8 வீசை = 1 மணங்கு
> > >20 மணங்கு = 1 கண்டி
> > >
> > >பொன்னளவை:
> > >
> > >5 கடுகு = 1 சீரகம்
> > >5 சீரகம் = 1 நெல்
> > >4 நெல் = 1 குன்றிமணி
> > >2 குன்றி மணி = 1 மஞ்சாடி
> > >2 மஞ்சாடி = 1 பணவெடை
> > >10 பணவெடை = 1 கழஞ்சு
> > >
> > >முகத்தல்:
> > >
> > >260 நெல் = 1 செவிடு அல்லது கண்டு
> > >2 செவிடு = 1 ஆழாக்கு
> > >2 ஆழாக்கு = 1 உழக்கு
> > >2 உழக்கு = 1 உரி
> > >2 உரி = 1 நாழி அல்லதி படி
> > >8 நாழி = 1 குறுணி அல்லது மரக்கால்
> > >2 குறுணி = 1 பதக்கு (பாண்டி நாட்டில் 10 படி)
> > >2 பதக்கு = 1 தூணி
> > >3 தூணி = 1 கலம் (தஞ்சை வட்டார வழக்கு)
> > >21 மரக்கால் = 1 கோட்டை (பாண்டிநாட்டு வழக்கு)
> > >18 மரக்கால் = 1 புட்டி (மேலை வடார்க்காட்டு வழக்கு)
> > >4 (சிறு)படி = 1 வள்ளம்
> > >40 வள்ளம் = 1 கண்டகம் ( செலம் வட்டார வழக்கு)
> > >6 மரக்கால் = மூட்டை
> > >64 மூட்டை = 1 கரிசை
> > >5 மரக்கால் = 1 பறை
> > >80 பறை = கரிசை
> > >
> > >படியை இடங்கழி என்பது சேரநாட்டு வழக்கு. சிறுபடியை மானம் என்பது மேலை வடார்க்காட்டு
> > >வழக்கு
> > >
> > >நீட்டல்:
> > >
> > >8 அணு = 1 தேர்த்துகள்
> > >8 தேர்த்துகள் = 1 பஞ்சிழை
> > >8 பஞ்சிழை = 1 மயிர்
> > >8 மயிர் = 1 நுண்மணல்
> > >8 நுண்மணல் = 1 கடுகு
> > >8 கடுகு = 1 நெல்
> > >8 நெல் = 1 பெருவிரல்
> > >12 பெருவிரல் = 1 சாண்
> > >2 சாண் = 1 முழம்
> > >4 முழம் = 1 கோல் அல்லது பாகம்
> > >500 கோல் = 1 கூப்பீடு
> > >4 கூப்பீடு = 1 காதம்
> > >
> > >பரப்பளவு:
> > >
> > >144 சதுர அடி = 1 குழி
> > >100 குழி = 1 மா
> > >20 மா = 1 வேலி