From ganapathi s@... Sat Mar 09 09:28:35 2002
Return-Path:
X-Sender: ganapathi s@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 9 Mar 2002 17:28:35 -0000
Received: (qmail 78598 invoked from network); 9 Mar 2002 17:28:29 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 9 Mar 2002 17:28:29 -0000
Received: from unknown (HELO mailweb15.rediffmail.com) (203.199.83.27) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 9 Mar 2002 17:28:29 -0000
Received: (qmail 26984 invoked by uid 510); 9 Mar 2002 17:26:44 -0000
Date: 9 Mar 2002 17:26:44 -0000
Message-ID: <20020309172644.26983.qmail@...>
Received: from unknown (12.235.67.33) by rediffmail.com via HTTP; 09 Mar 2002 17:26:44 -0000
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] aLavaikaL
Content-type: text/plain; charset=iso-8859-1; format=flowed
Content-Transfer-Encoding: 8bit
Content-Disposition: inline
From: "Madhurabarathi"
Reply-To: "Madhurabarathi"
X-Yahoo-Group-Post: member; u=83645613
X-Yahoo-Message-Num: 16567


நாழி என்கிற முகத்தலளவை அவ்வையின் வாக்குண்டாம் செய்யுளில் வருகிறது:

ஆழ அமுக்கி முகப்பினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது நால் நாழி - தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தம்தம்
விதியின் பயனே பயன்.

அன்புடன்

மதுரபாரதி

On Sat, 09 Mar 2002 Krishnan Ramasamy wrote :
>At 06:01 AM 03/09/2002 +0000, you wrote:
>
>
> >On Sat, 09 Mar 2002 Krishnan Ramasamy wrote :
> > >அன்பிற்குரிய இணையத்தாருக்கு,
> > >
> > >அண்மையில் திரு சாபு மரக்கால் பற்றி இட்ட இடுகையின் பின், பழைய அளவைகள்
>பற்றி
> > >உரையாடல் எழுந்தது.
> > >இனிப் படிப்போர் பார்வைக்கு:
> > >
> > >எடுத்தல்:
> > >
> > >4 கஃசு = 1 தொடி அல்லது பலம்
> >
> >இதைப் படித்ததும்
> >
> > தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
> > வேண்டாது சாலப் படும்
> >
> >என்ற வள்ளுவப் பேராசானின் வாய்மொழி நினைவுக்கு வந்தது.
> >
> >பொருள்: நிலத்தை நன்கு உழுது தொடியளவு மண் நன்கு உலர்ந்து நான்கில் ஒரு பங்காக
>அதாவது
> >ஒரு கஃசா அளவு ஆனபின் பயிரிட்டால் கைப்பிடியளவு எருக்கூட இடாமலே பயிர்
>செழித்து
> >வளரும்.
> >
> >இரண்டாண்டுகளுக்கு முன் திண்டுக்கல்லில் நான் வங்கிப்பணி செய்துகொண்டிருந்தபோது நடந்த
> >சம்பவம்:
> >
> >வேளாண் அதிகாரி ஒருவர் ஒரு கருத்தரங்கில் மண்ணை உழுதபின் சூரிய ஒளியில்
>உலருமாறு
> >விடுதல் நல்ல பயிர் வளர்ச்சிக்கு மிக அவசியம் என்றும் அதனால் மண்ணில் தீமை
>விளைக்கும்
> >புழுவகைகள் அழிகின்றன என்றும் நன்மைபுரியும் நுண்ணுயிரிகள் வளர்கின்றன என்றும்
>பேசினார்.
> >அவர் பேசி முடிந்ததும் இந்தக் குறளைச் சொல்லிப் பொருளும் சொல்லி இரண்டாயிரம்
>வருடத்துக்கு
> >முன்னமேயே வள்ளுவன் இதைச் சொல்லியிருக்கினான் எனக் கூறினேன். அந்த அதிகாரியும்
> >அவையோரான எளிய விவசாயிகளும் இதைக் கேட்டு மலைத்துப் போனார்கள்.
> >
> >அன்புடன்
> >
> >மதுரபாரதி
>
>அருமையான விளக்கம். வியந்து போனேன். இது போல இந்த அளவைகளை, அறிவியல்
>உண்மைகளை எடுத்துக்
>காட்டும் முன்னைய இலக்கிய வரிகளை (பா, கட்டுரை, இன்ன பிற) எடுத்துக் காட்டி
>ஒவ்வொருவரும் தங்களுக்குத்
>தெரிந்ததை எழுதலாமே! அது பின்னாள் ஆய்வுக்கும் உதவும். நாமும் நம் மரபை உணர்வோம்.
>
>அன்புடன்,
>இராம.கி.
>
>
> > >8 பலம் = 1 சேர்
> > >5 சேர் = 1 வீசை
> > >5 வீசை = 1 துலாம்
> > >8 வீசை = 1 மணங்கு
> > >20 மணங்கு = 1 கண்டி
> > >
> > >பொன்னளவை:
> > >
> > >5 கடுகு = 1 சீரகம்
> > >5 சீரகம் = 1 நெல்
> > >4 நெல் = 1 குன்றிமணி
> > >2 குன்றி மணி = 1 மஞ்சாடி
> > >2 மஞ்சாடி = 1 பணவெடை
> > >10 பணவெடை = 1 கழஞ்சு
> > >
> > >முகத்தல்:
> > >
> > >260 நெல் = 1 செவிடு அல்லது கண்டு
> > >2 செவிடு = 1 ஆழாக்கு
> > >2 ஆழாக்கு = 1 உழக்கு
> > >2 உழக்கு = 1 உரி
> > >2 உரி = 1 நாழி அல்லதி படி
> > >8 நாழி = 1 குறுணி அல்லது மரக்கால்
> > >2 குறுணி = 1 பதக்கு (பாண்டி நாட்டில் 10 படி)
> > >2 பதக்கு = 1 தூணி
> > >3 தூணி = 1 கலம் (தஞ்சை வட்டார வழக்கு)
> > >21 மரக்கால் = 1 கோட்டை (பாண்டிநாட்டு வழக்கு)
> > >18 மரக்கால் = 1 புட்டி (மேலை வடார்க்காட்டு வழக்கு)
> > >4 (சிறு)படி = 1 வள்ளம்
> > >40 வள்ளம் = 1 கண்டகம் ( செலம் வட்டார வழக்கு)
> > >6 மரக்கால் = மூட்டை
> > >64 மூட்டை = 1 கரிசை
> > >5 மரக்கால் = 1 பறை
> > >80 பறை = கரிசை