From ganapathi s@... Sat Mar 09 10:47:51 2002
Return-Path:
X-Sender: ganapathi s@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 9 Mar 2002 18:47:51 -0000
Received: (qmail 89674 invoked from network); 9 Mar 2002 18:47:51 -0000
Received: from unknown (216.115.97.167) by m5.grp.snv.yahoo.com with QMQP; 9 Mar 2002 18:47:51 -0000
Received: from unknown (HELO mailweb24.rediffmail.com) (203.199.83.148) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 9 Mar 2002 18:47:50 -0000
Received: (qmail 31129 invoked by uid 510); 9 Mar 2002 18:45:36 -0000
Date: 9 Mar 2002 18:45:36 -0000
Message-ID: <20020309184536.31128.qmail@...>
Received: from unknown (12.235.67.33) by rediffmail.com via HTTP; 09 Mar 2002 18:45:36 -0000
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] aLavaikaL
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
Content-Disposition: inline
From: "Madhurabarathi"
Reply-To: "Madhurabarathi"
X-Yahoo-Group-Post: member; u=83645613
X-Yahoo-Message-Num: 16576


மீண்டும் சிந்திக்கையில், இரணியன் வதைப்படலம் வால்மீகியில் கிடையாது.யுத்த காண்டத்துக்கு வெள்ளோட்டமாகக் கம்பன் எழுதிப்பார்த்து அதை இங்கு பொருத்தினான் என்று ஒரு கருத்து உண்டு. அப்படியானால் கோண் என்ற சொல் வால்மீகியிடமிருந்து பெற்றதல்ல.
(சேனைகளின் அளவைக் குறிப்பிடும் அக்ஷரோணியை அக்குரோணி என்று பயின்றானே கம்பன்).

சரியா?

மதுரபாரதி

On Sun, 10 Mar 2002 Krishnan Ramasamy wrote :
>At 05:20 PM 03/09/2002 +0000, you wrote:
>
> >மிகத்துல்லியமாக அளக்கப்படவேண்டிய பொன்னளவை கடுகு என்ற அலகிலிருந்தும், நீட்டல் அளவை அணு என்ற
> >அலகிலிருந்தும் துவங்குவதைக் காண்கிறோம்.
> >
> >இரணியன் வதைப் படலத்தில் "எங்கே இருக்கிறான் ஹரி, தூணிலிருக்கிறானா?" என்று இரணியன் கேட்க
> >அதற்குப் பிரகலாதன் பதிலுரைக்கையில்:
> >
> > சாணிலும் உளன் ஓர் தன்மை அணுவினைச் சதகூறிட்ட
> > கோணிலும் உளன் மாமேருக் குன்றிலும்உளன் இந்நின்ற
> > தூணிலும் உளன் நீ சொன்ன சொல்லினும் உளன் இத்தன்மை
> > காணுதி விரைவின் என்றான் நன்று எனக் கனகன் சொன்னான்
> >
> >என வருகிறது.
> >
> >ஒரு அணுவை நூறு பங்காகக் கூறிட்டால் அதில் ஒரு பங்கு கோண் என்று சொல்கிறது இப்பாடல். தமிழில்
> >இருந்த அளவையா? (வால்மீகியிலிருந்தும் இதைக் கம்பன் பெற்றிருக்க முடியும், அதனால்தான் இந்த வினா)
>
>சரியான கேள்வி. பெரியவர்தான் விளக்க வேண்டும்.
>
>
> > அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக்
> > குறுகத் தறித்த குறள்
> >
> >என்று திருக்குறள் பாயிரத்தில் வரும். நாம் அந்த அணுவை atom என்று பொருள் கொள்கிறோம். நம்
> >முன்னோர் அறிந்த அணு இந்த நீட்டலளவையின் அணுவாகத்தான் இருக்கமுடியும்.
> >அறிந்தோர் விளக்கவும்.
>
>உண்மை. அணு என்பதற்கு அதுமம் (தயங்காமல் பயன்படுத்துங்கள்; இது அல்+துமம் = துமிக்க முடியாதது) என்ற
>பொருளே இதுவரை கொண்டுள்ளோம். மாறாக அது நீட்டல் அளவையாக இருந்தால்? உங்கள் சிந்தனை புதிது.
>அய்யா, மருத்துவர் அய்யா, இங்கே சற்று வாருங்களேன்?
>
> >அன்புடன்
> >
> >மதுரபாரதி
> >
> >
> > > >On Sat, 09 Mar 2002 Krishnan Ramasamy wrote :
> > > > >அன்பிற்குரிய இணையத்தாருக்கு,
> > > > >
> > > > >அண்மையில் திரு சாபு மரக்கால் பற்றி இட்ட இடுகையின் பின், பழைய அளவைகள் பற்றி
> > > > >உரையாடல் எழுந்தது.
> > > > >இனிப் படிப்போர் பார்வைக்கு:
> > > > >
> > > > >எடுத்தல்:
> > > > >
> > > > >4 கஃசு = 1 தொடி அல்லது பலம்
> > > > >8 பலம் = 1 சேர்
> > > > >5 சேர் = 1 வீசை
> > > > >5 வீசை = 1 துலாம்
> > > > >8 வீசை = 1 மணங்கு
> > > > >20 மணங்கு = 1 கண்டி