From perichandra@... Sat Mar 09 12:01:06 2002
Return-Path:
X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 9 Mar 2002 20:01:02 -0000
Received: (qmail 47802 invoked from network); 9 Mar 2002 20:01:01 -0000
Received: from unknown (216.115.97.172) by m2.grp.snv.yahoo.com with QMQP; 9 Mar 2002 20:01:01 -0000
Received: from unknown (HELO n3.groups.yahoo.com) (216.115.96.53) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 9 Mar 2002 20:01:01 -0000
Received: from [216.115.96.37] by n3.groups.yahoo.com with NNFMP; 09 Mar 2002 20:01:00 -0000
Date: Sat, 09 Mar 2002 20:00:58 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Only in Tamil!?
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3284
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra"
X-Originating-IP: 66.56.78.233
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 16577

தொல்காப்பியர் காலத்திலேயே தமிழ்மொழி சிதைந்த வட்டாரங்கள் iருந்தது நன்றாகவே
தெரிந்து அந்தச் சிதைவுப் போக்கை நால்வகைச் சொற்கள் (iயல், திசை, திரி, வடம்) என்று
வகுத்துள்ளார்கள்.
எனவே ஒரே மொழிக்குடும்பத்தினின்று பிராகுயி போன்றவை குறிப்பாகப் பிரிந்தனவென்று
அவர்க்குத் தெரியுமோ தெரியாதோ ஆனால் வேங்கடத்திற்கு வடபால் கொடுந்தமிழ் வழங்குவது
போன்றவற்றை அறிந்து அச்சொற்களுக்கும் செந்தமிழ் வடிவிற்கும் உள்ள தொடர்பையும்
அறிந்து அவர் காலத்தில் வல்லெழுத்துகளின் நால்வகை ஒலிக்கும் ஒரே குறியீடு என்று
மொழியியலுக்கு வழி வகுத்துவிட்டார்கள்.
மேலும் நாம் இன்று வழங்கும் சொற்றொகுதியைவிடவும் ஏன் அகராதிகளில் காணும்
சொற்றொகுதிகளையும் விடவும் சில மடங்குச் சொற்கள் அப்போது வழங்கியிருக்கவேண்டும்.
மேலும் நாம் வடமொழி என்று கருதும் சொற்களோ சொல்லமைப்புகளோ அக்காலத்தில்
அவ்வாறில்லை.
நீங்களே பன்முறை அத்தகைய சொற்களைக் காட்டியுள்ளீர்கள்;
நாராயணன் என்பது தமிழென்று சொல்வீர்கள்.
இவ்வாறு பலசொற்கள் இடைப்பட்ட ஆயிரக்கணக்கான ஆண்டில் தவறாக நோக்குறுதல்
பெருகியுள்ளது. அரவிந்தம் என்பது தமிழென்று எமனோ-புரோ சொல்கிறார்கள்; பரிபாடலில்
அது பயில்கிறது! அதுபோல் சில திடுக்கிடும் சொற்களைப் பரிபாடலிலும் ஏன் பத்துப்பாட்டிலும்
கூடக் காணலாம்! மேலும் சில வியக்கத்தக்க சொல்லமைப்புகளும் தொடரமைப்புகளும்
காணலாம்.
முன்பே ஒருமுறை எழுதியவாறு ஆங்கிலத்தின் fibre-optic போன்ற அமைப்புகள்
தமிழ்மொழியில் உண்டு: வாயில் (இல்வாய்), இடைமுலை (முலை இடை), உள்ளாறு (ஆற்று
உள்), கீழ்நீர் (நீர்க் கீழ்) என்று அமைப்புகள் சங்கப் பாட்டிலிருந்து பின்னர்ப் படிப்படியாய்
அருகின.
ஆகவே தொல்காப்பியர் போன்ற பேரறிஞர்க்கெல்லாம் பேரறிஞர்களுக்குச் சிதைவின் காரணம்
தெரிந்து வடசொல்லென்று வகை வகுத்திருப்பார்கள்.
கற்பனை செய்துபாருங்கள்: 2300 ஆண்டுகள் முன்பு நம்மிடம் இருக்கும் நவீன மொழியியல்
கருவிகளின்றி அவர் ஒலிமம்-ஒலிதம் (phoneme-phone) என்று பாகுபடுத்தி நெடுங்கணக்கு
ஏற்படுத்தியுள்ளார்.


அன்புடன்
பெ.சந்திரசேகரன்

--- In agathiyar@y..., "naga_ganesan" wrote:
> --- In agathiyar@y..., "perichandra" wrote:
> > அங்கே வடமொழிக்கு மட்டும் சிறப்பான இடம் உள்ளது. எல்லா மொழிக்கும் இல்லை.
> > ஏனெனில் இரண்டுக்கும் உள்ள தொடர்பு சிறப்பானது.
> > பலசொற்கள் உண்மையிலேயே
> > மேலும் பல தமிழ்ச்சொற்கள் வடதிராவிடகளால் ஒலிப்புச் சிதைத்து வழங்கியதும் காரணம்.
> > சூடு என்பதை ஜூடு என்றும் பச்சியை பஜ்ஜியென்றும் தமிழகத்தின் வடபகுதியார் ஒலித்துச்
> > சிதைந்ததை வேற்றுமொழியாக்காமல் இருக்கவே அந்த ஏற்பாடு.
>
> வடதிராவிடம் என்பது பீகார் மால்தோ, ஈரான், பாகித்தான் பிரகுவி (< இது இப்ராகிம்
> என்ற சொல்லிலிருந்து பெற்றது) போன்ற எழுத்தறியாப் பா^சைகள்.
>
> இவை தமிழுடன் தொடர்புற்றன என்று தொல்காப்பியருக்குத் தெரியாது.
> அவருக்கும் ஏனை இலக்கணகருத்தருக்கும், தமிழ் தெலுங்கு, கன்னடம்
> எல்லாம் ஒரு மூல பா^சையிலிருந்து பிறந்தவை என்றே தெரியாது.
> தமிழ் இலக்கணங்களில் அவைபற்றிச் சொல்லப்படவில்லை.
>
> ஆங்கிலம் வடமொழித் தொடர்பை 1790களில் சர் வில்லியம் 'சோன்~ஸ்
> காட்டினார். 1830களில் பிரான்சி~ஸ் வயிட் எல்லி~ஸ் காட்டினார்.
> பின்னர் கால்டுவெல் 1856-ல் நூலாக விரித்தார். பின்னரே
> அனைவருக்கும் திராவிட, ஆரிய மொழிக் குடும்பங்கள் பற்றித்
> தெரியலாயிற்று.
>
> இவையெல்லாம் தொல்காப்பியர் சொல்லவில்லை.
>
> அன்புடன்,
> நா. கணேசன்