From perichandra@... Sat Mar 09 15:00:33 2002
Return-Path: X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 9 Mar 2002 23:00:33 -0000
Received: (qmail 82816 invoked from network); 9 Mar 2002 23:00:32 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 9 Mar 2002 23:00:32 -0000
Received: from unknown (HELO n10.groups.yahoo.com) (216.115.96.60) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 9 Mar 2002 23:00:32 -0000
Received: from [216.115.96.143] by n10.groups.yahoo.com with NNFMP; 09 Mar 2002 23:00:32 -0000
Date: Sat, 09 Mar 2002 23:00:31 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Only in Tamil!?
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2619
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra" X-Originating-IP: 66.56.78.233
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 16582
--- In agathiyar@y..., "naga_ganesan" wrote:
> --- In agathiyar@y..., "perichandra" wrote:
> > தொல்காப்பியர் காலத்திலேயே தமிழ்மொழி சிதைந்த வட்டாரங்கள் iருந்தது நன்றாகவே
> > தெரிந்து அந்தச் சிதைவுப் போக்கை நால்வகைச் சொற்கள் (iயல், திசை, திரி, வடம்)
என்று
> > வகுத்துள்ளார்கள்.
>
> அன்பு நண்பரே,
>
> வடமொழியில் சில தமிழ்ச் சொற்கள் திரிந்து உள்ளன
> என்று தொல்காப்பியருக்குத் தெரிவதாகத் தோற்றவில்லை.
> அவருக்குத் தெரிந்திருந்தால் சொல்லாமலா போயிருப்பார்?
வடசொல் என்று ஒரு வகைச் சொல்லை வகுத்து இன்றைய மொழியியலார் வியக்கும் வண்ணம்
வல்லெழுத்துகளின் நன்னான்கு ஒலிக்கும் ஒரே ஓர் ஒலிமமாக (phoneme) வகுத்த
மொழியியல் மேதைக்கு வடமொழி-தமிழ்மொழி இரண்டுக்கும் உள்ள ஒப்புமை தெரியாமல்
இருக்குமா?
அவர் வடமொழியைக் கட்டாயம் பயின்றிருக்கவேண்டும். மற்ற என்னென்ன மொழிகள் கலைகள்
கற்றாரென்பது நம் பாணிப்பே.
அவர்போலும் மேதைகளுக்கு இரண்டுக்கும் உள்ள ஒப்புமை தென்பட்டிருக்கவேண்டும்.
வல்லெழுத்தின் ஒலிவேறுபாடுகளைப் பொருட்படுத்தாமை தொல்காப்பியரின்
செயற்கைப் படைப்பன்று; அது திராவிடமொழிகளின் இயற்கை.
திராவிட மொழிகளில் எல்லாமே வல்லெழுத்துகளில் க,ச,ட,த,ப, ற என்னும் ஆறுக்கும்
உரப்பு(unvoiced aspirate), எடுப்பு(voiced), கனைப்பு (voiced aspirate)
ஆகியவற்றிற்கு வேறுபாடு கிடையாது. பகல் என்பதில் பகரத்தையும் ககரத்தையும் தனித்தனியே
நாலுவகையாக ஒலித்து உறழ்ந்து கோத்தாலும் ஒரேசொல்தான்: பக(3)ல், ப(3)கல்,
ப(3)க(3)ல் என்று உறழ்ச்சிகள் (combination) பதினாறு பிறக்கலாம்; ஆனால் எல்லாம்
ஒரே சொல்தான். இதுவே திராவிட மொழிக்குடும்பம் மற்ற குடும்பங்கள் போல் விரைந்து
சிதையாமல் இருக்கச் சட்டகம் இட்டது.
தொல்காப்பியர் கொடுந்தமிழில் இதன் வெளிப்பாட்டை உணர்ந்து அறிந்து சூத்திரம்
வகுத்திருக்கவேண்டும். அவர்காலத்தில் உலகில் இலக்கணம் எழுதிய இன்னொரு மொழி
வடமொழி; மற்றது தமிழ்மொழி. அதிலும் அவர் பாணினியினின்று மிகமிக அடிப்படையில்
வேறுபட்டிருப்பது வெறுமையில் முளைப்பதன்று; வழக்கமான அறிவால் விளைவதும் அன்று.
இந்த ஒரு அமைப்பே தொல்காப்பியத்தின் இறைமைக்குச் சான்று.
>
> வடமொழிச் சொல்லைத் தமிழ்ப்படுத்தும் விதியை
> வகுத்துள்ளார். அது சரி.
>
> ஆனால், வேங்கடத்துக்கு அப்பால் இருக்கும் மொழிகளில்
> எது எது திரவிட-தமிழ்க் குடும்பம், வட இந்திய மொழிகளில்
> தமிழ்/திரவிடக் கூறுகள் பற்றி அவர் சொல்வதேயில்லை.
நானொன்றும் அப்படிச் சொல்லவேயில்லை. ஆனால் வேங்கடத்திற்கப்பால்
வழங்கும் மொழி கொடுந்தமிழ் என்று அவர்கள் அறிந்ததும் அது செந்தமிழ்மொழியின்
சிதைவென்றும் அறிந்ததும் அவற்றிகுள்ள சிதைவு நெறியை அறிந்ததும் போதும்.
...
அன்புடன்
பெ.சந்திரசேகரன்