From naga ganesan@... Sat Mar 09 16:43:17 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 10 Mar 2002 00:43:07 -0000
Received: (qmail 18333 invoked from network); 10 Mar 2002 00:43:07 -0000
Received: from unknown (216.115.97.167) by m8.grp.snv.yahoo.com with QMQP; 10 Mar 2002 00:43:07 -0000
Received: from unknown (HELO n22.groups.yahoo.com) (216.115.96.72) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 10 Mar 2002 00:43:06 -0000
Received: from [216.115.96.124] by n22.groups.yahoo.com with NNFMP; 10 Mar 2002 00:43:06 -0000
Date: Sun, 10 Mar 2002 00:43:05 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Only in Tamil!?
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1302
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 216.88.65.110
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16583

--- In agathiyar@y..., "perichandra" wrote:
> அவர்காலத்தில் உலகில் இலக்கணம் எழுதிய இன்னொரு மொழி
> வடமொழி; மற்றது தமிழ்மொழி. அதிலும் அவர் பாணினியினின்று மிகமிக அடிப்படையில்
> வேறுபட்டிருப்பது வெறுமையில் முளைப்பதன்று; வழக்கமான அறிவால் விளைவதும் அன்று.
> இந்த ஒரு அமைப்பே தொல்காப்பியத்தின் இறைமைக்குச் சான்று.

தொல்காப்பியருக்கு சில நூற்றாண்டுகள் முந்தியது பாணினீயம்.
அந்தப் பாணினிக்குச் சில நூற்றாண்டுகள் முன்னர் எழுந்த பிரதிசாக்ய
சூத்திரங்களில் வடமொழி இலக்கணம் தோன்றுகிறது என்கின்றனர்.

பதஞ்சலியின் மகாபாஷ்யத்துச் சூத்திரங்கள் சில அப்படியே
இருப்பதும் தொல்காப்பியம் பின்னர் என்பது காட்டும்.
புள்ளி தமிழ் இலக்கணகாரரின் பெரிய கண்டுபிடிப்பு.
இன்று தகுதர எழுத்து இணையத்தில் உலவுகிறது
என்றால் அதற்குப் புள்ளி ஒருமுக்கிய காரணம்.
புள்ளி தொல்பொருள் ஆராய்ச்சியால் கி.பி. இரண்டாம்
நூற்றாண்டு எனத் தெரிகிறது. கி.பி. 4 நூற். வரையாகிலும்
வளர்ந்த நூல் தொல்காப்பியம்.

உயிர் எழுத்து வரிசையில் ஐ, ஔ எழுத்துக்கள் இருக்கும்
இடமும், மெய்யெழுத்தில் ற, ன உள்ள இடங்கள்
வடமொழி இலக்கணம்பால் படும்.

வேதம் - வைதிகம்; சிவ-சைவ; என்பதனால்தான்
எ/ஏ பின் ஐ எழுத்தையும், கோதம-கௌதம
என்பதுபோலும் பற்றியே ஒ/ஓ பின் ஔ என்றும்
தமிழ் இலக்கணங்களில் வைக்கப்பட்டுள்ளது.
அது வடமொழிச் சார்பைக் காட்டிநிற்கும்.