From arull@... Sat Mar 09 18:59:09 2002
Return-Path:
X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 10 Mar 2002 02:59:09 -0000
Received: (qmail 89301 invoked from network); 10 Mar 2002 02:57:20 -0000
Received: from unknown (216.115.97.167) by m3.grp.snv.yahoo.com with QMQP; 10 Mar 2002 02:57:20 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 10 Mar 2002 02:57:20 -0000
Received: from tm.net.my (sja-179-179.tm.net.my [202.188.179.179]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GSQ00IA1LJ8MO@...> for agathiyar@yahoogroups.com; Sun, 10 Mar 2002 10:57:09 +0800 (SGT)
Date: Sun, 10 Mar 2002 10:54:11 +0800
Subject: திருமுறைத் தியானம்
To: "agathiyar@yahoogroups.com"
Message-id: <3C8ACAD3.F1AA57B4@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார்
X-Yahoo-Group-Post: member; u=21400202
X-Yahoo-Message-Num: 16590

திருச்சிற்றம்பலம்

திருமுறைத்தியானம்

ஸ்ரீமடம் ஆஸ்தான வித்வான் புலவர்.
பு.மா.ஜய செந்தில்நாதன்

மார்ச்சு 10

திருஞானசம்பந்தர்

திருநெய்த்தானம்
(தில்லைஸ்தானம்)

நெய்யாடியப்பர் - பாலாம்பிகை

"நெய்த்தானத்து நெய்யாடியே போற்றி"

மையாடிய கண்டன் மலைமகள் பாகமதுடையான்
கையாடிய கேடில் கரியுரி மூடிய ஒருவன்
செய்யாடிய குவளைம் மலர் நயனத்தவளோடும்
நெய்யாடிய பெருமானிட(ம்) நெய்த்தானம் எனீரே.

மனமே! நீலகண்டனும், இமவான் மகளான
பார்வதியைத் தன்னுடம்பில் இடப்பாகத்தே ஏற்றிருப்பவரும்,
வளைத்த துதிக்கையை உடைய யானையின் தோலை ஆடை
யாகப் போர்த்திக் கொண்டிருப்பவரும், தனக்கு ஒப்பில்லாத
வருமாகிய இறைவன் நெய்யாடியப்பர்,

தன் தேவி பாலாம்பிகையுடன் கூடி எழுந்தருளியுள்ள
இடம் யாது? என நினைப்போர்க்கு, அதுவே நெய்த்தானம்
என்னும் தலமாகும் என்று சொல்லி மகிழ்வாயாக!

திருச்சிற்றம்பலம்

ஓதுவார்
பினாங்கு.