From arull@... Sat Mar 09 18:59:13 2002
Return-Path:
X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 10 Mar 2002 02:59:13 -0000
Received: (qmail 8820 invoked from network); 10 Mar 2002 02:57:27 -0000
Received: from unknown (216.115.97.171) by m10.grp.snv.yahoo.com with QMQP; 10 Mar 2002 02:57:27 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 10 Mar 2002 02:57:27 -0000
Received: from tm.net.my (sja-179-179.tm.net.my [202.188.179.179]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GSQ003L9LJ35I@...> for agathiyar@yahoogroups.com; Sun, 10 Mar 2002 10:57:04 +0800 (SGT)
Date: Sun, 10 Mar 2002 10:54:04 +0800
Subject: திருமுறைத் தியானம்
To: "agathiyar@yahoogroups.com"
Message-id: <3C8ACACC.FF8BCCAD@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார்
X-Yahoo-Group-Post: member; u=21400202
X-Yahoo-Message-Num: 16591

திருச்சிற்றம்பலம்

திருமுறைத்தியானம்

ஸ்ரீமடம் ஆஸ்தான வித்வான் புலவர்.
பு.மா.ஜய செந்தில்நாதன்

மார்ச்சு 9

சுந்தரர்

திருவையாறு

பஞ்சநதீஸ்வரர் - தர்மசம்வர்த்தினி

"செம்பொற்சோதி சேவடி போற்றி"

பரவும்பரிசொன்று அறியேனான் பண்டே உம்மைப் பயிலாதேன்
இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினைய மாட்டேனான்
கரவிலருவி கமுகுண்ணத் தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை
அரவந் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறுடைய அடிகளோ.

தென்னங்குலைகள் செழித்து விளங்க, கரும்பாலைகளின்
இரைச்சல் எங்கும் பரவ, அலைகள் திரளக் காவிரி பாயும்
திருவையாற்றுத் தலத்தில் எழுந்தருளியுள்ள அடிகளே! அமரர்
தலைவனே! பாடிவழிபடும் தன்மையறியேன்; அறிவால் அறிந்து
பண்டு தொட்டுப் பயிலாதேன் யான்; இரவும் பகலும் நினைந்தாலும்
அறிவுக் குறைபாட்டால் உன்னருள் பெற நினைந்தறியேன். அலந்து
நிற்கும் அடியவனை நின்மலனே! நீயே இரங்கி, ஆட்கொள்வாயாக!

முத்திபெறச் சித்தம் வை முதல்வா!

அத்தா! உனையன்றி ஆதரவு ஏதுமிலேன்.

திருச்சிற்றம்பலம்

ஓதுவார்
பினாங்கு.