From perichandra@... Sat Mar 09 19:21:35 2002
Return-Path:
X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 10 Mar 2002 03:21:34 -0000
Received: (qmail 95255 invoked from network); 10 Mar 2002 03:21:34 -0000
Received: from unknown (216.115.97.171) by m12.grp.snv.yahoo.com with QMQP; 10 Mar 2002 03:21:34 -0000
Received: from unknown (HELO n28.groups.yahoo.com) (216.115.96.78) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 10 Mar 2002 03:21:34 -0000
Received: from [216.115.96.135] by n28.groups.yahoo.com with NNFMP; 10 Mar 2002 03:21:33 -0000
Date: Sun, 10 Mar 2002 03:21:31 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: anmeekam in tamil ..
Message-ID:
In-Reply-To: <007701c1c7d1$c8d0bd60$c9b1d943@hppav>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2409
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra"
X-Originating-IP: 66.56.78.233
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 16592

--- In agathiyar@y..., "Vidya" wrote:
> >>In agathiyar@y..., "naga_ganesan" wrote:
>
> சென்னைக்கருகே (தற்காலம் ஆந்திரா) குடிமல்லம் இலிங்கம்
> 2-1 நூற். கி. மு.சைவ தத்துவம் முழுக்க காஷ்மீரம் என்று சொல்லமுடியாது.
> உதாரணமாக, நடராஜ தத்துவம். இது காஷ்மீர சைவத்தில் இல்லை.
> இன்னும் சொல்லப்போனால், நடராஜர் என்ற பேரே காஷ்மீர சைவத்தில்
> காணோம் என்கின்றார்கள்இன்னும் விரிவாக ஆராயப்படணும்.
> வடநாட்டு ஆகமங்கள் விரிவாக எழுதப்பட்டதும், பேணப்பட்டதும்
> தமிழ் சிவாச்சாரியர்களால்தான்>>>
> சுவாரசியமான தகவலுக்கு நன்றி.
>
> சிவாசாரியார்கள் பற்றி ஒரு துணைக் கேள்வி ...
> [ திருவிளையாடல் தருமி போல எனக்கு கேள்வி கேட்டுத் தான் பழக்கம் :) ]
>
> அவர்கள் எல்லாருமே கௌட மற்றும் கங்கைக் கரையிலிருந்து
> குடி பெயர்ந்தவர்களா?
> சிவாசாரியார்கள் அனைவரும் வட நாட்டிலிருந்து வந்தார்கள் என்பது நம்ப
>முடியவில்லை.

முதலில் நாம் சிந்திக்கவேண்டியது தமிழர்கள் தமிழகத்தில் மட்டும் இல்லை, பழைய
பரதகண்டத்தில். நாவலந்தீவு முழுதும் வாழ்ந்து பின்னர் சுருங்கித் தமிழகத்தில் நின்றனர்.
கங்கைக் கரையினின்று பெயர்ந்தனர் என்பது உண்மையென்று கொண்டாலும் அங்கே தமிழர்களாய்
இல்லை என்று சொல்லமுடியாது. புறநானூறு 201-ஆம் பாட்டில் இருங்கோவேளிர் முன்னோர்
அவனுக்கும் 49 தலைமுறை (~= 1200 ஆண்டுகள்) முன்னர் துவாரகையை ஆண்டதாகக்
குறிப்பதாக அறிஞர்களுள் ஒருசாரார் கருதுகின்றனர்.



> சம்பந்தர் போன்றோரின் முன்னோர் தமிழ் நாட்டவர் குண்டினி நகரத்தினின்று வந்தவர்
>என்று படித்திருக்கிறேன்?

குண்டினி என்பது கமண்டலம் அல்லது குடம்.
சுடலௌமுத்துப் பழனியப்பன் சிந்துவெளியில் இருந்த குயவர் வகைப் பூசாரிஅறிஞர்கள் பின்னர்
வேதகாலத்தில் பிராமணர்கள் என்ற வகையில் புகுந்ததாகச் சொல்வார்.
இலிவெர்பூல் இந்தாலசி மின்னஞ்சற் கிடங்கில் "Potters, Priests and Brahmins"
என்ற தலைப்பில் உள்ள திரிகளைத் தேடி வாசிக்கவும்.
அவ்வாறே பிருகு, கச்யப கோத்திரங்களும் இருந்ததாகச் சொல்வார்.


>
> அவ்வளவு சீக்கிரம் எப்படி மொழிப்புலமை வரும்?

சம்பந்தர் வகையறா மக்கள் மிகப்பழைய செந்தமிழ்க்குடிகள்.
அவர் சடங்குக்காகத் தம்பதிகத்தின் ஈற்றுப் பாட்டில் தமிழ்ஞானசம்பந்தன் என்று முத்திரைகுத்திக்
கொள்ளவில்லை.
அவருடைய கோத்திரவரலாற்றை ஆராய்ந்தால் தமிழர் வரலாறு கிட்டும்.

> Vidya

அன்புடன்
பெ.சந்திரசேகரன்

>
>
> [Non-text portions of this message have been removed]