From naga ganesan@... Sun Mar 10 12:53:51 2002
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 10 Mar 2002 20:53:50 -0000
Received: (qmail 59664 invoked from network); 10 Mar 2002 20:53:50 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 10 Mar 2002 20:53:50 -0000
Received: from unknown (HELO n35.groups.yahoo.com) (216.115.96.85) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 10 Mar 2002 20:53:50 -0000
Received: from [216.115.96.135] by n35.groups.yahoo.com with NNFMP; 10 Mar 2002 20:53:50 -0000
Date: Sun, 10 Mar 2002 20:53:49 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: kiL-/kezh- "(dark)green/black"
Message-ID: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 6705
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 209.144.226.145
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16602
In CTamil@y..., Jean-Luc Chevillard wrote:
>...
> >
> > The only word which is probably connected to kiLa-ttal
> > and which has cognates in other languages is kiLi, kiLLai ("parrot")
> >
>
NG gave the DED entry:> DED 1318 Ta. kiLi, kiLLai parrot. Ma. kiLi, Ko. kily vaky
> Kannada giLi, giNi, Kod giNi, Tu. giLi, giNi,
> Telugu ciluka, Pa. kil (pl. kilkul). Ga (S.) kilin (pl. kilkil).
>
> --- In CTamil@y..., "perichandra" wrote:
>I have had a feeling after examining >other words that the Dravidian
>for parrot may be derived from a >homophonic root with the sense of
>greenness.
எனக்கும் இது சரியெனவே தோன்றுகிறது.
கெழ்-/கெண்டை/கேழ்(>சேல்) என்ற சொற்களை
ஆராய்கையில், கிள்-/கெள்-/கெழ்- என்பதன்
அடிப்படை கரும்பச்சை/கருப்பு என்றிருக்க
வேண்டும் என்றே கருத இடம் இருக்கிறது.
இந்த அவையின் அங்கம் வகிப்பார் தத்தம்
கருத்துகளை இதில் அளித்து சரிதானா என்று
பார்க்க வேண்டுகிறேன்.
அடிப்படையான நிறப் பெயர்களில் கிள்-/கெழ்-
என்பது (கரும்)பச்சை/கருமையைச் சுட்டுகிறது.
கருப்புக்கு பச்சை என்றும் இந்து சமயக்கடவுளுக்கும் வருவது ஓர்க. கரிய மால்
பச்சை மால், பச்சைப் பசுங்கொண்டல் பைந்தமிழின் பின்சென்றார் என்பார் குமரகுருபரர். மால் பச்சை நிறம்
என்று ஜைமினீய-க்ருஹ்யசூத்திரம் சொல்கிறது. சியாமளா என்பது கருப்பாயி
தானே. மீனாட்சி பச்சை வண்ணத்தில் சித்தரிக்கப்படுகிறாள். காமன் மால்மகன்,
அவனும் கருப்பு வண்ணன். மதனைப் "பச்சை" என்றுதான் பரிபாடல் சொல்லும்.
கிள்-/கெழ்- என்று தொடங்கும் சொற்களில்
(கரும்)பச்சை/கருமை பற்றி வரும் சொற்களில்
சில காண்போம். யாழ்ப்பாணத்து அகராதியும்,
கொலோன் வலையகராதியும் துணை. சின்னாட்களில் மெட்ராஸ் தமிழ் லெக்சிகனும்
பார்த்திடலாம்.
கிள்ளை = கருங்கிளி, கிளி, பத்திரிசாதி
(பத்திரி (வடசொல்) = இலை)
கிளி = ஒருமீன், கிள்ளை, வெட்டு-க்-கிளி
(grass hopper)
கிளிமீன் = a green sea fish (OTL)
கிளிச்சல் = a seafish bluish green (OTL)
கிளிஞ்சான் = கிளிமீன் = கரும்பச்சை நிற மீன்
கிள்ளிக்கள் = wing-shell, a molluse
கிளிஞ்சில் = bivalve missel or shell
கிளுவை = பாச்சை/பாச்சில், கள்ளி (நிறம்=பச்சை, common hedgeplant)
[கடா/கிடா, களா/கிளா மாதிரி
கிள்ளி என்பது கள்ளி என்று வழங்குகிறதா?]
கிளாச்சி = ஒரு புல்
கிள்ளாக்கு = பனையோலை நறுக்கு
கிளாத்தி/கிழாத்தி = a sea-fish rich brown
கிளாய் = எள்ளின் காய் (pods of sesamum)
கிளை = மூங்கில், புல்லாங்குழல்
கிழவி = முருங்கை, முருங்கைமரம்
கிழாலை = களர் மண்
கிறாய் = பச்சை நிறக் களிமண்
கெளிறு/கெழுத்தி = a fresh water fish (bluish brown)
கிழக்கன் = ஒருவகை மீன் (கருமை/பச்சை)
-ள்-/-ழ்- > -ர்- க மாறுவதும் உண்டு
(காளி/காரி, குளம்பு/குரம், நாளணன்/நாரணன் > வடமொழியில் நாராயணன், ...)
மணி கேழ் அன்ன மாநீர் சேர்ப்ப
(குறு. 49)
மணி - கருநீல நிறம்.
மணிவண்ணன் (கருநீல மால்) பாம்புப் பள்ளி (சிலம்பு)
கேழ் இரும் துறுகல் -புறம்
ஒள் கேழ் வய புலி பாய்ந்தென்ன -மலை. 309
(இருளில் ஒளிவிடும் புலி என்பதா?
கருஞ் சிறுத்தையைக் குறிக்கிறதா?
(black panthers))
தமிழனின் மார்வ நிறத்தை,
கேழ் கிளர் அகலம் - அக. 26:4
தமிழியின் நகில் வண்ணம்:
ஒள் கேழ் வன முலை பொலிந்த - அக. 61:17
நுணங்கிய நுசுப்பின் நுண் கேழ் மாமை அக. 319:7 (மா = கருமை, மாமை =கரு நிறம்)
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை
- அக. 332:2
அரவின் மணி சுடர் விடுங் கருப்பு:
ஏழ் மணி அம் கேழ் அணி உத்தி
கண் கேள்வி கவை நாவின்
நிறன் உற்ற அராஅ போலும் -புறம்
கேழ் கிளை உத்தி அரவு தலை பனிப்ப -நற். 129:7
பசுங் கேழ் நறும் கொடி தமாலம் -நற்.
நாள் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு பொருத யானை - நற். 279
(இருளில் சுரம்வாழ் புலியின்
கரிய வரிகள் வாள்போல மின்ன.
தென்னாட்டிலிருந்துதான் எஃகு வாள்கள்
உலகெங்கும் பரவின. உருக்கு/உக்கு
என்பதே Wutz steel. மத்திய கிழக்குக்கு
தென்னாட்டிலிருந்து போன வாள் கருநிறம்.
இந்திய வாள்கள் பற்றிப் பேசும் நூல்கள்
யாவும் அதன் ஒண்கருமை பற்றிச் சொல்லும்.
இதனை என்று Damascus steel வெள்ளையர் குறித்தனர்)
மின்னுவது. புலியின் ஒளிர் கரும்பட்டையை
வாளொடு நற்றிணை ஒப்பிட்டது காண்க.)
------------------
எள்ளு - சொன்மூலம்
இதுவரை, நாம் கிள்-கிர்-கிழ்-கெழ்-கேழ்
போன்றன ஒளிர்விடும் பச்சை/கருப்பு
நிறங்குறித்தன என்று சொற்களாலும்,
இலக்கிய ஆளுமைகளாலும் பார்த்தோம்.
கிளாய் என்பது எள்ளின் காய், அதனுள்
முதலில் பச்சையாய் இருந்து கருமைக்கு
மாறுவது எள். முதலில் இது
*கெள்ளு என்பதாகப் பேர் இருந்து பசுமை/கருமையைக் குறித்திருக்கும்.
பின் க்- சொன்முதலில் கெட்டு எள்ளு
ஆனது. சுமேரியாவில் அக்கடிய மொழியிலும் எல்லு என்று வழங்குவதால்
இது சிந்து நதிக்கரையில் பயிராகி அங்குப் போனதாகலாம்.
*கெள்ளு > செல்லு/தில்லகம் என்று
எள்ளுக்கு வடமொழியில் ஆனது.
(கிள்ளை சிலுக என்று தெலுங்கில் வழங்கல்போல)
தில்லகம், திலம் என்றும் வழங்கும்
(செல்லு> தில்ல, (ஒப்பு: சோகை > தோகை).
முதலில் நல்எண்ணெயில் கண்ணேறு கழிக்க
பயன்பட்டது திலகம் (பொட்டு).
இது போலவே, கணக்கில் பூஜ்யத்துக்கு
எண்களின் மேல் புள்ளி இட்டும்,
இயல்பாக மெய்யெழுத்தில் இருக்கும்
அகரத்தை அழிக்கவும் புள்ளியை தொல்காப்பியரும், தகுதரமும் பயன்படுத்துகிறது.
http://groups.yahoo.com/group/CTamil/message/311
டுமகளிர் கண்ணுளர் என்று சாந்திக்கூத்தாடிய பின்னர் எள் எண்ணய்
பெற்றமை சங்க இலக்கியத்தில் காண்கிறோம்.
http://groups.yahoo.com/group/agathiyar/message/16391
நல்லெண்ணெய் என்பதில் நல் < நள் (கருமை). இருளுக்குத் தமிழில் அல்
என்கிறோம். இது அல் < நல் < நள் (கருமை) என்ற சொல்லே. DED அல்
என்பதை நல்லம் என்ற சொல்லுடன் இணைக்கிறது. நல்லம் என்பதன் பொருள்
"கருப்பு, மங்கல்" என்பது யாழ்ப்பாண
அகராதி. கருப்பான நல்லமலையில்உருவாகும் நதி கிருஷ்ணா!
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind9904&L=indology&P=R1411
அன்புடன்,
நா. கணேசன்
பி. கு.: நண்டு என்று ஏன் பெயர்.
நண்டுக்கு அலவன் என்ற பெயர்
இருளில் உலவுவதாலா? அல்லது கருப்பு
நிறத்தாலா? கருப்பு நிறம் தான் அலவன்
என்றால், நண்டு (> நள்- `கருமை') எனலாம்.
னால், ஞெண்டு தான் நண்டு என்றால்
ஞெண்டு என்ற சொற்பொருள் யாது?
அறிந்தோர் விளக்கவும்