From arull@... Sun Mar 10 16:43:15 2002
Return-Path:
X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 11 Mar 2002 00:43:14 -0000
Received: (qmail 28001 invoked from network); 11 Mar 2002 00:43:12 -0000
Received: from unknown (216.115.97.171) by m6.grp.snv.yahoo.com with QMQP; 11 Mar 2002 00:43:12 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 11 Mar 2002 00:43:12 -0000
Received: from tm.net.my (sja-179-71.tm.net.my [202.188.179.71]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GSS00A3S9ZY7V@...> for agathiyar@yahoogroups.com; Mon, 11 Mar 2002 08:43:11 +0800 (SGT)
Date: Mon, 11 Mar 2002 08:40:10 +0800
Subject: திருமுறைத் தியானம்
To: "agathiyar@yahoogroups.com"
Message-id: <3C8BFCEA.68C904F4@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார்
X-Yahoo-Group-Post: member; u=21400202
X-Yahoo-Message-Num: 16606

திருச்சிற்றம்பலம்

திருமுறைத்தியானம்

ஸ்ரீமடம் ஆஸ்தான வித்வான் புலவர்.
பு.மா.ஜய செந்தில்நாதன்

மார்ச்சு 11

திருநாவுக்கரசர்

திருநெய்த்தானம்

நெய்யாடியப்பர் - பாலாம்பிகை

"நெய்த்தானமேவிய நீலகண்டா போற்றி"

காலனை வீழச்செற்ற கழலடி இரண்டும் வந்தென்
மேலவாயிருக்கப் பெற்றேன் மேதகத் தோன்றுகின்ற
கோலநெய்த்தானம் என்னும் குளிர்பொழில் கோயில் மேய
நீலம் வைத்தனைய கண்ட! நினைக்குமா நினைக்கின்றேனே.

குளிர்ந்த சோலைகள் சூழ்ந்து மேன்மையாகக்
காட்சிதரும் திருநெய்த்தானத் தலத்தில் அமர்ந்தருளும்
நீலகண்டனே!

உன் அடியவனான மார்க்கண்டேயருக்குத் தீங்கு
செய்த எமனை உதைத்து வீழ்த்திய உன் ஒப்பற்ற இரு
மலரடிகளும் என்னுள்ளத்தைப் பொருந்தப் பெற்றேனாதலின்,
அறிவு விளக்கமுற்று உன் அருமையுணர்ந்து அன்போடு
வழிபடும் தன்மையடையப் பெற்றேன்.

மறவாது என்றும் உன்னை மனத்தகத்திருத்தி, நின்றும்,
இருந்தும், கிடந்தும், நடந்தும் உன்னையே நினைந்து
போற்றுகின்றேன்.

நெய்த்தானத்து நினைவே போற்றி.

திருச்சிற்றம்பலம்

ஓதுவார்
பினாங்கு.