From jaybee@... Mon Mar 11 09:44:42 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 11 Mar 2002 17:44:41 -0000
Received: (qmail 2775 invoked from network); 11 Mar 2002 17:41:30 -0000
Received: from unknown (216.115.97.172) by m3.grp.snv.yahoo.com with QMQP; 11 Mar 2002 17:41:30 -0000
Received: from unknown (HELO n15.groups.yahoo.com) (216.115.96.65) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 11 Mar 2002 17:41:30 -0000
Received: from [216.115.96.49] by n15.groups.yahoo.com with NNFMP; 11 Mar 2002 14:58:09 -0000
Date: Mon, 11 Mar 2002 14:58:57 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: ThirumuRai Series - 69
Message-ID:
In-Reply-To: <20020311111734.70555.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2303
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "jaybee555"
X-Originating-IP: 203.121.57.217
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16621

At 03:17 AM 3/11/02 -0800, Shaboo wrote:
>
>
>> தமிழில் பையாஸ்கோப்பு, சினிமா ஆகியவை நேரடியாகவும்,
>> திரைப்படம், வெள்ளித்திரை ஆகியவை மொழிபெயர்ப்பாகவும்
>> வந்துவிட்டன. டாக்கீஸ் என்பது திரை அரங்கைக் குறிப்பதாயிற்று.
>
>நான் பெரும்பாலும் திரைப்படங்கள் பார்த்த திரையரங்கின் பெயர் கமால்
>டுரிங் டாக்கீஸ் ( கமால் பிரதர்சுக்கு சொந்தமானது), தான் அதென்ன
>டுரிங் டாக்கீஸ் (touring talkies) சர்க்கஸ் மாதிரி ஊர் ஊராக
>போய் படம் காட்டுவார்களா ?


டூரிங்க் டாக்கீஸ் என்பவை நீங்கள் சொன்னதுபோலவே
ஊர் ஊராகச் செல்பவைதாம்.
தென்னங்கீற்றுக் கிடுகுகளையும் மூங்கிலையும் வைத்துக்
பெரிய கொட்டகையைக் கட்டி, அதில் வைத்துப் படம் காட்டுவார்கள்.
பெரும்பாலும் கீற்றுக்கொட்டகைகள்தாம் அதிகமாக இருந்தன.
சிலர், 'டெண்டுக்கொட்டாய்' எனப்படும் ரெட்டுப் படுதாக்களால்
செய்யப்பட்ட கொட்டகைகளில் படம் காட்டுவார்கள்.
கீற்றுக்கொட்டகைகள், புகைத்துப்போடப்படும் பீடித்துண்டுகளால்
தீப்பிடிப்பது சகஜம்.
டூரிங்க் டாக்கீஸுகள் ஓரிடத்தில் ஆறு மாதங்களுக்கு
லைசென்ஸ் வாங்கிப் படம் காட்டுவார்கள். சில டூரிங்க் கொட்டகைகள்
லைசென்ஸை நீட்டித்துக்கொண்டு ஆண்டுக்கணக்கில் ஒரே இடத்தில்
இருப்பார்கள்.
டூரிங்க் டாக்கீஸில் தரை டிக்கெட், பெஞ்சி(bench), சேர்
(chair) ஆகிய பிரிவுகள் இருக்கும். யாராவது லோக்கல் பெரிய
மனுசாள் வந்துவிட்டால், அவர்களுக்கென சோஃபா போட்டுவைப்பார்கள்.
ஜோடா-கலர், கைமுறுக்கு, மிக்ஸர், கமர்கட்டு மிட்டாய்,
போன்றவை மாமூலானவை.
அவை இல்லாவிட்டால் டூரிங்க் டாக்கீஸில் படம் பார்ப்பது
நிறக்காது.




அத்தோடு இந்த கேவா கலர், ஈஸ்டமென் கலர்,
>டெக்னிக்கலர் சமாச்சாரங்களையும் சொல்லுங்களேன். அலிபாபாவும் நாற்பது
>திருடர்களும் கேவா கலர் படம் என்று விளம்பரம் செய்வார்கள்.


இவை எல்லாமே எவ்வேறு technique-களைக் குறிப்பவை.
Sepia என்ற கலரும் இருந்தது. இது ஒரு monochrome technique.
ஒரே வண்ணம்தான். கொஞ்சம் காப்பிக்கலராக இருக்கும்.

அன்புடன்

ஜெயபாரதி

>
>இதை விட அருமையன கலர் ஒன்று உள்ளது. எங்களுர் டுரிங் டாக்கிசில்
>மொத்தம் 4 இடைவேளை விடுவார்கள். முதல் பகுதியில் புரொஜெக்டரிலிருந்து
>திரைக்குப் போகும் வழியில் நீலக்கலர் தாளை வைத்து விடுவார்கள். படம்
>முழுவதும் நீலமாக இருக்கும். அடுத்த இடைவேளையின் போது அதுவே மஞ்சளாக
>மாறி விடும். இப்படி நான்கு கலர்களில் படம் பார்ப்போம்.
>
>
>
>=====
>அன்புடன்
>
>சாபு
>துபாய்