From anbudan ananth@... Mon Mar 11 19:36:54 2002
Return-Path: X-Sender: anbudan ananth@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 12 Mar 2002 03:36:54 -0000
Received: (qmail 44435 invoked from network); 12 Mar 2002 03:36:54 -0000
Received: from unknown (216.115.97.172) by m6.grp.snv.yahoo.com with QMQP; 12 Mar 2002 03:36:54 -0000
Received: from unknown (HELO n21.groups.yahoo.com) (216.115.96.71) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 12 Mar 2002 03:36:53 -0000
Received: from [216.115.96.157] by n21.groups.yahoo.com with NNFMP; 12 Mar 2002 03:19:32 -0000
Date: Tue, 12 Mar 2002 03:36:51 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Siva Rathri
Message-ID: In-Reply-To: <5.1.0.14.0.20020311160304.009f13b0@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2243
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "anbudan ananth" X-Originating-IP: 64.228.131.33
X-Yahoo-Group-Post: member; u=35116172
X-Yahoo-Profile: anbudan ananth
X-Yahoo-Message-Num: 16626
திருமூலரின் திருமந்திரத்திரத்திலிருந்து ஒரு பாடலும் அதற்குச் சைவசித்தாந்தக் கழகப் புலவர்
திரு ப. இராமநாத பிள்ளையவர்கள் தந்த பொருள் விளக்கத்தின் சுருக்கமும்:
திருச்சிற்றம்பலம்
சித்தந் திரிந்து சிவமய மாகியே
முத்தந் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தில் திருநடத் தோரே
பொருள் விளக்கம்: எண்ணமாகிய சித்தம் புலன்களாகிய சுவை, ஒளி, ஊறு, ஓசை,
நாற்றங்களிற் பற்றாமல், சிவத்தின்பால் பற்றுமேல் அது சிவமயமாகும்.
இங்ஙனம் அமைவதற்கு எண்மையும் திண்மையும் உண்மையும் ஆயவழி திருவுருவ
வழிபாடேயாம். அத்திருவுருவ வழிபாட்டினுள்ளும் அம்பலவாணர் வழிபாடே ஐம்புல
நுகர்வுக்குப் பெரிதுமொத்த திருக்குறிப்போடு பொருந்தியதாம். வலது திருக்கையிலுள்ள
உடுக்கை ஆகாயத்தையும், அண்டத்தைப் படைக்கும் தொழிலையும், வலப்பக்கம் பூமி
நோக்கி வளைந்த அமைவுத் திருக்கை காற்றையும், காக்கும் தொழிலையும்,
இடக்கையொன்றில் தாங்கும் அங்கி (நெருப்பு) தீயையும், துடைக்கும் தொழிலையும்,
ஊன்றிய வலப்பால் திருவடி மண்ணையும், மறைத்தல் தொழிலையும்,
தூக்கிய திருவடி நீரையும், அருளும் தொழிலையும் காட்டி ஐம்பூதங்களையும்
(அவற்றோடிணைந்த பொறிகளையும்) ஐந்தொழில்களையும்
புலப்படுத்தும் திருவுருவம் சிற்றம்பலத்தில் உள்ள ஆடலரசனின் வடிவம். இதனை
உணர்ந்து செம்பு பொன்னாவதுபோல மேனிலை எய்திய உள்ளத்தார் திருவருளால் தி
ருவடிப்பேறு தெரிந்து பொருந்திய மோனத்தவராவர். அவரே சிவப்பேற்றினராவர்.
அவரே ஐம்மலத் தொடக்கற்ற செம்பொருள் துணிவினராவர். சித்தம் திருநடம்புரியும்
செம்பொருளில் சேர்ந்தோராவர்.
--- In agathiyar@y..., "S. Thiru" wrote:
> வணக்கம்
>
> At 09:34 AM 3/11/02, you wrote:
> >At 01:29 PM 3/11/02 +0000, you wrote:
> >
> > >
> > >There is another PANCHANGAM specially made for UK According to
that
> > >SIVARATHIRI is Today 11 Mon night. and for Srilankans in Canada
> >tommorrow ie 12th.
>
> இவ்விடம் - கனடா இன்றுத்தான் ( 11 திகதி)
> அனுஸ்டிக்கின்றோம்
>
> அன்புடன்
> திரு
>
>
>
> http://lthiru.8m.com
>
>
> _________________________________________________________
> Do You Yahoo!?
> Get your free @yahoo.com address at http://mail.yahoo.com