From arull@... Mon Mar 11 19:55:52 2002
Return-Path:
X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 12 Mar 2002 03:55:51 -0000
Received: (qmail 59658 invoked from network); 12 Mar 2002 03:55:51 -0000
Received: from unknown (216.115.97.172) by m11.grp.snv.yahoo.com with QMQP; 12 Mar 2002 03:55:51 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 12 Mar 2002 03:55:51 -0000
Received: from tm.net.my (kmr-188-138.tm.net.my [202.188.188.138]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GSU00GFEDL19I@...> for agathiyar@yahoogroups.com; Tue, 12 Mar 2002 11:55:50 +0800 (SGT)
Date: Tue, 12 Mar 2002 11:52:45 +0800
Subject: திருமுறைத் தியானம்
To: "agathiyar@yahoogroups.com"
Message-id: <3C8D7B8D.AF43DBC@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார்
X-Yahoo-Group-Post: member; u=21400202
X-Yahoo-Message-Num: 16627

திருச்சிற்றம்பலம்

திருமுறைத்தியானம்

ஸ்ரீமடம் ஆஸ்தான வித்வான் புலவர்.
பு.மா.ஜய செந்தில்நாதன்

மார்ச்சு 12

திருஞானசம்பந்தர்

பெரும்புலியூர்

வியாக்ரபுரீஸ்வரர் - சௌந்தரநாயகி

"பெரும்புலியூர்ப் பெருமானே போற்றி"

(புலிக்கால் முனிவர் பூசித்த காரணத்தால் இத்தலத்திற்கு
இப்பெயர் வந்தது.)

மண்ணுமோர் பாகமுடையார் மாலும் ஓர் பாகமுடையார்
விண்ணுமோர் பாகமுடையார் வேதமுடைய விமலர்
கண்ணுமோர் பாகமுடையார் கங்கை சடையிற் கரந்தார்
பெண்ணுமோர் பாகமுடையார் பெரும்புலியூர் பிரியாரே.

பரம்பொருளை வழிபடும் பெருமையுடைய நெஞ்சே!
மண்ணும் விண்ணும் பாகமுடைய பிரான், வேதமருளிய
விமலர், நெற்றிக் கண்ணுடைய நின்மலன், கங்கையைச்
சடையில் தாங்கிக் காட்சிதரும் பரமர், பெண்ணொடு
ஆணாகிய பெரும்புலியூர் அண்ணல் பிரியாது உறைகின்ற
தலமான புலியூரைத் தொழுது வாழ்வோம்.

பெரும்புலியூர் வாழ் பிரானடி பேணி

அரும்பெருஞ் செல்வம், ஆனந்தம் பெறுவோம்.

திருச்சிற்றம்பலம்

ஓதுவார்
பினாங்கு.