From arull@... Tue Mar 12 16:55:24 2002
Return-Path:
X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 13 Mar 2002 00:55:22 -0000
Received: (qmail 54917 invoked from network); 13 Mar 2002 00:55:19 -0000
Received: from unknown (216.115.97.172) by m10.grp.snv.yahoo.com with QMQP; 13 Mar 2002 00:55:19 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 13 Mar 2002 00:55:19 -0000
Received: from tm.net.my (kmr-211-59.tm.net.my [203.106.211.59]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GSV0009VZW48V@...> for agathiyar@yahoogroups.com; Wed, 13 Mar 2002 08:55:18 +0800 (SGT)
Date: Wed, 13 Mar 2002 08:52:12 +0800
Subject: திருமுறைத் தியானம்
To: "agathiyar@yahoogroups.com"
Message-id: <3C8EA2BC.3B914E57@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார்
X-Yahoo-Group-Post: member; u=21400202
X-Yahoo-Message-Num: 16637

திருச்சிற்றம்பலம்

திருமுறைத்தியானம்

ஸ்ரீமடம் ஆஸ்தான வித்வான் புலவர்.
பு.மா.ஜய செந்தில்நாதன்

மார்ச்சு 13

திருஞானசம்பந்தர்

திருமழபாடி

வச்சிரதம்பேஸ்வரர் - சுந்தராம்பிகை

"மழபாடிவயிரத்தூணே போற்றி"

உரங்கெடுப்பவன் உம்பர்களாயவர் தங்களைப்
பரங்கெடுப்பவன் நஞ்சையுண்டு பகலோன்தனை
முரண்கெடுப்பவன் முப்புரம் தீஎழச் செற்றுமுன்
வரம்கொடுப்பவன் மாமழபாடியுள் வள்ளலே.

மன்னே மாமணியே! மழபாடி வள்ளலே! உன்னை
மதியாது அடர்த்தெழுந்தோரின் வலிமையை அழித்து,
செருக்குற்ற தேவர்களின் மேன்மையைக் குறைத்து,
அவர்களை வாழ வைக்குங் கருணையால் கொடிய
நஞ்சையுண்டு நிலையாக இருந்து, பகைவர்களின்
முரண்பாடுகளைப் போக்கி, திரிபுராதிகளின் முப்புரத்தைத்
தன் புன்சிரிப்பால் தீயுண்ணச் செய்து, அவர்கள்
பிழையுணர்ந்து வேண்டியபோது, பொறுத்தருளி
வரம்பலவும் தந்து வாழ்வளித்து, வள்ளலாகத் திகழும்
வச்சிரதம்பேஸ்வரச் செல்வமே! மழபாடியிலிருந்து
இவ்வுலகத்தைக் காத்து வரும் பெருமையை அறிந்து
உன் சந்நிதி அடைந்து நிலமுறத் தாழ்ந்து உளமுருக
வணங்குகின்றேன்.

மழபாடிக்குழகனெ! மருந்தென நீ இருந்து

பிறவிப்பிணி போக்கிப் பேரின்பம் தந்திடுவாய்.

திருச்சிற்றம்பலம்

ஓதுவார்
பினாங்கு.